முட்டை குருமா செய்வது எப்படி
முட்டை குருமா செய்வது எப்படி

முட்டை குருமா செய்வது எப்படி

முட்டை குருமா செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை – 4

பெரிய வெங்காயம் -2

முழுப் பூண்டு – 1

தேங்காய் -1 மூடி

பச்சை மிளகாய் – 10

இஞ்சி – 1 அங்குலத் துண்டு

கசகசா – 1 ஸ்பூன்

சோம்பு -1ஸ்பூன்

முந்திரி பருப்பு – 10

பட்டை -1

கிராம்பு -3

தக்காளி -2

கொத்துமல்லிதழை – ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – 100 கிராம்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முட்டையை வேக வைத்து தோலை உரித்து கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம்,தக்காளியை நறுக்கவும்.

தேங்காயை துருவி இஞ்சி , பச்சை மிளகாய் , சோம்பு, முந்திரி ,கசகசா சேர்த்து எண்ணெயில் வதக்கவும். வதக்கிய பின்பு அரைக்கவும்.

பின் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் , பூண்டு ,தக்காளி சேர்த்து வதக்கவும்.எல்லாம் வதக்கியதும் அரைத்த விழுதை போட்டு வதக்கவும் . பச்சை வாசனை போக வதக்கியதும்,தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.(egg kurma recipe in tamil)

சுவையான முட்டை பிரயாணி செய்வது எப்படி

குருமா கொதித்து வந்ததும் வேக வைத்த முட்டைகளை நடுவில் கீறி , குருமாவில் போடவும்.

மேலும் சிறிது நேரம் கொதித்தவுடன் கொத்துமல்லி இலையை சேர்த்து இறக்கவும்

இப்போது சுவையான முட்டை குருமா ரெடி.இந்த முட்டை குருமா பிரயாணிக்கு ஏற்றது.(mutta kurma recipe)

முட்டை குருமா செய்வது எப்படி தமிழ்

Use Search :

muttai kurma seivathu eppadi , easy egg kurma , muttai kurma chettinad

Similar Posts