coconut oil benefits in tamil | தேங்காய் எண்ணெய் பயன்கள்
தேங்காய் எண்ணெய் பயன்கள் | coconut oil benefits in tamil
coconut oil benefits in tamil : தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லதா சமையலுக்கு பயன்படுத்தலாமா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நம் அனைவரது வீட்டிலும் கண்டிப்பா இருக்கக் கூடிய ஒரு எண்ணெய் தேங்காய் எண்ணெய் தான். இந்த தேங்காய் எண்ணெய் மிக எளிதில் விலை மலிவாக கிடைக்கக்கூடிய ஒரு எண்ணெய் தான்.
இந்த தேங்காய் எண்ணெய் நாம சமையல்ல அதிகமா பயன்படுத்தறது கிடையாது. ஆனால் கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் அதிகமாக பயன்படுத்தறாங்க ஆனா, உண்மையில தேங்காய் எண்ணெயும் நாம உணவுல சேர்த்து சாப்பிடும்போது மற்ற எண்ணெய்கள் தரக்கூடிய பலன்களை விட இது பல்வேறு விதமான நன்மைகள் நமக்கு தருகிறது.
கெட்ட கொழுப்பு தன்மை இந்த தேங்காய் எண்ணெயில் சுத்தமாக கிடையாது. மற்ற எண்ணெய் பார்த்தீங்கன்னா கெட்ட கொழுப்பு இருக்கும். இதுல கெட்ட கொழுப்பு தன்மை கிடையாது.
பொதுவாக எண்ணெய்-இல் எதாவது ஒரு கொழுப்பு வகை இருக்கும். இந்த தேங்காய் எண்ணையில் நல்ல கொழுப்பு வகை. 85 சதவீதம். 85% நல்லவிதமான ஒரு கொழுப்பு சத்து இருக்கு.
தேங்காய் எண்ணெயில் பல நல்ல சத்துக்கள் இருக்கு அதாவது விட்டமின் ஈ, விட்டமின் கே ,இரும்புச்சத்து இருக்கு எல்லாத்துக்கும் மேல எஸ்ஸென்சியல் லெனோலிக் ஆசிட் ஒலிக் ஆசிட் இந்த மாதிரி பல சத்து பொருட்கள் இருக்கு.
மரச்செக்கு தேங்காய் எண்ணெய் நன்மைகள் – cold pressed coconut oil uses in tamil
முக்கியமா ஒரு சில விஷயங்கள் பற்றி நான் உங்கள்ட்ட சொல்லணும்னு நினைக்கிறேன். முதல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எலும்புகளுக்கு ரொம்ப நல்லது. ஏன் எலும்புகளுக்கு நல்லதுன்னா 45 வயசுக்கு மேல பெண்மணிகள் ரொம்ப கஷ்டப்படுற ஒரு நோய். இந்த தேங்காய் எண்ணெய் சாப்பிடுவதால். எலும்பு டேமேஜ் பண்ண ப்ராசஸ் தவிர்க்கரதாகவும் கூறபடுகிறது.
ஹார்மோன்ஸ் எல்லாத்தையும் சம நிலையில் வைத்துக் கொள்வதற்கு ரொம்ப உதவியா இருக்கு தேங்காய் எண்ணெயில் இருக்கிற நல்ல கொழுப்புகள் தைராய்டு சுரப்பி மற்றும் அட்ரினல் சுரப்பி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
தேங்காய் எண்ணெய் நம்ம உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யா பழம் பற்றி தெரியுமா
இந்த தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே உடல் பருமன் குறைப்பதற்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.
ஸ்கின் டேமேஜ் குறைக்கும் தேங்காய் எண்ணெய்
முகப்பருனால ஏற்படக்கூடிய ஸ்கின் டேமேஜ் சரி செய்ய இந்த தேங்காய் எண்ணெய் முகப்பரு உள்ள இடத்தில் அப்ளை செய்தால் ஸ்கின் டேமேஜ் வருவதை தவிர்காலம்.
நம்ம சாப்பிடற சாப்பாடு நல்லா செரிமானம் ஆகுறதுக்கும் இந்த தேங்காய் எண்ணெய் ரொம்ப உபயோகமா இருக்கும்.
வாய் துர்நாற்றம் நீக்கும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணையை நம்ம வாயில போட்டு கொப்பளிக்கறதுனால (ஆயில் புல்லிங்) வாய் துர்நாற்றம் நீங்கும் இது வாயில் கெட்ட பாக்டீரியாக்களை கொல்லக் கூடியது.
புற ஊதாக் கதிர்கள் தடுக்கும் தேங்காய் எண்ணெய்
காயங்கள் மிக எளிதில் ஆறுவது அது மட்டுமல்லாது சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய யூ வி ரேஸ் ( புற ஊதாக் கதிர் (ultraviolet light) ) தடுக் கூடிய தன்மை இந்த தேங்காய் எண்ணெய்க்கு உண்டு. இந்த தேங்காய் எண்ணெயில் நாம் தலையில் தேய்க்கிறதுனால நம்முடைய உடல் சூடு ஒரு கட்டுக்குள்ள வைக்கப்படுகிறது.
பொடுகு தொல்லை முடி உதிர்தல் பிரச்சனைகள் இருந்து விடுதலை
இந்த தேங்காய் எண்ணெயில் உங்களுக்கு தேவையான மூலிகைகளை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்க்கும்பொழுது பேன் தொல்லை பொடுகு தொல்லை முடி உதிர்தல் இது போன்ற பிரச்சனைகள் இருந்து மிக எளிதில் விடுபடலாம். coconut oil benefits in tamil
தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாமா?
பல வருடங்களுக்கு முன் தேங்காய் எண்ணெயில் உள்ள அதிக கொழுப்பு ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி இதய நோய்களை உண்டாக்கும் என்று வதந்தி பரப்பப்பட்டது. இதை நம்பி பலரும் ரீபண்ட் ஆயிலை சமையலுக்கு பயன்படுத்த தொடங்கினார்கள். ஆனால் தற்போது தான் இதய நோய்களால் உயிரிழப்பு அதிகமாகியுள்ளது. தற்போது தேங்காய் எண்ணெயில் நடந்த ஆராய்ச்சியில் அதில் உள்ள சேச்சுரேட்டட் வகை கொழுப்பு உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்தை வளப்படுத்துவதாக தெரியவந்துள்ளது எனவே தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.
செக்கு தேங்காய் எண்ணெய் விலை
சுத்தமான செக்கு தேங்காய் எண்ணெய் விலை 1 லிட்டர் : ரூ 399 – ஒரு லிட்டர் விலை