மாமரத்தின் பயன்கள் மற்றும் முழு தகவல்களும் | benifits of mango tree
குடும்பம்: அனகார்டியோஸி முக்கனிகளில் ஒன்றான மாங்கனியை தருகின்றன மங்களமான மாமரம் முந்திரி குடும்பத்தை சார்ந்தது. சுமார் 3000 அடி உயரம் கடல் மடத்தில் இருந்து மலை பகுதியில் சாதரணமாக வளரும். காடுகள் , பள்ளத்தாக்குகள், ஆற்றங்கரையில் மாமரம் தானாக வளர்ந்திருக்கும்.(benifits of mango tree in tamil)
மாமரத்தில் பலவகையான கலப்பின ரகம்,ஒட்டு ரகம் உள்ளன.உதய மரம்(lanne eoromandelica) சேரான்கொட்டை(semecar pasanacadium) பூந்திகாய்(sapindus emarginatus) முந்தரி(Anacardium occidentale) போன்ற மரங்கள் இதன் குடுப்பதை சேர்ந்தவை.
இம்மரம் 50 முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் பட்டை நீளவாக்கு வெடிப்புகளுடன் பழுப்பு நிறத்தில் சிறிது சொரசொரப்பாக இருக்கும். கிளைகள் பக்கவாட்டிலோ அல்லது மேல் நோக்கியோ வளரும் . இலை காம்பு சுமார் 2-3 செ.மீ நீளமும் அடிபகுதியில் தடித்துமிருக்கும். விளிம்பு சீராகவும் நுனி கூர்மையாகவும் 15-20 ஜோடி நரம்புகள் இருக்கும் . இம்மரம் ஒரு பசுமை மாறா மரமாகும் .
கிளைகளின் நுனிபகுதி இலைகள் அடர்ந்து காணப்படும்.இலை சுமார் 1அடி நீளமும் 3-5 செ.மீ அகாலமுள்ளது.பூங்கொத்து சுமார் 1 அடி நீளமும் 20-30 அடி அகலம் இருக்கும் . டிசம்பர் – ஜனவரி மாதம் மாமரம் பூக்கும். பூக்கள் இளம் பச்சை நிறத்திலிருக்கும் .அல்லியிதழ்கள் குறுகலாகவும், ஈட்டி வடிவில் நுனி கூர்மையாகவும் இருக்கும். பூக்களில் 10 மகரந்த தாள்கள் இருக்கும்.சூல்பை மேல்மட்ட சூல்பை பூக்கள் இருபால் மலர்கள் , ஆண்மலர்கள், பெண் மலர்கள் என்றிருக்கும். இதில் 40 குரோமோசோம்கள் இருக்கும் .மாவிலை பல நறுமணப் பொருட்கள் கொண்டது.
மாவிலை பயன்கள் | நன்மைகள் Mango Tree Leaf / benifits of mango tree:
மா இலையில் உள்ள இரசாயன பொருட்கள் இன்ப்லுன்சா (influenza) வைரஸ் கிருமிகளை அழிக்கும் .மா இலை மற்றும் பட்டையில் mangiferin 6-9$ வரை இருக்கும் isomagiferi இலையில் உள்ளது இவை அம்மை நோயை உண்டாக்கும் வைரஸ் அழிக்க வல்லது.இது சீர்நீரகம் மற்றும் இதயத்திற்கு பலமளிக்கும்.
மா மரத்தின் விதை பருப்பில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெயில் ஸ்டிரியக் (stearicacid) ஒலியிக் அமிலம் (oleic acid) 86% உள்ளது. மாமரத்தில் பாலில் ரிசார் சினால் (risorcinol) என்ற வேதிப்பொருள் பிரித்தறிய பட்டுள்ளது.இது பூஞ்சான் கொல்லி பண்புடையது.(benifits of mango tree in tamil)
மாவிலை உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி தரவல்லது .இது உடல் எரிச்சல் , இருமல்,வயிற்றுபுண்,வயிற்றுபோக்கு,தொண்டை நோய் ஆகியவற்றை குணபடுத்தும்.
மா இலையை தியில் சுட்டு அதின் சாம்பலை தீ காயத்தின் மேல் வைத்தால் தீ புண் குணமடையும்.
இதன் பூக்கள் இரும்பு சத்து நிறைந்தது . மாம்பழம் மிகவும் சக்தி வாய்ந்தது. பலவிதமான நோய்கள் இரத்தசோகை போக்கும்.மாங் கொட்டை கருப்பை வளர்ச்சிக்கு ஏற்றது மேலும் வெள்ளை படுத்தல் வயிற்றுபோக்கு போன்டவற்றை சீராக்கும்.
மாமரம் கட்டுமான பணிகளுக்கு உதவும் .இதன் காய் ஊறுகாய் போடா அதிகம் பயன்படுகிறது.மாமரம் மூல நட்சத்திரத்திற்குரிய மரம் ஆகும்.(benifits of mango tree in tamil)
mango tree in tamil : மாமரம்