KOLI AVARAI / KOZHI AVARAI SEEDS / கோழி அவரை
KOLI AVARAI / KOZHI AVARAI SEEDS / கோழி அவரை | BUY ONLINE
கோழி அவரை(koli avarai) சமைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.கோழி அவரை நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் பொட்டாசியம் மற்றும் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது.
கோழி அவரை(KOLI AVARAI) விதை விதைப்பது எப்படி :
கோழி அவரை விதை(Kozhi Avarai Seeds ) விதைத்து 6 முதல் 8 நாட்களுக்குள் சிறிய முளைகள் தெரியும். கோழி அவரை விதை விதைபதற்க்கு செம்மண் ஏற்றவை ஆகும் அல்லது கரிசல் மண் .
நீங்கள் மாடி தோட்டத்திலும் கோழி அவரை விதைக்கலாம்.இதற்க்கு Grow Bags அல்லது தொட்டி காட்டாயம் தேவை.
Grow Bags -இல் செம்மண் நிரப்பவும் பின்பு விதையை அரை இன்ச் க்குள் நடவும் .விதையை நட்டவுடன் தண்ணீர் விடவும்.பின்பு முன்றாவது நாள் மீண்டும் கட்டாயம் உயிர் தண்ணீர் விடவும். பின்பு காலநிலைக்கு ஏற்றவாறு தண்ணீர் விடவேண்டும்.
கோழி அவரை(Kozhi Avarai Seeds) விதைத்து 45 முதல் 50 வது நாள் பூ- பூக்க ஆரம்பிக்கும்.தாவரம் எவ்வளவு நாட்களுக்கு உயிர்வாழுகிறதோ அது வரை அறுவடை காலம் தொடரும்.
விதை விதைப்பதற்க்கு முன் பஞ்சகவ்யா 15 நிமிடம் ஊறவைத்து விதைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அதிக அறுவடை பெறமுடியும்.