கோளறு பதிகம் விளக்கம் மற்றும் எதனால்:

( kolaru pathigam tamil lyrics )நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் வாழ்வில் நலம் கொடுக்கவும் ஆயில் அதிகரிக்கவும்.கோளறு பதிகம் பாடல் பாடபடுகிறது. இந்த கிரக தோஷங்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை தினமும் படிக்க வேண்டும். கிரக தோஷத்தினால் உங்களுக்கு நாள்கள் சரியில்லை என்று தோன்றினால் இந்த கோளறு பதிகம் பாடல் படித்தால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும்.

கோளறு பதிகம் பாடியவர் யார் : திருஞான சம்பந்தர்.

சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர் அடிகளாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு கோளறு பதிகம் ஆகும்.

கோளறு பதிகத்தின் சிறப்புகள் – கோளறு பதிகம் பலன்கள்

முன்வினைப் பயனால் வரும் துன்பங்கள் குறையும்.ஏழரைசனி ,ராகு,கேது,அஷ்டமச்சனியில் இருந்து  நம்மை பாதுகாக்கும் கிரக தோஷத்தினால்  ஏற்படும் துன்பங்களில் இருந்து நம்மை காக்கும் இதுவே கோளறு பதிகத்தின் சிறப்புகள் ஆகும் .கோளறு பதிகம் சக்தி வாய்ந்தவை ஆகும் கோளறு பதிகத்தை தினமும் படிப்பதால் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.

kolaru pathigam tamil lyricsகோளறு பதிகம் lyrics

கோளறு பதிகம் முதல் பாடல்:

1. வேயுறு தோளிபங்கன்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே.

கோளறு பதிகம் இரண்டாவது பாடல்:

2 .என்பொடு கொம்பொடாமை

என்பொடு கொம்பொ டாமை இவைமார்பி லங்க
எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் மூன்றாம் பாடல்:

3. உருவளர் பவள மேனி

உருவளர் பவள மேனி ஒளிநீற ணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி
திசைதெய்வ மான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் நான்காம் பாடல்:

4.மதிநுதல் மங்கையோடு

மதிநுதல் மங்கை யோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் ஐந்தாம் பாடல்:

5.நஞ்சணி கண்டன் எந்தை

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள்த னோடும்
விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் ஆறாம் பாடல்:

6.வாள்வரி அதளதாடை

வாள்வரி அதள தாடை வரிகோவ ணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே

கோளறு பதிகம் ஏழாம் பாடல்:

7. செப்பிள முலைநன் மங்கை

செப்பிள முலைநன் மங்கை ஒருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் எட்டாம் பாடல்:

8. வேள்பட விழி செய்து

வேள்பட விழிசெய் தன்று விடைமேலி ருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்த னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

கோளறு பதிகம் ஒன்பதாம் பாடல்:

9. பலபல வேடமாகும்

பலபல வேட மாகும் பரன்நாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெ ருக்கு முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே

கோளறு பதிகம் பத்தாம் பாடல்:

10.கொத்தலர் குழலியோடு

கொத்தலர் குழலி யோடு விசயற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியு(ம்) நாகம் முடிமேல ணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே!

கோளறு பதிகம் பதினோறாம் பாடல்:

11.தேனமர் பொழில்

தேனமர் பொழில்கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் திகழ
நான்முகன் ஆதி யாய பிரமாபு ரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

kolaru pathigam lyrics in tamil pdf free download

kolaru pathigam tamil lyrics Download Pdf — click here to download

கோளறு பதிகம் சீர்காழி கோவிந்தராஜன்

பாடல் : கோளறு பதிகம் சீர்காழி கோவிந்தராஜன் Youtube Link

கோளறு பதிகம் புத்தகத்தை ( kolaru pathigam tamil lyrics )  Amazon-ல் வாங்க கீழே உள்ள Link ஐ clcik செய்து வாங்கிக்கொள்ளவும் .

kolaru pathigam tamil lyrics Kolaru Pathigam Moolamum Uraiyum (A-4 Size) With Images / கோளறு பதிகம் மூலமும் உரையும்  BUY NOW

kolaru pathigam tamil lyrics கோளறு பதிகம் மூலமும் உரையும் / Kolaru Pathigam Moolamum Uraiyum (A-3 Size) With Images BUY NOW 

Permalink : https://blogtoday.in/kolaru-pathigam-tamil-lyrics/

Our Blogspot : i5info

Use Search for :
கோளறு பதிகம் , veyuru tholi pangan , திருஞானசம்பந்தர் பாடல் , thirugnana sambandar in tamil , வேயுறு தோளிபங்கன் , கோளறு பதிகம் வரலாறு , கோளறு பதிகம் pdf download, Kolaru pathigam meaning in tamil , கோளறு பதிகம் பாடல்கள் , kolaru pathigam tamil lyrics , திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் , veyuru tholi pangan lyrics in tamil , வேயுறு தோளிபங்கன் பாடல் வரிகள் , kolaru thirupathigam , அயிகிரி நந்தினி தமிழில் , கோளறு பதிகம் வேயுறு தோளிபங்கன்