ponnanganni keerai benefits in tamil : பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் பத்து விதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
Table of Contents
ponnanganni keerai – பொன்னாங்கண்ணிக் கீரையின் மருத்துவ பயன்கள்:
பொன்னாங்கண்ணிக் கீரையின் தாவரவியல் பெயர் Alternanthera sessilis வாரத்தில் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதை கடைப்பிடிக்கிறார்கள் பலர் இதை கடைப்பிடிப்பதில்லை.
நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்து விடுகின்றன அதனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது.
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்கு பொருந்தக்கூடியது. கீரையை பச்சையாகவோ சமைத்த சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் பல நோய்களை குணப்படுத்தவும் முடிகிறது.
கீரையை போன்ற உணவு வேறு எதுவும் இல்லை. கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியமும் இல்லை என்றார்கள் நம் முன்னோர்கள். அதற்கு ஏற்ப பல உன்னதமான கீரை வகைகள் நம்ம மண்ணில் விளைகின்றன அதில் பொன்னாங்கண்ணி கீரை மகத்துவம் நிறைந்தது.
பொன்னாங்கண்ணி கீரை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது அதனால் தான் இதை பொன்னாங்கண்ணி என்று அழைக்கின்றனர்.
பொன்னாங்கண்ணியில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணி என்று இருவகைகள் உள்ளன.
இதில் நாட்டு பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.
கீரை வகைகளில் சிறந்த இந்த பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், விட்டமின்கள் ஏ, விட்டமின்கள் பி மற்றும் விட்டமின்கள் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடையும் கண்பார்வையும் கூர்மையாகும்.
மூல வியாதிக்கும் பித்தப்பைக்கும் மிகவும் நல்லது. கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணி கீரை( ponnanganni keerai ) பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புதமான உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.
இதன் மருத்துவ பலன்களை பற்றி இங்கே பார்க்கலாம். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம் இதற்கு பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது.
பொன்னாங்கண்ணி கீரையுடன் உப்பும் மிளகும் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
பொன்னாங்கண்ணி கீரை(ponnanganni keerai) உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் உடல் எடையை கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு நெய்யுடன் சேர்த்து பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் என்பது பொன்னாங்கண்ணி கீரையின் தனித்தன்மை.
கல்யாண முருங்கை உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி படிக்க
பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலிமை பெருகும் எலும்புகள் உறுதியாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை முத்துணர்வு பெறுகிறது பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
பொன்னாங்கண்ணிக் கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் பொன்னாங்கண்ணிக் கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது.
இந்த கீரையை சாப்பிட்டு வர அழகு மேம்படும் பொன்னாங்கண்ணிக் கீரையை நன்றாக நீரிலிட்டு கழுவி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த ரத்தம் சுத்தமாகும்.

இரவில் சரியாக தூக்கம் இல்லாத காரணத்தாலும் நீண்ட நேரம் செல்போன் கணினி போன்ற சாதனங்களை பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சிவந்து போதல் பிரச்சனை நீங்கும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
கரிசலாங்கண்ணி கீரையின் பல்வேறு பயன்கள் பற்றி அறிய
பொன்னாங்கண்ணி கீரையை தைலமாக தயாரித்தும் பயன்படுத்தலாம். அதாவது கீரையின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகு பதம் வரும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி அந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல் உடல் சூடு ஆகிய பிரச்சினைகள் சரியாகும். புத்துணர்வு கிடைக்கும் கண்பார்வையும் தெளிவாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையின் பெயர்கள் | ponnanganni keerai name :
- அண்டர் நிலை அலகு
- அனுமான் சக்கா
- அணுமாசக் கண்ணி
- இந்திரானூரி
- இந்திராணி காணி
- உடுக்காட்டி
- உம்பரூர்
- உழவணிகச் செடி
- உழவணிகம்
- கடுஞ்சீ தளத்தி
- கண்ணுக்கனி மூலம்
- கண்ணுக்கினியாள்
- கரிப்பாலை
- கல்லுக்கலை காத்தான்
- கல்லுக்கவைத்தளை
- கற்பூரக்கண்ணி
- காணி
- காரியசித்தி
- காயசித்தி
- காளவடிவழகி
- கொடுப்பை
- சகச்சை
- சகாதேவி
- சிந்தாமணி
- சித்தமன்
- சித்தி
- சிதகி
- சிதசிக்கண்ணிச்செடி
- சிதம்பூரம்
- சிதலிச்செடி
- சிதளி
- சீமைப்பொன்னாங்கண்ணி
- சீதளசக்தி
- சீதளி
- சீதனி
- சீதப்புறம்
- சீதலிச்செடி
- சீதாபூரம்
- சீதேவி
- சீதேவிச்செடி
- சீதை
- சீரணிக்கண்ணிச்செடி
- சீரிணம்
- சுகதிர
- சுவாது வர்ணம்
- சூரைமான்
- சூரைமார்கண்ணி
- செங்கண்ணி
- செம்புசத்துமூலி
- சோமகண்ணி
- சோமவல்லரி
- தசமைக்கண்ணி
- திரேகசித்தி
- தியாகக்கண்ணி
- தீயாக்கரை
- தேவரூர்
- நட்சத்திரத்தோன்றி
- நாட்டுப்பொன்னாங்கண்ணி
- நிரோவடி
- நேத்திரநாசி
- பகல் நட்சத்திரத்தோன்றி
- பத்தூரம்
- பதுமாலயம்
- பித்தசாந்திபூனாற்கண்ணிக்கீரை
- பெருங்கொடுப்பை
- பொற்கண்ணி
- பொற்காணி
- பொன்காளி
- பொன்மூலி
- பொன்மேனி
- பொன்னாங்கண்ணி
- பௌதிக மங்கை
- மச்சாக்கி
- மச்சிக்கண்ணி
- மச்சியாத்தி
- மீனாட்சி
- மூசி
- மைசாட்சி
- வரிக்கண்ணி
- வத்தூரம்
- வாது வர்ணம்
- வானநாடி
- விண்ணுக்குள் மூர்த்தி

பொன்னாங்கண்ணி கீரையின்(ponnanganni keerai) தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊற்றி வைத்தாலே செடி நன்றாக வளர்ந்து விடும் இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்த்து நிறைய பயன்களை பெறலாம்.