சிறுதானிய உணவு
சிறுதானிய உணவு

5 சிறுதானிய உணவு மற்றும் குறிப்புகள்

சிறுதானிய உணவு : வரகு நாட்டு சர்க்கரை பொங்கல், தூதுவளை துவையல், கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி, முடக்கத்தான் கீரை ரசம் போன்ற சிறுதானிய உணவு முறைகளை நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

வரகு நாட்டுச் சர்க்கரை பொங்கல்: | வரகு பொங்கல்

தேவையான பொருட்கள்:

வரகு – 1/2 கிலோ

பாசிப்பருப்பு – 1/4 கிலோ

முந்திரி – 100 கிராம்

ஏலக்காய் – 5

நாட்டுச்சக்கரை – 1/2 கிலோ

நாட்டு மாடு பசுவின் நெய் – 100 கிராம்

சிறுதானிய உணவு செய்முறை:

பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரகு அரிசியை சுத்தம் செய்து 1/4 மணி நேரம் தண்ணீர் போட்டு ஊறவைத்துக் கொள்ள வேண்டும். முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

மண்சட்டியை அடுப்பில் வைத்து 4 டம்ளர் தண்ணீர் சட்டியில் ஊற்றி நன்றாக கொதித்தபின் பாசிப்பருப்பை முதலில் போட்டு அது நன்றாக வெந்தபின் வரகு அரிசியை போடவேண்டும். வரகு அரிசியும் நன்றாக வெந்த பின் முந்திரி, ஏலக்காய், நெய் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு 10 நிமிடம் மெதுவான நெருப்பில் மூடி வைக்கவேண்டும். பின் நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். பின் 5 நிமிடம் வைத்திருந்தால் சுவையான வரகு நாட்டு சக்கரைபொங்கல் கிடைக்கும்.

கொள்ளு ரசம்: | kollu rasam recipe சிறுதானிய உணவு

தேவையானப்பொருட்கள்:

கொள்ளு – 50 கிராம்

மிளகு – 15 கிராம்

பூண்டு – 10பல்

சிரகம் – 1/2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

புளி – புளிப்பு தேவையான அளவு

கருவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு – தேவையான அளவு

உப்பு, எண்ணெய், மஞ்சள்தூள் – தேவையான அளவு

பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் பற்றி தெரியுமா?

செய்முறை:

கொள்ளு, மிளகு, பூண்டு, சீரகம், காய்ந்தமிளகாய், கருவேப்பிலை இவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஊற வைத்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த கலவையை புளிக் கரைசலுடன் சேர்த்து கலந்து உப்பு சேர்த்து கலந்து மஞ் சள்தூள் சேர்த்துக் கொண்டு, புளிப்பு சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டு, பின் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு, தாளித்து பின் கரைத்து வைத்துள்ள கொள்ளு ரசக் கலவையை ஊற்ற வேண்டும். பின் ரசம் நன்றாக நுரை கட்டியவுடன் கொதிக்கவிடாது பார்த்து இறக்கவேண்டும் பின் அத்துடன் கொத்துமல்லி இலை சேர்க்க வேண்டும். தற்போது சுவையான காரமான கொள்ளு ரசம் கிடைக்கும். பனி காலத்திற்கும் சலதோஷத்திற்கும் இது ஏற்றது. இப்போது பனிக் காலமாக இருக்கின்ற காரணத்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் இதனைச் செய்து சாப்பிட்டு வந்தால் சளி சுவாசக் கோளாறுகள் ஏற்படவே ஏற்படாது.

தூதுவளை துவையல் | தூதுவளை துவையல் செய்வது எப்படி :

தேவையானப்பொருட்கள்:

தூதுவளை இலை – 200 கிராம்

கொத்து மல்லி,கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்

தாளிக்கும் உளுந்து, சீரகம் – 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

கருவேப்பிலை – சிறிதளவு

பூண்டு – 5பல்

உப்பு – தேவையான அளவு

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தேங்காய்த் துருவல் – சிறிய கப் 1

கடலெண்ணெய் – 50 கிராம்

செய்முறை :

மண் வடை சட்டியை அடுப்பில் வைத்து, சட்டி காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி , காய்ந்தவுடன் வெங்காயம் , மிளகாய் கருவேப்பிலை போட்டு, கிளறி விடவேண்டும். வெங்காயம் பாதி வெந்தவுடன் கடலைப்பருப்பு, உளுந்து, கொத்துமல்லி, பூண்டு போன்றவைகளைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும். அதன்பின் தூதுவளை தலையைப் போட்டு கிளறிவிட்டு, பின் தேங்காய் துருவலையும் சேர்த்து கலக்கி விட்டு பின் உப்பு சேர்த்துக்கொண்டு ஆறிய பின் ஆட்டுக்கல்லில் இட்டு நன்கு ஆட்ட வேண்டும். சட்னி அதிக சுவையாக இருக்கும். இட்லி தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். சாப்பாட்டிலும் பிசைந்து சாப்பிடலாம். தற்சமயம் பனி காலமாக உள்ளதால் இந்த சட்டினி செய்து சாப்பிட்டால் சளி பிடிக்காது.

கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி: | சிறுதானிய உணவு

தேவையானப்பொருட்கள்:

1. கேழ்வரகு மாவு – 250 கிராம்

2. கோதுமை மாவு – 100 கிராம்

3. நாட்டினப்பசுவின் நெய் – 25 கிராம்

4. உப்பு – தேவையான அளவு

5. வெந்தயக்கீரை – 1 கட்டு

செய்முறை:

 கேழ்வரகு மாவு, கோதுமை மாவு , நறுக்கிய வெந்தயக்கீரை , உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் விட்டு, 2ஸ்பூன் நெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் . 1/ 2 மணி நேரம் கழிந்து மறுபடியும் நன்றாக பிசைந்து சிறு உருண்டையாக செய்து, சப்பாத்திக் கல்லில் வைத்து, சிறிது நெய்விட்டு திருப்பி, திருப்பி போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். சுவையான சப்பாத்தி கிடைக்கும்.

வெந்தயக்கீரை, கேழ்வரகு சேர்த்து செய்ய, வளரும் குழந்தைகளுக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து கிடைக்கும். இதை எல்லா வயதினரும் சாப்பிடலாம்.

சர்க்கரை உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் உடல் நலம் பெறும்.(சிறுதானிய உணவு)

முடக்கத்தான் கீரை ரசம் | mudakathan keerai rasam

தேவையானப்பொருட்கள்

முடக்கத்தான் கீரை – 100 கிராம்

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

தக்காளி – 3

சீரகம் – 4 ஸ்பூன்

பூண்டு – 10 பல்

மிளகு – 1ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

பெருங்காயம் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

காய்ந்த மிளகாய் – 2

செய்முறை:

 முதலில் சீரகம் , மிளகு இவற்றை வறுத்து பொடியாக்கிக் கொண்டு அதனுடன் பூண்டையும் சேர்த்து நசிக்கி வைத்துக்கொள்ள வேண்டும். முடக்கத்தான்

கீரை, தக்காளியும் அரைத்துக்கொள்ள வேண்டும். பொடியாக்கிய சீரகம், மிளகு, அரைத்து வைத்துள்ள கலவையையும் நன்றாக

சேர்த்து கலக்கியபின் உப்பு, பெருங்காயம் சேர்த்து, கலக்க வேண்டும். பின் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை காய்ந்த மிளகாய்

சேர்த்து தாளிக்க வேண்டும். நன்கு காய்ந்து நுரை கட்டி வரும் சமயத்தில், கொதிக்க விடாமல் இறக்கி விட வேண்டும். சுவையான முடக்கத்தான் கீரை ரசம் கிடைக்கும். இதுவும் பனிகாலத்தில் உடலுக்கு சோர்வு கொடுக்காமல் பலமாக இருக்க உதவும். இருமல், சளிக்கு ஏற்ற ரசமாக இருக்கும். முழங்கால் முட்டி வலிகளுக்கும் இது நிவாரணம். (சிறுதானிய உணவு)

தூதுவளை
தூதுவளை
முடக்கத்தான் கீரை
முடக்கத்தான் கீரை
வெந்தயக்கீரை
வெந்தயக்கீரை

Use Search : கொள்ளு ரசம் வைப்பது எப்படி , சிறுதானிய சமையல் , siruthaniya samayal in tamil , siruthaniya samayal recipes in tamil

Similar Posts