இந்த பதிவில் குழந்தைகளுக்குக்கான விடுகதைகள் ஆன, பழங்கள் விடுகதைகள் , மரங்கள் விடுகதைகள் மற்றும் காய்கறி விடுகதைகள் பற்றி பார்க்க போகிறோம். குழந்தை விடுகதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிவுக்கூர்மையை சோதித்து பாருங்கள்.

பழங்கள் பற்றி அறிந்துகொள்ள குழந்தை விடுகதைகள் :

தலைக்குள் கண் வைத்திருக்கும் பழம் இது மட்டும்தான் அது என்ன பழம் ? விடை: நொங்கு

இராமாயணத்துடன் தொடர்புடைய பழம் அது என்ன? விடை: சீதாப்பழம்

ஓட்டை பிரித்தால் ஒளிந்திருக்கும் 11 சின்ன பிள்ளைகள் அது என்ன பழம்? விடை: ஆரஞ்சு பழம்

செம்பட்டு உடல் அழகி குடையை தலைகீழாய் பிடிக்கிறாள் அது என்ன பழம்? விடை: மிளகாய் பழம்

தொட்டால் மணக்கும் சுவைத்தால் புளிக்கும் அது என்ன பழம்? விடை: எலுமிச்சை பழம்

இதய வடிவில் இருக்கும் சிகப்பு அழகி பச்சை நிறத்திலோ உடம்பெல்லாம் புள்ளிகள் கொண்டாள் இனிப்பும் புளிப்பும் கலந்தது போல் இருப்பாள் இவள் யார்? விடை: ஸ்ட்ராபெரி

கடித்தால் துவர்ப்பு தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன பழம்? விடை: நெல்லிக்கனி

பணி ஊரில் பிறந்த பழம் பார்க்க சிவப்பழம் தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம் அது என்ன பழம்? விடை: ஆப்பிள்

தலையில் கிரீடம் வைத்திருக்கும் தங்கப்பழம் அது என்ன? விடை: அன்னாசி பழம்

பூத்தபோது மஞ்சள் பூத்ததும் சிவப்பு காய்ந்த போது சிவப்பு, காய்த்ததும் கருப்பு அது என்ன பழம்? விடை: பேரிச்சம்பழம்

காய்கறிகள் பற்றி அறிந்துகொள்ள குழந்தை விடுகதைகள் | Kids Tamil Riddles

பச்சை கிளி பறக்க முடியாத கிளி கொம்பிலே இருக்கும் குள்ளக்கிளி அது என்ன? விடை: மாங்காய்

பாட்டி வீட்டு தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊஞ்சலாடுது அது என்ன? விடை: எலுமிச்சம் பழம்

அடி சிவப்பு நடுப்பற்றை உச்சி வெள்ளை நான் யார்? விடை வெங்காயச் செடி

மட்டை உண்டு கட்டை இல்லை பூ உண்டு மனமில்லை அது என்ன? விடை: வாழை

பச்சை பேருந்துக்குள் சிவப்பு பயணிகள் அவர்கள் அணியும் தொப்பி கருப்பு அது என்ன? விடை: தர்பூசணி

உடம்பில்லா ஒருவன் 10 சட்டை அணிந்து இருப்பான் அவன் யார்? விடை: வெங்காயம்

மொட்டை மாடியில் உட்கார்ந்து இருக்கிறது மூக்கணாங்குயிர் மேய்ந்து வருகிறது அது என்ன? விடை: பூசணிக்காயும் அதன் கொடியும்

கிளையிலே ஒரு முழக்குச்சி ஊஞ்சல் ஆடுது அது என்ன? விடை: முருங்கைக்காய்

ஒரு குருவிக்கு ஒரே கால் நாலு இறக்கை அது என்ன? விடை: அரைக்கீரை

கிண்ணம் போல் பூ பூக்கும் பானை போல் காய் காய்க்கும் அது என்ன? விடை: பூசணிக்காய்

ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமை அது என்ன? விடை: பூண்டு

பச்சை மரகத பெட்டிக்குள் முத்துக்கள் வரிசையாய் மின்னுதம்மா அது என்ன? விடை: வெண்டைக்காய்

வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்றன பாம்புகள் அது என்ன? விடை: புடலங்காய்

இலை உண்டு கிளை இல்லை பூண்டு மனமில்லை காய் உண்டு விதை இல்லை பட்டை உண்டு கட்டை இல்லை கன்று உண்டு பசு இல்லை அது என்ன? விடை: வாழை

மண்ணுக்குள் செய்து வைத்த களிமண் சோப்புகள் அது என்ன? விடை: உருளைக்கிழங்கு

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது அது என்ன? விடை: தேங்காய்

மண்ணுக்குள்ளே வெள்ளை மீன் அது என்ன? விடை: முள்ளங்கி

காயில் ஒட்டியது பழுத்தால் பிரிந்தது அது என்ன? விடை: புளியம்பழம்

உள்ளுக்குள்ளே முந்திரி தோப்புக்குள்ளே தங்க கட்டி அது என்ன? விடை: பலாசுளை

பெட்டிக்குள்ளே பச்சை முத்துக்கள் அது என்ன? விடை: பட்டாணி

சாம்பலாண்டியும் சந்தைக்கு வந்தான் உச்சி கொடுமையும் சந்தைக்கு வந்தான் ஒரு முதுகெலும்பணம் சந்தைக்கு வந்தான் அவர்கள் யார்? விடை: பூசணிக்காய் தேங்காய் வாழை இலை

பூ பூக்கும் சிவன் போல காய் காய்க்கும் அது என்ன? விடை: நெல்லிக்காய்

கோபமாய் வரும் பெண்ணை கண்டால் ஓடிப்போகும் சக்கரை நான் யார்? விடை: கோவைக்காய்

காட்டில் கரைந்து இருக்கிறது அது என்ன? விடை: பனங்காய்

முல் தோள் கொண்ட எண்ணெய் என்றால் கசப்பாக கசக்கும் நான் யார்? விடை: பாகற்காய்

செம்மண் உள்ளே சிவப்பு மனிதன் அவன் யார்? விடை: சீனி கிழங்கு

தரையில் படரும் மஞ்சள் நிற குண்டு பையன் நான் யார்? விடை: பூசணிக்காய்

மண்ணுக்குள் சூழலும் மெருன் நிற பம்பரம் தான் நான் யார்? விடை: பீட்ரூட்

பூப்பூவாய் இருக்கும் ஆனால் தலையில் வைக்க முடியாது அது என்ன? விடை: காலிபிளவர்

பூ இருக்க பிஞ்சை தின்றேன் அது என்ன? விடை: வெள்ளரிப்பிஞ்சு

மரங்கள் பற்றி அறிந்துகொள்ள குழந்தை விடுகதைகள் | Tamil Riddles for Kids

நுங்கு தரும் வெயிலுக்கு விசிறி தரும் அது என்ன மரம்? விடை: பனைமரம்

உரைக்க உரைக்க கரைந்திடும் மரம் ஊருக்கே மனம் தரும் மரம் அது என்ன மரம்? விடை: சந்தன மரம்

பக்கமெல்லாம் முள் இருக்கும் பானை போல வயிறு இருக்கும் பச்சைக்கிளி நிறம் இருக்கும் தேன் போன்ற சுவையிருக்கும் பழம் கொடுக்கும் மரம் அது என்ன மரம்? விடை: பலாமரம்

என் பட்டையை தான் மசாலாவின் நாயகன் என்று சொல்கிறார்கள் நான் யார்? விடை: லவங்கமரம்

வெற்றி என்னும் பெயருண்டு என்னை சூடினால் ஜெயம் உண்டு நான் யார்? விடை: வாகை மரம்

என்னை கரையான் அரிக்காத மரம் என்று சொல்வார்கள் நான் யார்? விடை: தேக்கு மரம்

பூக்கள் தான் சர்க்கரை நான் யார்? விடை: இலுப்பை மரம் (குழந்தை விடுகதைகள் )கனிகளின் அரசன் நாள் என் இலைகள் தோரணமாகும் நான் யார்? விடை: மாமரம்

பள்ளிவிட்டபின் சிறுவர்கள் சாப்பிட்ட விலை குறைந்த சிகப்பு பழங்கள் கொண்ட மரம் நான் யார்? விடை: இலந்தை மரம்

பறந்த காட்டேரிக்கு பக்கமெல்லாம் சடை அது என்ன மரம்? விடை: ஆலமரம்

பொட்டு போல இலை இருக்கும் பொறி போல பூ பூக்கும் தின்ன காய் காய்க்கும் தின்னா பழம் காய்க்கும் அது என்ன மரம்? விடை: முருங்கை மரம்

அண்ணன் தம்பி மூவர் ஒருத்தனை சீவினால் பால் வடியும் அடுத்தவனை சீவினால் பதநீர் வடியும் மற்றுமொருவனை சீவினால் பிசின் வடியும் நாங்கள் யார்? விடை: ரப்பர் மரம், பனைமரம், வேங்கை மரம்

உடல் முழுவதும் 100 கட்டுபூச்சி அதன் முடிக்கு கட்டே இல்லை அது என்ன மரம்? விடை: தென்னை மரம்

பூவுக்கெல்லாம் அரசன் நான் நோய் தீர்க்கும் மருந்தும் நான் யார்? விடை: பூவரசன் மரம்

நான் வெற்றிலையோடு ஜோடி போட்டுக் கொண்டு வாய் சிவக்க வைப்பேன் நான் யார்? விடை: பாக்கு மரம்

போட்டு போல இலை கொண்டவன் வாய் கூசும் பழம் கொண்டவன் நான் யார்? விடை: புளியமரம் – குழந்தை விடுகதைகள்

மிக எளிமையான குழந்தை விடுகதைகள்:

எனக்கு கூர்மையான முனை உள்ளது கைகளால் என்னை உபயோகிப்பார்கள் மரம் வெட்ட உதவுவேன் நான் யார்? விடை: கோடரி

நான் மரத்தில் வாழ்கிறேன் எனக்கு பற்கள் கிடையாது எனக்கு அழகும் சிறகும் உள்ளது நான் யார்? விடை: பறவை

என்னை பாலைவன கப்பல் என அழைப்பார்கள் பாலைவனத்தில் அனைவரையும் என் மீது ஏற்றி செல்வேன் பல நாட்கள் நீரின்றி வாழ்வேன் நான் யார்? விடை: ஒட்டகம்

நான் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லவன் நான் பச்சை நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் இருப்பேன் என்னை தினமும் சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டு நான் யார்? விடை: ஆப்பிள்

எனக்கு நான்கு சக்கரங்கள் உண்டு என்னை நிறுத்தி வைக்க பெரிய இடம் தேவை மக்களை ஏற்றி செல்ல உதவுவேன் நான் யார்? விடை: பேருந்து

படுக்கையறையில் நான் இருப்பேன் எனக்கு மேலே மெத்தை விரிப்பார்கள் என் மேல் படுத்து உறங்குவார்கள் நான் யார்? விடை: கட்டில்

நான் ஒரு வீட்டு விலங்கு நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது என் மாலை ஆட்டுவேன் எனக்கு எலும்புகளை கடிக்க மிகவும் பிடிக்கும் நான் யார்? விடை: நாய்

நான் வெயிலில் இருந்து உங்களை காப்பேன் பல வடிவங்களில் பல அளவில் கிடைப்பேன். என்னை தலை மீது அணிவார்கள் நான் யார்? விடை:தொப்பி

நான் ஒரு காட்டு விலங்கு நான் பெரிய உருவம் கொண்டவன் எனக்கு மிகப்பெரிய கை உள்ளது நான் யார்? விடை: யானை

நான் பாதுகாப்பு நிறைந்தவன் சிறப்பு ஆடை அணிந்து என்னுள் இருப்பார்கள் தவறு செய்தவர்கள் மட்டுமே என்னுள் இருப்பார்கள் நான் யார்? விடை: சிறை

நான் ஒரு வீட்டு விலங்காவே எனக்கு கொம்புகள் உண்டு நான் செம்மறி ஆடு போல இருப்பேன் நான் யார்? விடை: ஆடு

பேனாவிற்குள் நான் இருப்பேன் பல வண்ணங்களில் இருப்பேன் நான் உங்கள் மீது ஒட்டிக் கொள்வேன் நான் யார்? விடை: மை

என் வாலில் மென்மையான ரோமம் உள்ளது என்னை தந்திரக்காரன் என்பார்கள் நாய் போல உருவம் கொண்டவன் நான் யார்? விடை: நரி

உயரமாக குதிக்க கூடியவன் நான் எனக்கு பூச்சிகள் ரொம்ப பிடிக்கும் நீளமான ஒட்டும் நாக்கினை கொண்டவன் நான் யார்? விடை: தவளை

என்னை குடிப்பதற்காக உபயோகிப்பார்கள் கைப்பிடியுடன் வருவேன் நான் திரவத்தை மட்டுமே குடிக்க உதவுவேன் நான் யார்? விடை: கோப்பை

எனக்கு கைப்பிடி உள்ளது என்னை மூடுவார்கள் திறப்பார்கள் வீட்டிற்கு உள்ளே செல்ல நான் உதவுவேன் நான் யார்? விடை: கதவு

உடம்பின் ஒரு பாகம் நான் உடம்பின் மேல் பகுதியில் நான் இருப்பேன் கையின் நடுப்பகுதியில் உள்ளவன் நான் யார்? விடை: முழங்கை ( குழந்தை விடுகதைகள் )

உங்கள் குழந்தையிடம் இந்த குழந்தை விடுகதைகள் பற்றி கேட்டு பாருங்கள்!!!

இந்த பதிவில் குழந்தை விடுகதைகள் பற்றி பார்த்தோம் மேலும் 50-க்கு மேற்பட்ட விடுகதைகள் பற்றி படிக்க:

50 மேற்பட்ட விடுகதைகள் அறிய மற்றும் புதிய தமிழ் விடுகதைகள் அறிய