மணப்பாறை முறுக்கு
மணப்பாறை முறுக்கு

மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி

மணப்பாறை முறுக்கு : முறுக்கு ஓரு சிறந்த நொறுக்குத் தீனி . நம் தமிழகத்தில் தான் முறுக்கு பல விதங்களில் பல வகைகளில் கிடைக்கிறது. முறுக்கின் தாயகம் தமிழகம் என்றால் அது மிகையாகாது. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் புதுப்புது வடிவங்களில் முறுக்கு தயாரிக்கப்படுகிறது. முறுக்கு நமது பாரம்பரிய பலகாரம். மணப்பாறை முறுக்கு உலக அளவில் பிரபலமாக உள்ளது. வீட்டில் என்னதான் சாப்பிட்டாலும் நொறுக்குத் தீனி கிடைக்காதா என நம் மனம் ஏங்கவே செய்கிறது . நொறுக்குத் தீனி களில் முதலிடத்தைப் பெறுவது முறுக்குதான்.

ரோமில் உள்ள ஒரு பிஷப்புக்கும் கூட இந்த முறுக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. இனிப்பாகவும் இல்லாமல் காரமாகவும் இல்லாமல் ஒரு வித்தியாசமான சுவையோடு மணக்கும் மணப்பாறை முறுக்கு அனைவராலும் விரும்பப்படுகிறது. முறுக்கிய நிலையில் அச்சு  மூலம் பிழியப்படுவதால் முறுக்கு என இந்தப் பலகாரம் அழைக்கப்படுகிறது.

தமிழர்களின் உணவுப் பொருட்களில் விரும்பி உண்ணப்படும் முதன்மைச் சிற்றுண்டிகளில் ஒன்றாகும் என்பதுதான் இதன் சந்தை தேவைக்கு முக்கிய காரணமாகும்.

ஆந்திராவில் ரிங் முறுக்கு, கேரளாவில் தேங்காய் எண்ணெயில் பொறிக்கும் அரி முறுக்கு, கர்நாடகாவில் சக்ரி முறுக்கு, தமிழகத்தில் கைமுறுக்கு, அச்சு முறுக்கு, கல்யாண முறுக்கு, தேங்காய்பால் முறுக்கு, தேன்குழல், பட்டர் முறுக்கு, பூண்டு முறுக்கு, நெய் முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, கார முறுக்கு என பலவகைகள் உள்ளது.

மணப்பாறை மாட்டுக்கும், முறுக்குக்கும் மிகப் பிரபலமானது. திருச்சியைக் கடக்கும் போது மணக்கும் முறுக்கை விலகி ப் போகவே முடியாது. மணப்பாறை நீரின் உப்புத்தன்மையே அதிக ருசிக்கு காரணம் என்கிறார்கள்.

மணப்பாறை ஊரின் நீர் இயற்கையாகவே உப்புத் தன்மையை கொண்ட ஊர். இந்த நீர் கொண்டு தயாரிக்கப்படும் முறுக்கு மிகவும் ருசியாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள். இந்த ஊரில் மட்டும் முறுக்கை இரண்டு முறை எண்ணெயில் பொறித்து எடுக்கிறார்கள். இதுவும் இந்த ருசிக்கு ஒரு காரணம்.

மணப்பாறையில் தயாராகும் முறுக்கு உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்வது இன்றளவும் நடைபெறுகிறது. மணப்பாறையில் 1930- ஆம் ஆண்டுகளில் இம்முறுக்கு தயாரிக்கும் பணி அறிமுகம் ஆனது. இன்றும் பல நூறு குடும்பங்கள் இதை பிரதான குடிசை தொழிலாக இங்கு செய்து வருகிறார்கள்.

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியிலிருந்து மணப்பாறைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று சேரலாம். இங்கு தயாரிக்கப்படும் முறுக்குகள் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் வேலை தேடி நகரங்களுக்கு சென்று விடுவதால் சில குடும்பங்கள் இத்தொழிலை கைவிட வேண்டிய நிலையும் உள்ளது.

மணப்பாறை முறுக்கு செய்முறை | மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி | manapparai murukku

More About : சுயதொழில் என்ன செய்யலாம்

மணப்பாறை முறுக்கு தயாரிக்க தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 1 கிலோ,

உளுத்தம்பருப்பு மாவு – 200 கிராம்,

 சிறிதளவு பெருங்காயம், ஜீரகம், எள், உப்பு மற்றும் ஒமம் 10 கிராம்,

தேவையான அளவு எண்ணெய் மற்றும் நல்ல தண்ணீர்..

மணப்பாறை முறுக்கு தயாரிக்கும் முறை:

பச்சரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பு மாவு இரண்டையும் நன்கு கலந்து அத்துடன் ஜீரகம், எள், பெருங்காயம், ஒமம், உப்பு இவற்றையும் சேர்த்து தண்ணீரை கொஞ்சமாக விட்டுக் கலந்து அத்துடன் சிறிது எண்ணெயும் சேர்த்துப் பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.

இப்படி பிசைந்த மாவை சிறிது, சிறிதாக எடுத்து முறுக்கு அச்சில் வைத்து முறுக்கு போல பிழிந்து அவற்றை சிறிது உலர வைக்க வேண்டும். உலர்ந்த பின் எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த செட் முறுக்குகளை போட்டு பொறித்து எடுக்க வேண்டும். பின் மீண்டும் முதலில் பொரித்த முறுக்குகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

இப்படியாக இரண்டிரண்டு தடவையாக பொறிக்க வேண்டும். பின்னர், காற்று புகாத டப்பாக்களில் வைத்து இறுக்கமாக மூடி விட வேண்டும். பழகி விட்டால் சுமார் 5000 முறுக்குகளை 5 மணி நேரத்தில் தயாரிக்க முடியும். இயந்திரம் தேவையில்லை. ஒரு மாதம் வரை கெடாது. வீட்டிற்காக செய்பவர்கள் சாரணியின் பின்பக்கம் முறுக்கு மாவை பிழிந்து கொண்டு பொரிக்கலாம். எண்ணெய் சட்டியில் கொதிப்பது அடங்கி விட்டால் முறுக்கு வெந்து விட்டது என எடுத்துக் கொள்ளலாம்.

மெல்லிய கம்பி வைத்துக் கொண்டு திருப்பி விட வேண்டும். முறுக்கு எல்லாமே ஒரே மாதிரி கலராக இருக்க வேண்டும். கோவில்களில் பிரசாத ஸ்டாலில் விற்கப்படும் முறுக்கு வெள்ளை கலராக இருக்கும். அரிசி மாவு 5 பங்கு, உளுந்து மாவு 1 பங்கு என்ற விகிதாச்சாரம் சரியாக இருக்கும். வீட்டில் மிக்ஷியில் உளுந்தை அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளலாம். பச்சரிசி மாவு கடையில் கிடைக்கிறது. சலித்துக் கொள்வது அவசியம். உளுந்தை பொன்வறுவலாக வறுத்து அரிசியோடு மெஷினில் அரைத்துக் கொள்ளலாம்.

10 முதல் 15 நிமிடங்கள் உளுந்தை மிதமான சூட்டில் கிண்ட வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே சில நிமிடங்கள் கிளற வேண்டும். லேசான நிற மாற்றம் வரும் வரை உளுந்தை லேசாக வறுக்க வேண்டும். வறுத்த உளுந்து மற்றும் அரிசியை மெஷினில் அரைத்துக் கொண்டு பெருங்காயம் உப்பு வெண்ணெய் போட்டு பிசைந்து கொள்ளலாம். எள் அல்லது ஜீரகம் எது பிடிக்குமோ அதைப் போடலாம். கட்டி இல்லாமல் நன்றாக மாவை பிசைய வேண்டும்.

வெண்ணெய் விட்டு பிசைந்தால் நெய் வாசனை வரும். வெண்ணெய் சேர்த்து பிசைந்த பின்னரே தண்ணீர் சேர்க்க வேண்டும். முறுக்குக்கு அரிசியை ஊற விடக் கூடாது. அரிசியை கழுவி வேஷ்டியில் அல்லது பேப்பரில் காய வைக்கலாம். வெயிலில் அல்லது மின்விசிறியில் காய வைக்கலாம். மாவு தயார் செய்து கொண்ட பின்னர், முறுக்குக்கு எண்ணெய் நன்றாக காயவிட வேண்டும் . கவனமுடன் பிழிந்த முறுக்கை எண்ணெய் சட்டியில் பொறுமையாக போட வேண்டும்.

ரொம்ப தளர் வாகவோ , ரொம்ப கெட்டியாகவோ இல்லாத பக்குவத்தில் மாவு பிசைய வேண்டும். முதலில் கடினமாக இருக்கும். பழக, பழக எளிதாகி நிறைய செய்ய முடியும்.

அரிசி மாவு நன்றாக நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். முறுக்கு மாவு பிசையும் போது கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டால் மாவு கையில் ஒட்டாது. மாவு

பிசைந்த உடன் முறுக்கு பிழிய ஆரம்பித்து விடலாம். இல்லையெனில் மாவு புளித்து விடும். பிசைந்த மாவை வெகு நேரம் வைத்திருந்தால் முறுக்கு வெள்ளையாக வராது . பிசைந்த மாவு ரொம்பவும் தளர்ச்சியாக இருந்தால் எண்ணெய் குடித்து விடும். சுவை இருக்காது. அரை வேக்காட்டில் எடுத்து கொஞ்ச நேரம் விட்டு மீண்டும் பொரித்தால் உள்ளே மாவாக வேகாமல் இருப்பதை தவிர்க்கலாம். மேலும், மொறு மொறு என இருக்கும். இரண்டு முறை பொரிப்பதால்தான் இந்த மொறு மொறு தன்மை எற்படுகிறது.

முறுக்கு அச்சுகள் ஸ்டார்ஃபிளைன் என பல வகை உள்ளது. அதில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டால் மாவு ஒட்டாது. மாவு ரொம்ப திக்காக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். நேரடியாக எண்ணெய் சட்டியில் பிழியாமல் சாரணி கரண்டியின் பின்பக்கம் பிழிந்து போடலாம்.

நீளமான ஊசி போன்ற கம்பியினால் புரட்டிப் போடுவதுடன் வெந்ததும் அதே கம்பியால் எடுக்கவும் செய்யலாம். வீட்டு உபயோகத்திற்காக செய்பவர்கள் வட்ட வடிவிலான சிறிய தட்டுக்களின் பின்பக்கம் வட்டமாக முறுக்கு மாவை பிழி ந்து கொள்ளலாம். பாட்டில் மூடியை சுற்றி கையாலேயே கைமுறுக்கு பிழிபவர்கள் உண்டு. வியாபாரத்திற்காக செய்பவர்கள் குமுட்டி அடுப்பு பயன்படுத்தலாம்.

அந்த காலத்தில் பெரும்பாலான ரயில்கள் மணப்பாறையில் நின்று தண்ணீர் பிடித்து நகரும். திருநெல்வேலியில் இருந்து வந்த கிருஷ்ண ஜயர் அந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி முறுக்கு சுட்டு விற்பனை செய்ய ஆரம்பித்து இருக்கிறார். 60 ஆண்டுகளுக்கு மேலாக முறுக்கு சுடும் குடும்பங்கள் மணப்பாறையில் உள்ளன . கடலை எண்ணெய் பயன்படுத்தலாம்.

பழனியில் இருந்து திருச்சி செல்லும் பஸ் மணப்பாறையில் நிற்கும் போது முறுக்கு பாக்கெட்டுடன் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து இருக்கும் பயணிகளிடம் விற்பவர்கள் உண்டு.

இன்றும் மணப்பாறை என்றாலே மாடு, முறுக்கு என இரண்டும் தான் நினைவில் நிற்கிறது. ஒரு தடவை பொரித்தெடுத்து விட்டு 3 நிமிடம் கழித்து கரகரப்பாக வரும்படி மீண்டும் பொரித்து எடுப்பது தான் வித்தியாசமான ருசிக்கு முக்கிய காரணம். வீட்டு உபயோகத்திற்கு செய்பவர்கள் முறுக்கு மேக்கரில் விட்டு முறுக்கு இழைகளாக தயாரித்து அந்த முறுக்குகளை சில நிமிடம் உலர வைத்து கடலை எண்ணெயில் பொறித்தால் சுவையாக உள்ளது.

முறுக்கு தயாரிப்பதற்கு கடினமான உழைப்பு தேவைப்படுகிறது . குடிசைத் தொழிலாக இதனை வீட்டுக்கு வீடு செய்பவர்கள் விடிகாலை 5 மணிக்கு எழுந்து மதியம் 2 மணி வரை வேலையை முடிக்கிறார்கள். உலகம் முழுவதும் நம் பாரம்பரிய தின் பண்ட ங் களு க் கு ஏங்குபவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள்தான் நமது வாடிக்கையாளர்கள். அவர்களுக்காக மணப்பாறை முறுக்கு இன்று விமானத்தில் பறக்கிறது. நம் மரபு உணவுப் பண்டங்களை செய்வதற்கு ஆளில்லாத நிலை உள்ளது. அதை மீட்டெடுப்பதுடன் நல்ல வருவாயும் பெறலாம். வெளியூர்காரர்கள், சுற்றுலா செல்பவர்கள், ஜயப்ப சாமி கோவிலுக்கு செல்பவர்கள் வீட்டில் நொறுக்குத் தீனி தேவைப்படுபவர்கள் வாங்குவார்கள். மணப்பாறை முறுக்கு

தரமாகவும், சுவையாகவும் செய்தால் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரலாம். ஒரு சில ஆண்டுகளில் மிக உன்னத நிலையை அடையலாம். ( மணப்பாறை முறுக்கு )

more about : மணப்பாறை முறுக்கு விக்கிபீடியா

use search :

manapparai murukku shop in trichy , manapparai murukku online,manapparai murukku famous shop ,manapparai murukku recipe in tamil , manapparai murukku seivathu eppadi , மணப்பாறை முறுக்கு இனி நீங்களும் செய்யலாம்

Similar Posts