இந்த பதிவில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.மிகவும் எளிமையான முறையில் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்
முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 5
பெரிய வெங்காயம் – 2
தக்காளி -5
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 6 பற்கள்
மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
கறி மசாலாத் தூல் – 1 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்துமல்லிதழை – ஒரு கைப்பிடி
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1 ஸ்பூன்
முட்டை குழம்பு செய்முறை :
வெங்காயம் , தக்காளி, பச்சைமிளகாய் நறுக்கி வைத்துகொள்ளவும்.
துருவிய தேங்காய் உடன் சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
பூண்டை நசுக்கி வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதக்கியதும் நசுக்கிய பூண்டு , தக்காளி , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் வதக்கியதும் மிளகாய்த் தூள் , மஞ்சள் தூள் , கரம் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும். புளியை இரண்டு தம்ளர் தண்ணீர் கரைத்து மசாலாவில் ஊற்றவும் . கூடவே தேங்காய் விழுதைசேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பின் முட்டைகளை ஓவொன்றாக உடைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி வேக விடவும். முட்டை வெந்ததும் கொத்துமல்லிதழை தூவி இறக்கவும்.
இப்போது சுவையான முட்டை குழம்பு ரெடி.
Use Search :
how to make muttai kulambu in tamil , udaitha muttai kulambu in tamil , Muttai Kulambu Seivathu Eppadi