லாபம் தரும் நோட்புக் தயாரிப்புத் தொழில்

Common

நோட்புக் தயாரிப்புத் தொழில் : என்ன தான் வாழ்க்கை நவீன முறைகளுக்கு மாறிக் கொண்டே இருக்கட்டுமே நோட்டு புக்குகளின்  முக்கியத்துவம் குறைந்து விடாது. எழுதப் படிக்கத் தெரிந்த மனிதர்கள் வாழும் வரை, தொய்வே இல்லாமல் நோட் புக் தயாரிப்புத் தொழில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

நோட்புக் தொழில் ஒரு நல்ல வரவேற்புள்ள உற்பத்தி:

சராசரி வாழ்வில், வர்த்தகத் தொடர்களின் பதிவு சார் குறிப்பேடுகளாக, வீட்டின் தினசரி கணக்குகளை எழுதி வைத்துக் கொள்ள, பள்ளி, கல்லூரி பாடங்களைக் குறிப்பு எடுக்க என நோட்டுப் புத்தகத்தின் தேவை, தொடர்ந்து கொண்டே உள்ளது. அதனால் நோட்டுப் புத்தகத் தயாரிப்பில் ஈடுபட விரும்புவோருக்கு, தொழில் வாய்ப்பும், தரமான தயாரிப்புக் கேற்ற தனித்துவமான வரவேற்பும் வளர்ந்து கொண்டே உள்ளது. எல்லோரு ம் ந வீன முறைகளுக்கு மாறிவிட்டார்கள் . டிஜிட்டல் உலகில் கணினி , ஸ்மார்ட் போன் , லேப்டாப்

என்று வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நோட்டுப்புத்தகங்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருக்காது என்று சொல்பவர்கள், அதைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்களே!

எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை மாணவர்களுக்கான பாடங்கள் அதிகரிப்பதற்கேற்ப, அவற்றின் எண்ணிக்கை உயர்வதற்கேற்ப, நோட்டுப் புத்தகங்களின் தேவையும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. சுருக்கமாகக் குறிப்பிட்டால் நோட்டுப் புத்தகங்கள் எவரெவர்க்கு தேவைப்படுகிறது என்பதை விட, உணவு, உடை, இருப்பிடம் என்பதைப் போன்று மனித வாழ்விற்கு நோட்டுப் புத்தகங்களின் தேவை குறிப்பிட்ட அளவில், குறைந்தது ஒரு சிறு அளவிலாவது உள்ளது என்பதை மறுக்க முடியாது. மேற்கண்ட காரணங்களை வைத்துப்

பார்க்கும் பொழுது எதிர் காலத்தில் நோட்டுப் புத்தகங்களின் தேவை உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதை நாம் உணர முடியும். இதனால் எதிர்காலத்தில் நோட்டுப் புத்தகங்கள் தயாரிப்பில் உள்ள நிறுவனங்கள், நல்ல இலாபத்தை மேலும் பெற வாய்ப்பிருப்பதாக தொழில் சார் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

notebook business
notebook business

வர்த்தக வெற்றிபெற… notebook business ideas :

படிக்கத் தெரிந்ததை எழுதிப் பார்ப்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தணியாத ஆர்வம் உண்டு. பாடங்கள், கதை, கவிதை, நினைவுகள், தொலைபேசி எண் குறிப்புகள் , நாள் குறிப்புகள் என எல்லாமே நோட்டுப் புத்தகத் தயாரிப்புகள். இதிலிருந்தே நோட்டுப் புத்தகங்கள் மனிதர் வாழ்வில் பெற்றிருக்கும் இடத்தைப் புரிந்துகொள்ள முடியும் அதனால் நோட்டுப் புத்தகத் தயாரிப்புத் தொழிலில் இறங்குவோர்கள், தரமான முறையில், புதிய விற்பனை ஈர்ப்பு அணுகுமுறைகளுடன் அதை செய்து வந்தால், வெற்றிகளைப் பெற்று, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பெரிய நிறுவனங்கள் பல இத்தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், சிறிய நிறுவனங்களும் இத்துறையில் சாதித்துக் கொண்டுதான் உள்ளன. இதனால் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும் . தொழிலின் நுணுக்கங்களை , நன்கு தெரிந்து கொண்டு, அடிப்படைக் கட்டமைப்பு முறையாக விளங்கிக் கொண்டு தயாரிப்பில் ஈடுபடுவோர் வர்த்தக வெற்றியைப் பெறுகிறார்கள்.

நோட்புக் தொழில் தொடங்க… :

இந்தத் தொழிலில் ஈடுபட எண்ணுவோர் , சிறு தொழில் மையத்தில் பதிவு செய்து கொண்டு, தொழிலில் இறங்கிவிடலாம். சொந்த இடமோ, வாடகை இடமோ எந்த இடமாக இருந்தாலும் நோட்டுப் புத்தகத் தயாரிப்பைத் தொடங்க முடியும்.குறைந்த வாடகை, மூலப் பொருளாக, பேப்பரைக் கொண்டு வர, வைத்திருக்க, எடுத்துச் சொல்ல என எல்லாவற்றுக்கும் போதிய இட வசதி கொண்ட இடம் அவசியம். குறிப்பாக, குறைந்தபட்சம் 1000 முதல் 1500 சதுர அடி வரையிலான இடம் போதிய அளவில் இருக்கும். மேலும் தயாரிப்பைத் தொடங்கி, உற்பத்தி நடந்து கொண்டிருக்கும் போது, டெலிவரி செய்யும் வரை அதாவது நோட்டுப் புத்தகங்களை விநியோகம் செய்யும் வரை, அதைப் பாதுகாப்பாக வைத்திட குடோன் தேவைப்படும்.

முதலீடும், தொழிலக நடவடிக்கைகளும் | notebook business profit:

தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்குவது என்பதற்கு ரூபாய் 15 இலட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டும். நோட்புக் தயாரிப்புக்கு ஐந்து வகை தயாரிப்பு இயந்திரங்கள்தேவைப்படும். கட்டிங் மெஷின், ரூலிங் மெஷின், ஸ்டிச்சிங் மெஷின், பைண்டிங் மெஷின் என்கிற இயந்திரங்கள் அவசியமாகும்.

தொழில் தொடங்கும்போது அட்டைப்படம் ஆகியவற்றை பிரிண்ட் செய்ய, வெளியில் உள்ள பிரின்டர்களைக் கொண்டு அதைச் செய்து கொள்ளுவது பாதுகாப்பானது.

நோட்புக் மூலப்பொருள், தயாரிப்பு | notebook business plan pdf:

பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருளான பேப்பரை தமிழ்நாடு காகிதம் தயாரிப்பு நிறுவனத்திதை (டி.என்.பி.எல்) நேரடியாகத் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம். அதிகப்படியாக மூலப்பொருளை வாங்கி வைத்து விட்டு காத்திருப்பதை விட, கிடைக்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப மூலப்பொருள் வாங்குவது கொள்முதல் சார்ந்து பாதுகாப்பானது. ஆர்டர்கள் அதிகமாகக் கிடைக்கும் இடங்களை தொடர்ந்து தொடர்பில் வைத்துக் கொள்ளுவது வர்த்தக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அலுவலகங்கள் போன்றவை அத்தகைய வாய்ப்புகளை வழங்குபவை. அரசு சார் ஆர்டர்கள் , பள்ளிகளுக்கு அவர்கள் வழங்கும் இலவச நோட் புத்தகங்களுக்கான ஒப்பந்த ஆர்டர்கள், ஸ்டேஷனரி கடைகள் எல்லாமே வணிக வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கும் வளர்ச்சி மையங்கள். குழந்தைகள் விரும்பும் வகையிலான அம்சங்களுடன் நோட்டுப்புத்தக தயாரிப்புகள் அமைந்தால், அதற்கு வரவேற்பு அதிகரிக்கும்.

நாம் தொழிலில் நிலைபெறும் வரை கடன் விற்பனையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. நோட்புக் சீசனை அடிப்படையாகக் கொண்ட நோட்புக் தொழிலில் டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை வேலை அதிகமாக இருக்கும். முழுமையாக அறிந்து , தெளிவாகச் செயல்பட்டால் 15 முதல் 20 சதவீத இலாபம் தரும் தொழில் இது என்கிறார்கள் இத்தொழிலில் இருப்போர்.தொடர்புடைய கட்டுரைகள்