பேரிச்சம்பழம் பயன்கள்: டயட் உணவு என்று சொல்லக்கூடிய பேரிச்சம்பழம் பயன்கள், பேரிச்சம்பழம் சத்துக்கள் மற்றும் பேரிச்சம்பழம் சாப்பிடும் முறை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பேரிச்சம்பழம் பயன்கள்:

பேரிச்சம்பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காணப்படுகிறது ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். பேரிச்சம்பழம் ரத்த சோகைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது.

பேரிச்சம்பழம் உடல் எடை குறைக்கும்:

தொப்பை மற்றும் உடல் எடை குறைய டையட் உணவு

புரதச்சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ள தசைகளுக்கு வடிவத்தை தரக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க :

ரத்த சோகையை குணப்படுத்துவதுடன் நோய்க்கு சக்தியை அதிகரித்து சாதாரண  சளி மற்றும் காய்ச்சல் வருவதை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்பேரிச்சம் பழம்

பேரிச்சம்பழம் ஆண்மை சக்தியை அதிகரிக்கிறது:

இரவில் படுக்கும் போது பேரிச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு பால் குடித்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் இரண்டு மாதங்களுக்கு காலை உணவு சாப்பிட்ட பிறகு மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின் வெண்ணீர் அருந்தவும் இரவில் உணவுக்கு பின் 12 பேரிச்சம்பழங்களும் சாப்பிட்ட பின் நாட்டு மாட்டு பால் குடிக்க வேண்டும் இவ்வாறு குறைந்த பட்ச்சம் இரண்டு மாதங்கள் பின்பற்ற வேண்டும்.

ஆண்மை அதிகரிக்கும் பேரிச்சை பழம்
ஆண்மை அதிகரிக்கும் பேரிச்சை பழம்

மூளையின் செயலாற்றலை அதிகரிக்க:

மூளையின் செயல் திறனை அதிகரிக்க தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம்பழத்தில் வைட்டமின் பி6 இருப்பதால் மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலையும் மேம்பட வைக்கிறது.

மூளையின் செயல் திறனை அதிகரிக்க

சர்க்கரை நோயாளிகள்:

இனிப்பு சுவை உள்ள எல்லா பழ வகையும் சர்க்கரை நோயை உண்டு பண்ணுகின்றன என பலர் தவறாக கருதி உடலுக்கு நன்மை தரக்கூடிய பழ வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாம்

உண்மையில் பேரிச்சம்பழத்தில் உள்ள ஃபீனாலின் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இவை சர்க்கரை அளவை சீராக வைத்து சர்க்கரை வியாதியில் இருந்து தடுக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சத்துக்கள் நிறைந்துள்ள பேரிச்சம்பழத்தில் சாப்பிடலாம் .

கர்ப்பிணி பெண்கள்:

பிரசவத்திற்கு பிறகு பொதுவாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை உடற்பருமன் ஆகும். இதனை தவிர்க்க பெண்கள் தினமும் நான்கு பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். மேலும் இவை பிரசவத்தின் போது உண்டாகும் வலியையும் குறைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பேரிச்சை பழம் சாப்பிடலாம்

உடல் வலிமை பெற பேரிச்சம் பழம்: | பேரிச்சம்பழம் பயன்கள்

தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெறலாம்.

இன்றைய காலகட்டத்தில் இதய நோய் என்பது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் வரக்கூடிய ஒரு சாதாரணமான நோய் ஆகிவிட்டது.

இதய நோயிலிருந்து பாதுகாக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இதயம் வலுப்பெறும். மேலும் இவை உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும் இருப்பீர்கள்.

உடல் வலிமை பெற வேண்டுமா

பேரிச்சம்பழம் சத்துக்கள்:

பேரிச்சம்பழத்தில் உள்ள சத்துக்கள் வைட்டமின் c, வைட்டமின் b1 , b2  கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துக்கள், கொழுப்பு, புரதம், மெக்னீசியம், காப்பர், கால்சியம் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் உள்ளன.

பேரிச்சம்பழம் சத்துக்கள்

பேரிச்சம் பழம் சாப்பிடும் முறை:

பேரிச்சம்பழத்தை நன்கு கழுவி சாப்பிட வேண்டும். தினமும் மூன்று முதல் ஆறு பேரிச்சம் பழம் சாப்பிடலாம். சுருக்கங்களாக இருக்கும் பேரிச்சம் பழம் நன்கு தரமானதாக இருக்கும். இவற்றின் மீது எவ்வித நாற்றமோ அல்லது வாசமோ வராமல் இருப்பது நல்லது.

பேரிச்சம்பழம் சாப்பிடும் முறை
ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் ORANGE FRUIT
உலர் திராட்சை பயன்கள் என்னனு படிக்க

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்கள்  பேரிச்சம் பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் பேரிச்சம் பழத்தை சாப்பிடும் முறை போன்றவை  பார்த்தோம். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

About admin

f510b443b58f266ea2908bbb4984dbe4?s=90&d=mm&r=gவணக்கம் . நான் BlogToday.in இணையதளத்தில் பல்வேறு தலைப்புகளில் பல சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.