மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் விடைகளுடன்

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

உங்கள் மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் நம் மூளையின் திறனை வளப்படுத்தவும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தவும் அறிவுத்திறனை அதிகரிக்கவும் மூளைக்கு வேலை தரும் கணித புதிர் விடுகதைகள் பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். மூளைக்கு வேலை தரும் குழப்பும் புதிர்கள் விடைகளுடன் கீழே கொடுத்துள்ளேன்.

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் விடைகளை பார்க்காமல் நீங்கள் விடைகள் கண்டுபிடிக்க முயற்சி செய்யவும்.

ஒரு பெரிய ஆலமரத்தில் 100 குருவிகள் அமர்ந்திருந்தன. அங்கு வந்த வேட்டைக்காரன் ஒருவன் 100 குருவிகளில் இரண்டு குருவிகளை சுட்டு வீழ்த்தினான். அப்படியானால் அந்த மரத்தில் மீதி எத்தனை குருவிகள் இருக்கும்?
விடை : ஒரு குருவியும் இருக்காது வேட்டைக்காரனின் வேட்டு சத்தம் கேட்டவுடன் எல்லா குருவிகளுமே பறந்து போயிருக்கும்.

ஒருவன் கூடையில் ஆறு ஆப்பிள் பழங்களை எடுத்து வந்தான். அவன் அந்த பழங்களை ஆறு சிறுவர்களுக்கு சமமாக தர வேண்டும். எந்த பழத்தையும் அறுக்கவோ சிதைக்கவோ கூடாது. ஆனால் ஒரு பழம் கூடைக்குள் இருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அவன் பழங்களை சிறுவர்களுக்கு சமமாக பிரித்து தந்தான். உங்களால் முடியுமா? எப்படி?
விடை : மற்ற ஐவற்கும் கைகளில் தந்து விட்டு ஒருவனுக்கு மட்டும் பலத்தை கூடைக்குள் வைத்து தந்தான்.

சென்னையில் இருந்து புதுவைக்கு ஒரு கார் இரண்டரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் அதே கார் புதுவையில் இருந்து சென்னைக்கு செல்ல 150 நிமிடங்கள் ஆயிற்று காரின் வேகமும் குறையவில்லை வழியில் தடங்கல் ஏதுமில்லை. அதற்கு என்ன விளக்கம் தர முடியும்?
விடை : 150 நிமிடங்கள் என்பது இரண்டரை மணி நேரம்தான்.

மிக எளிமையான குழந்தைக்கான விடுகதைகள் படிக்க.

ஒரு வாத்திற்கு முன்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. ஒரு வாத்திற்கு பின்னால் இரண்டு வாத்துக்கள் உள்ளன. மத்தியில் ஒரு வாத்து உள்ளது. அந்த வரிசையில் குறைந்தது எத்தனை வாத்துக்கள் இருக்க வேண்டும்?
விடை : மொத்தம் மூன்று வாத்துக்கள்.

இதையும் படிங்க 50 விடுகதைகள் தமிழில் விடைகளுடன்.

மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள் மூளையை குழப்பும் வகையில் இருந்தாலும் விடைகள் சுலபமாக இருக்கும். கொஞ்சம் சிந்தித்தால் விடைகளை சுலபமாக கண்டுபிடிக்கலாம் . இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *