கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிப் பயணங்கள்
கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிப் பயணங்கள்:
கவின்கேர் : எப்பொழுதுமே புன்னகை மாறாத முகத்துடன் இருப்பதே கவின்கேர் நிர்வாக இயக்குநர் சி.கே.ரங்கநாதன் தன் தொழில் வெற்றிகளுக்கு போட்டிருக்கும் மூலதனமோ என்று பார்ப்பவர்கள் நினைக்கத் தோன்றும். தோன்றுவதென்ன? உண்மையும் அது தான். இதோடு கூடுதலாக அவருக்கிருந்த பல சிறப்புக் குணங்களும் உண்டு. அதைப்பற்றி அவரே தன்னுடைய சந்திப்புகளில் குறிப்பிடுவதும் உண்டு.
கவின்கேர் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்:
என்னுடைய வெற்றிகளுக்குக் காரணமே தன்னம்பிக்கைதான் . சுருக்கமாகச் சொன்னால் நம்பிக்கை. என் மேல் நானே வைத்த நம்பிக்கை, மற்றவர்கள் மேல் வைத்த நம்பிக்கை முக்கியமாக இந்த இரண்டு தான் என் தொழில் வெற்றிகளுக்கான அடிப்படை என்பார். ஷாம்பூ, முகப்பவுடர், ஃபர்பியூம் எனத் தொடங்கிய அவரின் தொழில் முனைவுகள் ஊறுகாய் என உயர்ந்து, நாம் பயன்படுத்துகிற பல தயாரிப்புகளாக விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. இன்று இந்திய அளவில் ஷாம்பு விற்பனையில் மூன்றாம் இடம், ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது சிக் க்ஷாம்பு. கடலூரில் தொடங்கி இவருடைய தொழில் பயணம் கடல் கடந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
ஆசிய நாடுகள் பலவற்றில் கூட கிளை அலுவலகங்கள் கவின்கேர் நிறுவனத்துக்கு உண்டு. இந்த அசாத்திய வெற்றியை ‘கவின்கேர்’ சி.கே. ரங்கநாதன் எப்படி சாதிக்க முடிந்தது? ஒருவர் வெற்றி பெறுவதற்கு ஆரம்பமாக இருப்பது திட்டமிடல். அதை நூறு சதவீதம் சரியாக சிந்திக்காமல் செயலில் இறங்குபவர்களே தொழிலில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள். இந்த உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டவர் சி.கே.ஆர். அதனால் தான் தன்னுடைய தொழிலின் முதல் மூலதனத்தை மூளையின் புத்திசாலித் தனத்தாலேயே திரட்டி தொழிலைத் தொடங்கியவர் அவர். இவர் தொழில் ஆரம்பித்த போது இவருடைய அலுவலகம் இருந்த இடத்தின் பரப்பு பத்துக்குப் பத்து அளவிலான ஒரு சிறு அறை, அலுவலக அறைகலன் (பர்னிச்சர்) ஒரு ஒற்றைப் பாய் மட்டுமே…. இந்த இடத்திலிருந்து இன்று அவர் ஏறிக் கொண்டே இருக்கிற சிகரங்களின் எண்ணிக்கை…. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மீரா, நைல், ஃபேர் எவர் என்று ஷாம்பு, காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு, பால் , அது சார் பொருட்கள் , கிரீன் டிரெண்ட் சிகை அலங்கார நிலையங்கள் என அணி வகுக்கின்றன. 16 விதமான தயாரிப்புகள் கிரீன் டிரெண்டுக்கென 400 கிளைகள் இப்படி அதன் விரிவான வளர்ச்சி தொடர்கிறது.
தொழில் பார்வைகள் :
அவருடைய துணைவியாரின் பெயர் தேன்மொழி. மகள்கள் அமுதா, தாரணீசுவரி. மகனின் பெயர் மனுரஞ்சித். மகன் படிப்பை முடித்ததும் தன்னுடன் வைத்து அவரின் சுதந்திரத்தைப் பறிக்க விரும்பாத சி.கே.ஆர் என்ன செய்தார் தெரியுமா? தனியாத தொழில் தொடங்கப் போகிறேன் என்ற மகனுக்கு சில லட் சங்களைக் கொடுத்தார் . சி . கே . பேக்கரி என் ற
நிறுவனத்தைத் தொடங்கிய மகனின் தொழில் பயணம் பலகிளைகளுடன் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய தொழில் முனைவு ஆர்வம் சி.கே. ஆருக்கு எப்படி ஏற்பட்ட தென்ற ஆர்வம் கேள்வியாக உங்களுக்கு எழுந்திருக்கலாம். எல்லாவற்றுக்கும் மூலகாரணம் அவருடைய தந்தை தான். வசதியான குடும்பத்தில் பிறந்த கணித ஆசிரியரான
அவர், ஒரு கட்டத்தில் வேலையையும் விட்டு, விட்டு ஆராய்ச்சியில் இறங்கியவர். அவருடைய தந்தையின் பெயரைச் சொல்வதற்கு முன் அவர் தயாரித்த ஷாம்புவின் பெயரைச் சொன்னால் சென்ற தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் நன்றாகப் புரிந்து விடும். ஆம், அவர் தயாரித்த அந்த பாக்கெட் ஷாம்புவின் பெயர் ‘வெல்வெட்’ ஷாம்பு. அன்றைய சந்தையில், மும்பை தயாரிப்பு ஷாம்புகள் பாட்டிலில் தான் கிடைத்து வந்தன. முக்கியமாக ஷாம்பு மேல்தட்டு மக்களின் பொருளாகக் கருதப்பட்ட காலமும் உண்டு.
எல்லோரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டுமானால் அது குறைந்த விலையில், குறைந்த அளவில் கிடைக்க வேண்டும். அப்படி யோசித்த அவருடைய தந்தை சின்னி கிருஷ்ணன், இந்திய அளவில் முதன் முதலில் பாக்கெட்டில் (பவுச்) ஷாம்பு விற்பனையைத் தொடங்கினார். கீழ்தட்டு மக்களிடம் மட்டுமல்ல. எல்லா தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வெல்வெட் ஷாம்பு! பாக்கெட் ஷாம்புவை நாளடைவில் டியூப்களிலும் அறிமுகப்படுத்தினார் அவர்.
தந்தை மூலம் பெற்ற அனுபவக் கல்வி:
பெரிய அளவிலான முதலீட்டில் இறங்காமல், எங்கும் பயிற்சி பெறாமல், படித்துப் பெற்ற ஆர்வத்தால் இதைத் தயாரித்து வந்தார் அவர். அப்படியாக அவர் ஷாம்பு, ஊறுகாய், பவுடர், பொம்மை, கைவினைப் பொருட்கள் , பல்பொடி , விவசாயப் பொருட்கள் என அவரின் கண்டுபிடிப்பு தொடர்ந்தது. தேங்காய் நாரிலிருந்து மிகவும் எளிய முறையில் கயிறு திரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த வரும் அவர்தான். புதிய புதிய கண்டுபிடிப்புகளில் தந்தை ஈடுபடும் போதெல்லாம் தங்களின் சொத்துக்கள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன என்பார் சி.கே.ஆர்.
சின்னி கிருஷ்ணன் – ஹேமலதா தம்பதிகளுக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள், இந்த ஆறு பேருக்கும் சிறப்பான கல்வியை பெற்றோர்கள் வழங்கினார்கள்.
பட்ட மேற்படிப்பு படித்த ஹேமலதா கணவரின் ஆலோசனைப்படி, ஆரம்பப் பள்ளி ஒன்றைத் தொடங்கி சிறப்பான பள்ளியாக வளர்த்தார். அதை இப்போது சி.கே.ஆர். ‘சி.கே.ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ்’ என்ற பெயரில் மேலும் சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னுடைய சிறிய நிறுவனமான ‘வெல்வெட்’ ஷாம்புவை, பிள்ளைகளின் பார்வையில் மேலும் நன்றாகச் செயல்பட வைத்தார் சின்னி கிருஷ்ணன். அவரின் மறைவு 48 வயதில் நடந்தபோது , பிள்ளைகளுக்கு தொழில் மேலும் ஈடுபட
விருப்பமில்லை. காரணம் எல்லோரும் நன்றாகக் கற்றிருந்தனர். கண் மருத்துவர், வழக்கறிஞர், மகளிர் நல மருத்துவர் எனப் படிப்படியாக உயர் நிலைகளில் இருந்தனர். ஆனால் தந்தை நடத்த தொழிலில் அவர் பெற்றிருந்த வங்கிக் கடன்கள், நெருக்கியதில், சொத்துகளை இழக்க விரும்பாத பிள்கைள், அதை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
தனித்து தொழிலில் இறங்கினார்:
இப்படியான நிலையில் தான், குடும்பத் தொழிலாகத் தொடங்கப்பட்ட ‘வெல்வெட் ஷாம்பு’ நிறுவனத்திலிருந்து தனியாக வெளி வந்த சி.கே.ரங்கநாதன் 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டது ‘சிக்‘ ஷாம்பு. ‘சிக்‘ எனப்பெயர் ஏன் சூட்டப்பட்டது. அதற்கு இரண்டு காரணத்தைச் சொல்வார் ரங்கநாதன் முதல் காரணம் தந்தையின் பெயரான சின்னி கிருஷ்ணன்& C.K என்ற வார்த்தைகளைக் கொண்டது. அடுத்தது வாடிக்கையாளரை ‘சிக்‘ எனக் கவரும் வகையில் அமைய வேண்டும் என்ற நோக்கம் எனக் குறிப்பிடுவார்.
தன்னுடைய தந்தை கவனம் வைக்காத மார்க்கெட்டிங் துறையில் கூடுதல் கவனம் செலுத்தினார் சி.கே.ஆர் காரணம் தந்தை இறந்தபோது போராடிக் கொண்டிருந்த ‘வெல்வெட் ஷாம்பு’வின் விற்பனை அவரின் சகோதரர்கள் பொறுப்பேற்றுக் கொண்டதும் வருமானம் தரும் தொழிலாக மாறியதை அவர் நன்கு உள்வாங்கியிருந்தார்.
படிப்பு முடிந்ததும் சகோதரர்களுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தவர் ஏதோ ஒரு சூழலில் , வெளியேறும் நிலையும் உருவானது, அப்படி வெளியேறிய போதுகையிலிருந்து பணம் 15 ஆயிரம் ரூபாய் அதுவும் அவருடைய சொந்தப் பணம் உழைப்பில் வந்தது.
கவின்கேர் முயற்சிகள், வணிக உத்திகள் வெற்றி:
சொத்தில் எதுவும் வேண்டாமென வீம்பில் வெளியே வந்தவர் 250 ரூபாய் வாடகையில் வீடு ஒன்றை பிடித்தார். ஒன்றைப் பாயில் படுத்தபடி யோசித்தார். தன் பள்ளி, கல்லூரி நண்பர்களைச் சந்தித்தார். வெல்ல வேண்டும் என்ற வேகமே பல வெற்றிப் பாதைகளை அவருக்கு காட்டியது.
ஃபேக்டரி ஒன்று வாடகைக்கு கிடைத்தது. புதிய தொழில் சோதனை வேண்டாமென தெரிந்த பாதையில் செல்லத் தீர்மானித்தார். மெஷின், லைசென்ஸ் என ஒரே வாரத்தில் வாங்கி ஷாம்பு தயாரிப்பைத் தொடங்கினார். பிறந்தது ‘சிக் ஷாம்பு’.
நண்பர்கள் அவரைச் சந்திக்க வந்தபோது ஆர்வமுள்ளவர்களை மார்க்கெட்டிங் செய்ய அழைத்தார். பிறகென்ன? புதிய தொழில் முனைவோர்கள் விற்பனையாளர்களிடம் சந்திக்கும் அத்தனை துயரத்தையும் அவர் சந்தித்தார் . சலுகைகள் , விற்பனைத் தொகையை தர இழுத்தடிப்புகள் இப்படி பல. நண்பர் ஒருவரும் கடன் தந்தார்.
எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரமே வாடிக்கையாளருக்கான முதல் சிறந்த அறிமுகம் அல்லவா! சினிமா விளம்பரங்களோ ஜவுளிக்கடை விளம்பரமோ மட்டும் கால் பதித்தும் கொண்டிருந்த காலகட்டம் அது. துணிந்து 30 ஆயிரம் ரூபாயில் சிக்ஷாம்பு விளம்பரத்தைச் செய்தார் சி.கே.ஆர். ‘ மாவட்டவாரியா க அனைத்து ஊர்களுக்கும் விநியோகஸ்தரர்கள் தேவை’ என்ற விளம்பரத்தைக் கண்டதும், ஒருவர் தேடி வந்தார். 2000 ரூபாய் டெபாசிட் கொடுங்கள். சரக்கும் கொடுத்து நாங்களே சப்ளையும் செய்து கொடுப்போம் என்றோம். ஒரு பெரிய நாளிதழில் முதல் பக்க
விளம்பரம். நிச்சயம் பெரிய கம்பெனிதான் என வருபவர்கள் கடனுக்கு சப்ளை செய்ய முன்வருவார்கள் என நினைத்து நாங்கள் எண்ணியபடி நடந்தது. சைக்கிள் கம்பெனிக்காரருக்கு ஷாம்பு என்பது ஒரு கௌரவம் கூடியதாகப் பிடித்துப் போனது. பிறகென்ன ? எங்களைத்தேடி டெபாசிட்டுகளுடன் விற்பனையாளர்கள். விற்பனைப் பிரதிநிதிகளும் ஆர்வத்துடன் செயல்பட்டார்கள். அதிக கமிஷன் சிக் ஷாம்பு விற்பனையாளர்களுக்கு தர முடியாத சூழல். உள்ளூர் ஷாம்பு தயாரிப்பாளர்கள் முந்தும் ஒரு சூழ்நிலை உருவானது. என்ன செய்யலாம்? யோசித்தேன்.
ஒரு வழி கிடைத்தது. அஞ்சு ஷாம்பு காலி பாக்கெட் எதுவாக இருந்தாலும் கொடுத்தால், ஒரு சிக் ஷாம்பு இலவசம் என தெரிவித்தோம். எல்லா கடைகளிலும் போர்டு மாட்ட சிக் ஷாம்பு விற்பனையில் சிறகடித்துப் பறந்தது.
மலர்ந்த முகமே தொடர் மூலதனம் :
சென்னைக்கு வந்தேன் வணிக விரிவாக்கம் கருதிய செயல்பாடு அது. அப்பாவின் பெயரான சி.கே. சிக் ஆனது போல் அது CAVIN KARE என மாறினாலும் தந்தையின் பெயரே தொடர்ந்தது. ‘கவின்’ என்றால் அழகு. ‘கேர்’ என்றால் அக்கறை என இணைந்து பெயர் அது-. நிர்வாகத்தில் நேர்மை என்பது கவின்கேருக்கே உரிய தனிச் சிறப்பு. அதில்
அணுவளவும் சமரசம் செய்து கொள்ளாத சி.கே. ரங்கநாதன் அது தான் கவின் கேரின் வளர்ச்சிகளுக்கான அடிப்படை அம்சம் என்கிறார். சி.கே.ஆர். எத்தனையோ விருதுகள், பொறுப்புகள்,
சிறப்புகள், வெற்றிகள் எனப் பல கவின்கேர் நிறுவனத்துக்கு கிடைத்து வந்தாலும், அதன் வளரும் மூலதனம் அவருடைய மலர்ந்த முகந்தான்.
Use Search :