பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்

உடல்நலம்

தொண்டை கரகரப்பு நீங்க சித்த மருத்துவ குறிப்புகள் :

சித்த மருத்துவ குறிப்புகள் : குளிர்காலம் என்பதனால் அதற்குத் தகு ந் த மாதிரியான காசாயங்களைப் பயன்படுத்த வேண்டும். 2 டம்ளர் தண்ணீரில் 4 வெற்றிலைகளைப் பிய்த்து போட்டு கொதிக்க விட்டபின் குடிக்க தொண்டை கரகரப்பு நீங்கும்.

குழந்தை சளித்தொல்லை நீங்க : | சித்த மருத்துவ குறிப்புகள்

கற்பூரவள்ளி இலையினை இடித்துச்சாறு எடுத்து அதனுடன் தாய்ப்பால் (அ ) பசுவின் பாலில் கலந்து தொடர்ந்து கொடுத்துவர சளித்தொல்லை தீரும்.

கற்பூரவள்ளி இலையின் சாற்றுடன் தேன் கலந்து கொடுத்து வர, அடிக்கடி ஏற்படும் சளித் தொல்லை தீரும்.

சாதாரண சளி மற்றும் இருமல் நீங்க :

சாதாரணசளி மற்றும் இருமல் சரியாக 2 வெற்றிலை இலைகள் , 2 துளசி கொத்து, சின்ன வெங்காயம் ஒன்று சேர்த்து அரைத்த கற்கத்தினைப் பயன்படுத்த தீரும்

வாத, பித்த, கபத் தொல்லை நீங்க :

உடலில் ஏற்படும் கபத் தொல்லையான தீர தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சிறிது இலவங்கப் பட்டை, கிராம்பு 2 சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து பின்னர் மஞ்சள் சேர்த்து கொதித்த பின்பு சீரகம் 1 ஸ்பூன் பின்னர் துளசி இலைகள் சிறிது சேர்த்து பின்னர் 1 சிட்டிகை இந்துப்பு சேர்த்து பருக வேண்டும். இந்துப்பானது வாத, பித்த, கப தோஷங்களைச் சமப்படுத்தும்.

தொடர் இருமல் தொண்டையில் குத்திக் கொண்டுவரும் தொடர் இருமல் தீர 2 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் மஞ்சள், சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு இவற்றைக் கொதிக்க வைத்து தேன் சேர்த்து ஒரு வாரம் பயன்படுத்த வேண்டும்.

தொண்டைப் புகைச்சல் நீங்க :

இஞ்சியைப் பொடியாக நறுக்கிப் பின்னர் அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து அதனுடன் தேன் சேர்த்து ஒரு வாரம் பயன்படுத்த தொண்டைப் புகைச்சல் தீரும்.

வெங்காயச்சாறுடன் தேன் சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் இருமல் தீரும்.

வறட்டு இருமல் நீங்க :

தொண்டையில் ஏற்படும் வறட்டு இருமல் தீர சுடுபாலில் சிறிதளவு தேன் சேர்த்து பருக வறட்டு இருமல் மற்றும் நெஞ்சு எரிச்சல் தீரும்.

இருமல் போக்கும் திராட்சைச் சாறு :

திராட்சைச் சாறு சில சமயம் இருமலைத் தீர்க்கும். சுத்தமான திராட்சை சாற்றுடன் தேன் சேர்த்துப் பருக இருமல் தீரும்.

2 டம்ளர் தண்ணீரில் சிறிதளவு இஞ்சித் துண்டுகளைச் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 1/4 ஸ்பூன் மிளகு சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து அதனுடன் தேன் சேர்த்து ஒரு வாரம் பருக இருமல் தீரும்

இரவில் ஏற்படும் தொடர் இருமல் நீங்க:

இரவில் ஏற்படும் தொடர் இருமல் தீர திப்பிலி, மஞ்சள், சிற்றரத்தை இவைகளை சுட்டு எடுத்து பின்னர் தாய்பால் (அ) தேனில் உரைத்துக் கொடுக்க தீரும். இதனை சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு மார்பில் ஏற்படும் சளி தீர :

மார்பில் ஏற்படும் சளி தீர குழந்தைகளுக்கு வெற்றிலையை எடுத்து அனலில் வாட்டில் பொறுக்கக் கூடிய சூட்டில் நெஞ்சில் போட்டு வர வேண்டும்.

நெஞ்சுச்சளி விரைவில் நீங்க :

தேங்காய் எண்ணெயினை எடுத்துக் கொண்டு சூடு செய்து அதனுடன் சிறிதளவு ஓம உப்பு, புதின உப்பு, கற்பூரம் சேர்த்துக் கலந்து நெஞ்சில் தடவிவர நெஞ்சுச்சளி விரைவில் தீரும்.

கண்டங்கத்தரி வேரினை சிறிதளவு எடுத்து அதில் திப்பிலி சேர்த்து கஷாயம் வைத்துக் குடிக்க இருமல் தீரும். கண்டங்கத்தரி வேர் ஒரு கண்டு பரங்கி கோரைக்கிழங்கு, சுக்கு, சிறுவலுதலை வேர் இவைகளை ஒரே அளவாக (each 5gm) எடுத்து அதைக் குடிநீர் செய்து குடிக்க வாதத்தினால் ஏற்படும் (கைகால் குடைச்சலோடு) ஏற்படும் சுரம் தீரும்

மூக்கு சளி நீங்க :

கற்பூரவள்ளி இலைச்சாற்றுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் சேர்த்துத் தலைக்குத் தடவிவர மூக்கு நீர்ப்பாய்தல் தீரும்.

ஆடாதோடை மற்றும் தாளிசபத்திரி இலை மருத்துவ குணம் :

2 டம்ளர் தண்ணீரில் 4 ஆடாதோடை இலைகளைக் கிள்ளிப் போட்டு பின்பு அதனுடன் தாளிசபத்திரி இலைகளைச் சேர்த்து தேன் சேர்த்துக் குடிக்க இருமல், நெஞ்சில் கோழைக் கட்டு தீரும்.

தொண்டைக் கம்மல் நீங்க :

தான்றிக் காய்பொடி, திப்பிலிபொடி, உப்பு இலைவகளை ஒரே அளவாக எடுத்து மோரில் கலந்து குடிக்க தொண்டைக் கம்மல் தீரும்.

துளசி இலையைப் பாலில் இட்டுக் காய்ச்சியுண்ண பாலால் ஏற்படும் கபக்குற்றம் நீங்கும்.

நெஞ்சில் கட்டும் கபம் தீர :

நெஞ்சில் கட்டும் கபம் தீர 2 டம்ளர் நீரில் ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளை சேர்த்து அரை டம்ளராக வத்த வைத்து தேன் சேர்த்துக் குடிக்க தொண்டைக் கட்டு, இருமல் தீரும்.

நெஞ்சு படபடப்பு மூளை தெரிவினை :

நெய்தற்கிழங்கின் பூ 50 கிராம் சர்க்கரை 50 கிராம் இவற்றுடன் 2 மடங்கு நீர் சேர்த்து மணப்பாடு செய்து குடித்துவர கண்ணிற்குக் குளிர்ச்சி அளிப்பதுடன் , மூளைக்குத் தெரிவினை உண்டாக்கும். நெஞ்சு படபடப்பினைப் போக்கும்.

கோழைக்கைகட்டு இருமல், சளி தீர : | சித்த மருத்துவ குறிப்புகள்

முசுமுசுக்கை இலையினை அரைத்துச்சாறு எடுத்து அதனுடன் கோரோசனை சேர்த்து அருந்த கோழைக்கைகட்டு இருமல், சளி இவைகள் தீரும்.

முசுமுசுக்கை இலையினை அரிசிமாவு மற்றும் மற்ற மாவுகளுடன் சேர்த்து அடைசுட்டு சாப்பிடுவதினால் கோழைக்கட்டு, இருமல், ஈளை தீரும்

காச நோய் கட்டுபடுத்த:

கோரைக்கிழங்கு மாவினைப் பொடி செய்து தினமும் அரை முதல் ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர தேனுடன் கலந்து காசநோயானது கட்டுப்படும்.

வறண்ட இருமல் தீர :

வறண்ட இருமல் தீர ஒரு அக்கரகாரத் துண்டினை வாயிலிட்டு மென்று வந்தால் வாயில் விறுவிறு உண்டாகி கம்மல் தீரும்.. ( சித்த மருத்துவ குறிப்புகள் )

வெற்றிலை
வெற்றிலை
முசுமுசுக்கை
முசுமுசுக்கை
துளசி
துளசி
திப்பிலி
திப்பிலி
ஆடாதோடை
ஆடாதோடை

Use Search : சித்த மருத்துவ குறிப்புகள் , சித்த மருத்துவ , சித்த மருத்துவம் தமிழ் , சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் , சித்த மருத்துவக் குறிப்புகள்தொடர்புடைய கட்டுரைகள்