mokka jokes in tamil with answers | மொக்க ஜோக்ஸ்

மொக்க ஜோக்குகள் என்பது ஒரு வகையான நகைச்சுவை, இது ஒரு எதிர்பாராத முடிவால் சிரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஜோக்குகள் பெரும்பாலும் தர்க்கரீதியாக தப்பாக இருக்கும் அல்லது ஒரு எளிமையான கேள்விக்கு ஒரு விசித்திரமான பதிலைக் கொண்டிருக்கும்.சரி, கீழே சில மொக்க ஜோக்ஸ் விடுகதை பதிவிட்டுள்ளேன்.

mokka jokes in tamil with answers

மொக்க ஜோக்ஸ் விடுகதை
பெண்: சார் நான் மாசமா இருக்கேன்…
மேனேஜர்: அதுக்கு என்னம்மா?
பெண்: நீங்கதானே சொன்னீங்க மாசமான சம்பளம் தருவேனு?
ராதா: வாயாடி மாமியா கிட்ட என்னால கத்த முடியல….!
சீதா: அதனலா என்னடி செஞ்சே?
ராதா: ரெண்டு நாயை வாங்கிக் குரைக்க விட்டுட்டேன் கத்துனு.
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணை கட்டிக் கொடுப்பேன்.
மற்றவன் : உங்க வீட்டு கன்று குட்டியை பிடிச்சா இளையபெண்ணை கூட தருவீங்களா.
ஒருவன்: ???
நண்பர் 1: சினிமா பீல்டுல நுழைஞ்சிடலாமுன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்.
நண்பர் 2  : யார் அது ?
நண்பர் 1: ஸ்டூடியோ வாட்ச்மேன் தான்.
ஒருவன்: பில்லை நானே கொடுக்கிறேன் சொன்னா என் காதலியை நம்பி ஹோட்டலுக்கு சாப்பிட போனது தப்பா போச்சு.
மற்றொருவன்: ஏன்?
ஒருவன்: பிள்ளை நான் கொடுக்கிறேன் பணத்தை நீ கொடுத்துவிடு என்று கடைசில சொல்லிட்டாள்.
ஒருவர்: அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர்பார்ப்பார்.
மற்றவர்: ஏன்?
ஒருவர்: அவர்தான் கைரேகை ஜோசியம் பார்பாரு அதான்..
ஒருவர்: பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிவிட்டார் அப்படி என்ன சொன்னாங்க?
மற்றவர்: பொண்ணுக்கு சமைக்க தெரியுமா சொன்னாங்களாம்…..
ஒருவர்: ???
ஒருவர்: பாட வந்தவங்க எதுக்கு கையில் கிளவுஸ் எடுத்து மாட்டுறாங்க?
மற்றவர்:: குத்துப்பாட்டு பாட போறாங்களாம் அதுதான்.
ஒருவர்: ???
ராணி: என் மாமியார் இறந்துட்டாங்க நானும் எவ்வளவு முயற்சி செய்து பார்த்தாலும் அழுகையே வரமாட்டேங்குது என்ன செய்யறது?
வாணி: ஒன்னும் செய்ய வேண்டாம். அவங்க திரும்பி உயிரோட வர்றதா நெனச்சுக்க அழுக தானா வரும்
ராணி: ???
mokka jokes questions and answers in tamil smiles

mokka Jokes vidukathai in tamil

மொக்க ஜோக் சொல்லு
அருண்: சார் என் மனைவி இரண்டு நாளா காணோம்.
போலீஸ்: ரெண்டு நாளை என்னய்யா பண்ண?
அருண்: எங்கு திரும்பி வந்துடுவாளோனு பயந்துகிட்டு இருந்தேன் சார்.
ஒருவர்: அந்த கட்சியில் உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்து இருக்காங்களே என்ன வேலையா?
மற்றவர்: கட்சியோட கொள்கை என்னன்னு கடைபிடித்து அதை பரப்பனுமாம்.
ஒருவர்:???
தொண்டன் 1: தேர்தல் நேரத்துல நான் நாயா உளைச்சேன்னு தலைவர் மேடைல பேசினது தப்பா போச்சு.
தொண்டன் 2: ஏன் என்னாச்சு.
தொண்டன் 1: இப்பெல்லாம் கூட்டத்தில் யாரும் தக்காளி முட்டை வீசுவதில்லை பிஸ்கட் தான் வீசுறாங்க.
நண்பர் 1 : போகி ஸ்பெஷல் லைவ் ப்ரோக்ராமுக்கு வந்த டைரக்டர் ஏன் கடுப்பாகிவிட்டார்?
நண்பர் 2 : போன்ல ஒரு நேயர் உங்க படம் மக்கும் குப்பையா மக்கா குப்பையா என்று கேட்கிறான்.
நண்பர் 1 : ???
தொண்டர் 1: தலைவர் மேல சுற்றுச்சூழல் பாதிப்பு வழக்கு போட்டு இருக்காங்களா ஏன்?
தொண்டர் 2:  போகிக்கு அவரோட பழைய குற்ற பத்திரிகைகளை எரிச்சாரம் அதுதான்..
தொண்டர்கள்: கட்சிக்காரர் பொங்கல் அன்னைக்கு தலைவர் கட்சிக்காரங்க எல்லோருக்கும் பொங்கல் கொடுத்தார்னு சொன்னா ஏன் நம்ப மாட்டாங்க?
ஒருவர்: அவர் வழக்கமா எல்லோருக்கும் அல்வா தான கொடுப்பாரு
கட்சிக்காரன்:??
தொண்டர் 1 : கடைசியா தலைவர் வந்து வந்ததும் தான் பொங்கல் பானை பொங்குச்சு
தொண்டர் 2: அநியாயத்தை கண்டதும் பொங்கிடுச்சுன்னு சொல்லு.
தொண்டர் 1: பொங்கல் விழாவை ஆரம்பித்து வைக்க போன தலைவர் ஏன் சோகமா இருக்கார்?
தொண்டன் 2 : செருப்பு வீசுறதுக்கு பதிலா எல்லாருக்கும் கரும்பு திண்ணிட்டு அவர் மேல சக்கை எறிஞ்சிட்டாங்களாம்.
தொண்டன் 1: ??
தொண்டர் 1: தலைவர் வீட்டில் பொங்கல் இனம் வாங்கப் போனவங்க ஏன் கடுப்பாக போறாங்க?
தொண்டர் 2 : ரூபாய் நோட்டுல தலைவர் ஸ்டிக்கரை ஒட்டி இருக்கார் அதுதான்.
தொண்டர் 1:
தலைவர்: என்னையா அது நான் எங்க போனாலும் எனக்கு எதிர்ல ஜனங்க வரிசையாக வந்து நிற்கிறார்கள்?
தொண்டர்: நீங்க நடமாடும் ஏடிஎம் என எதிர்க்கட்சிக்காரன் பொருளை கிளப்பி விட்டுட்டான் தலைவரே.
தலைவர்: ??? 

Mokka jokes questions and answers in tamil

mokka joke questions in tamil
தோழி 1: இதோட எனக்கு பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு யாரையுமே பிடிக்கல
தோழி 2: உங்க அம்மாவை போல ஒரு பெண்ணை பார்க்க வேண்டியது தானே.
தோழி 1: பார்த்தோம் ஆனா எங்க அப்பாவுக்கு பிடிக்கலையே.
ராமு: உன்னுடைய கார் பெயர் என்ன
சோமு: சரியாக ஞாபகம் இல்லை ஆனால் A&2179 ஆரம்பிக்கும்.
ராமு: பரவாயில்லையே என்னுடைய கார் பெற்றுள்ளதன் ஆரம்பிக்கும்.
தரகர்: மாப்பிள்ளை மெகா சீரியல் நடிக்கிறார்.
பெண்: அப்போ மாப்பிள்ளை நிரந்தர வேளையில் இருக்கிறார் என்று சொல்லுங்கள். 
தோழி 1: உன் கணவர் உடம்புக்கு முடியாமல் படுத்து படிக்க கிடந்தாரே இப்ப எப்படி இருக்கார்?
தோழி 2 :ஏதோ பரவாயில்லை காலைல எந்திரிச்சு காபி மட்டும் போட்டு தர்றார்.
தொண்டன் 1: தலைவரால் சட்டசபையில் அதிர்ந்திடுச்சாம்.
தொண்டன் 2: அடேங்கப்பா அப்படி என்ன பேசினாரு பேசலையே குறட்டை விட்டுட்டாரு.
தொண்டன் 1 : ????
தொண்டன் 1: வாகனங்கள் திரும்புற வளைவிலே ஏன் பொதுமக்கள் பொதுக்கூட்டம் நடத்துறாங்க?
தொண்டன் 2: இந்த மீட்டிங் திருப்புமுனியா இருக்கும்னு தலைவர் சொல்லிட்டார். தொண்டன் 1:????????
கண்டக்டர்: யோவ் டிரைவர் நான் மூன்று முறை விசில் அடித்து வண்டி நிக்கலையே ஏன்?
டிரைவர்: அட போயா நான் ஆறு முறை பிரேக் அடிச்சு வண்டி நிக்கல நீ வேற.
தலைவர்: என்னது குற்றம் பண்ணிட்டு ஜாமீன் கேட்காமல் இருக்கணுமா என்ன சொல்ற நீ?
தொண்டர்: நீங்க தானே தலைவரே இந்த வருஷம் பொங்கல ஜெயில்ல கைதிகளோடு கொண்டாடணும் சொன்னீங்க அதான் தலைவர்.
நண்பர் 1: பல் டாக்டரை பார்க்கப் போனேன் அங்கே லேடி டாக்டர் இருந்தாங்க திரும்பி வந்துட்டேன்.
நண்பர் 2: ஏன்டா?
நண்பர் 1: நாம எந்த பொண்ணுகிட்டயும் பல்ல காட்டி நிற்க கூடாது இல்ல அதான்.
ஒருவர்: இந்த ஊர்ல சாப்பாடு எங்க விற்கும் (விக்கும்)
மற்றவர்: இந்த ஊரில் மட்டுமல்ல எந்த ஊர்ல சாப்பாடு சாப்பிட்டாலும் சாப்பாடு தொண்டையில் தான் விக்கும் .
ஒருவர்: ????

புதிர் விடுகதைகள் படிக்க

மொக்க ஜோக்குகள் அல்லது நகைச்சுவை விடுகதைகள் ( mokka jokes in tamil with answers ) சிலருக்கு பிடிக்கலாம், மற்றவர்களுக்கு பிடிக்காம இருக்கலாம். சிலர் இந்த ஜோக்குகள் நகைச்சுவையாக இல்லை என்று நினைக்கலாம், மற்றவர்கள் இந்த ஜோக்குகளின் எதிர்பாராத முடிவுகள் சிரிப்பை ஏற்படுத்தலாம்.