ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவதுண்டு. இந்த கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் பஜனை பாடல் ஐயப்பனை நினைத்து பக்தர்கள் பாடுவதுண்டு. அவை ஹரிவராசனம்,பகவான் சரணம்,லோக வீரம் மஹா பூஜ்யம்,வட்ட நல்ல வட்ட நல்ல பொட்டு வச்சு போன்ற பஜனை பாடல்களின் வரிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐயப்பன் பஜனை பாடல் | AYYAPPAN BAJANI PAADALGAL TAMIL

சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
எங்கே மணக்குது நெய்யும் எங்கே மணக்குது
வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது

திருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது
அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது
பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது

ஐயன் பேரழகைக் காண உள்ளம் ஆசை கொள்ளுது
காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது
எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது

ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்
நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்
ஓங்கார நாதத்திலே எழுந்து வருகிறான்

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

சாமி ஐயப்பா சாமி ஐயப்பா
சாமி ஐயப்பா

சுவாமியே…….. அய்யப்போ (ஐயப்பன் பஜனை பாடல்)

சுவாமியே…….. அய்யப்போ
அய்யப்போ….. சுவாமியே
சுவாமி சரணம்….. அய்யப்ப சரணம்
அய்யப்ப சரணம்…. சுவாமி சரணம்
தேவன் சரணம்….. தேவி சரணம்
தேவி சரணம்….. தேவன் சரணம்
ஈஸ்வரன் சரணம்…. ஈஸ்வரி சரணம்
ஈஸ்வரி சரணம்…. ஈஸ்வரன் சரணம்
பகவான் சரணம்…. பகவதி சரணம்
பகவதி சரணம்… பகவான் சரணம்
சங்கரன் சரணம்…. சங்கரி சரணம்
சங்கரி சரணம்…. சங்கரன் சரணம்
பள்ளிக்கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும்…காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை… கல்லும் முள்ளும்
குன்டும் குழியும்… கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம்… குன்டும் குழியும்
இருமுடிக்கட்டு…… சபரிமலைக்கு
சபரிமலைக்கு…. இருமுடிக்கட்டு
கட்டும் கட்டு…. சபரிமலைக்கு
சபரிமலைக்கு…… கட்டும் கட்டு
யாரை காண…. சுவாமியை காண
சுவாமியை கண்டால்… மோக்ஷம் கிட்டும்
எப்போ கிட்டும்… இப்போ கிட்டும்
தேக பலம் தா… பாத பலம் தா
பாத பலம் தா… தேக பலம் தா
ஆத்மா பலம் தா… மனோ பலம் தா
மனோ பலம் தா.. ஆத்மா பலம் தா
நெய் அபிஷேகம்…. சுவாமிக்கே
சுவாமிக்கே… நெய் அபிஷேகம்
பன்னீர் அபிஷேகம்….. சுவாமிக்கே
சுவாமிக்கே… பன்னீர் அபிஷேகம்
அவலும் மலரும்…… சுவாமிக்கே
சுவாமிக்கே… அவலும் மலரும்
சுவாமி பாதம்… ஐயப்பன் பாதம்
ஐயப்பன் பாதம்… சுவாமி பாதம்
தேவன் பாதம்… தேவி பாதம்
தேவி பாதம்… தேவன் பாதம்
ஈஸ்வரன் பாதம்… ஈஸ்வரி பாதம்
ஈஸ்வரி பாதம்… ஈஸ்வரன் பாதம்
சுவாமி திந்தக்க தோம் தோம்….. அய்யப்ப் திந்தக்க தோம் தோம்.

HARIVARASANAM | ஹரிவராசனம் பாடல் வரிகள் | AYAPPAN SONGS TAMIL | ஐயப்பன் பாடல்கள்

ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா..

வட்ட நல்ல பொட்டு வச்சு ஐயப்பன் பஜனை பாடல்

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனனே ஐயப்பா
உன்ன வந்து நாங்க பார்க்கப் போறோம் ஐயப்பா

எத்தனையோ மலை இருக்க அத்தனையும் தான் கடந்து
சபரிமலை ஆண்டவரே ஐயப்பா
சந்நியாசியை நின்றவரே மெய்யப்பா

உச்சி மலைதனிலே ஒய்யாரமாய் அமர்ந்தவரே(இருப்பவரே)
பச்சைமால் வடிவழகா ஐயப்பா
பரதேசியாய் நாங்க வாரோம் ஐயப்பா

கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவரே
ஐயப்பா தெய்வமான ஐயப்பா
காந்தமலை ஜோதியான மெய்யப்பா

எரிமேலி பேட்டைதுள்ளி பம்பையிலே தீர்த்தமாடி
நீலிமலை ஏற்றத்திலே ஐயப்பா
நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா
எங்களை நிக்க வச்சு சொக்க வைப்பாய் ஐயப்பா

வட்ட நல்ல பொட்டு வச்சு வடிவழகா இருப்பவரே
வன்புலி வாகனனே ஐயப்பா
உன்ன வந்து நாங்க பாக்கப் போறோம் ஐயப்பா

பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை பாடல் வரிகள் படிக்க

லோக வீரம் மஹா பூஜ்யம் ஐயப்பன் பஜனை பாடல் வரிகள்

 1. லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷõகரம் விபும்
  பார்வதி ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. விப்ர பூஜ்யம் விச்வ வந்த்யம் விஷ்ணு சம்போப்ரியம் ஸுதம்
  ஷிப்ர ப்ரசாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. மத்த மாதங்க கமனம் காருண்யாம் ருத பூரிதம்
  ஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. அஸ்மத் குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு வினாஸனம்
  அஸ்மத் இஷ்ட ப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. பாண்டியேச வம்ச திலகம் கேரள கேளி விக்ரஹம்
  ஆர்த்தத் ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் (சுவாமியே சரணம் ஐயப்பா)
 2. த்ரியம்பக புராதீசம் கணாதீப சமன் விதம்
  கஜாடுமஹம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. சில வீர்ய ச¬முத் பூதம் ஸ்ரீநிவாச தானூர்த் பவம்
  சிகியா ஹானுஜம் வந்தே சாஸ்தாரம் ப்ரணமாம் யஹம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. யஸ்த தன்வந்தரி மாதா பிதா தேவோ மஹேஸ்வரா
  தம் சாஸ்தார மஹம் வந்தே மஹா ரோக நிவாரணம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
  ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. ஆஸ்யாம கோமள விசாலுதனும் விசித்ரம்
  வயோவஸான மருணோத்பவ தாம ஹஸ்தம்

(சுவாமியே சரணம் ஐயப்பா)

 1. உத்தரங்கரத்தன மகுடம் குடிலாக்ர கேசம்
  சாஸ்தாரம் இஷ்ட வரதம் சரணம் ப்ரபதமே

(சுவாமியே சரணம் ஐயப்பா)…

KARTHIGAI ATHIKALAI NEERADI KADAVUL UN THIRUNAAMAM PERPAADI – K. J . YESUDAS AYYAPPA SONG TAMIL LYRICS

கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி

கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய

வேளையிலுன் தெய்வ சன்னதியில்

ஒருராக மாலையை திருவடி மீதினில்

படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்

சிறுகல் போல் நானும் பிறப்பேனோ

வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்

எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ (கார்த்திகை அதிகாலை).

ஐயப்பன் பஜனை பாடல் வரிகள் பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும்.