சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai

சமையல்

சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai :

seerani mittai : விருதுநகரில் இருந்து பாலவநத்தம்தான்( seerani mittai ) சீரணி மிட்டாயின் பிறப்பிடம். ஏழைகளின் ஜாங்கிரி இது தான் . தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு இது. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கைவிரல்கள் அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கிறது. அரிசிமாவு, உளுந்துமாவு, வெல்லம் சேர்த்து பாமர மக்களுக்காக செய்யப்படும் ஒரு இனிப்பு வகை.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, மற்றும் பாலவநத்தம் பகுதிகளில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும் .

மதுரை , சாத்தூர் , கோவில்பட்டி, இருக்கன்குடி, கமுதி, திருச்சுழி, போன்ற ஊர்களிலும் மிகப் பிரபலமாக உள்ளது. விருதுநகருக்கும் அருப்புக்கோட்டைக்கும் இடையில் இருக்கும் ஊர்தான் பாலவநத்தம். மிக சிறிய ஊர். இங்கு சீரணி மிட்டாய் விற்கும் கடைகள் பத்துக்கும் மேல் உள்ளன. பஸ் நிறுத்தத்தில் பேருந்து நிற்கும் போது கீழே இறங்கி பயணிகள் சீரணி மிட்டாய் வாங்குவதை அங்கு பார்க்கலாம். இந்த ஊரின் சிறப்பும், பெருமையும் சீரணி மிட்டாய்தான்.

சீரணி மிட்டாயில்( seerani mitta ) இரண்டு வகை உள்ளது. வெல்ல சீரணி, கருப்பட்டி சீரணி, அதையே கருப்பு மற்றும் வெள்ளை சீரணி மிட்டாய் என்றும் சொல்கிறார்கள் இன்றைய

நாட்களில் கருப்பட்டியை மக்கள் அதிகம் விரும்புவதில்லை. வெல்ல சீரணி மற்றும் சர்க்கரை சீரணி அதிகமாக கிடைக்கிறது. சின்ன சின்ன வலையங்களாகச் சுற்றி இனிப்பில் முக்கி எடுத்தால் அது ஜிலேபி, பெரிய சைஸில் நீளமான டிசைனில் இருந்தால் அதுதான் சீரணி மிட்டாய். சீரணி மிட்டாயை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டு போகாது

என்கிறார்கள் . ஓவ்வொரு கடைக்கும் ஒரு  டிசைன் இருக்கிறது . ஜாங்கிரி சாப்பிடும்போது மெது மெதுவென்று இருக்கும். இந்த சீரணி என்பது சற்று கடினமான இருக்கிறது அவ்வளவுதான்.

திருவிழா கடைகளில் பார்க்க முடிகிறது. மலைபோல அடுக்கப்பட்டிருக்கிறது . அழகாக வரைந்த கோபுரம் போல ஆளுயுயரத்திற்கு சுற்றிச் சுற்றி கட்டப்பட்ட இனிப்பு கோபுரம் எனலாம். சீராக அணி வகுத்து அடுக்கியதால்தான் இந்த பெயர் வந்திருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. ஜிலேபி, தேன் மிட்டாய் போன்ற சுவையில், சுத்தி சுத்தி சுடப்பட்ட இனிப்பு முறுக்கு போல உள்ளது. தென் மாவட்டங்களில் இது பிரபலமானது என்பதால் தெக்கத்தி சீரணி மிட்டாய் எனவும் சொல்வதுண்டு. அத்துடன் ஏணி மிட்டாய், சீனி மிட்டாய், மற்றும் ரயில் மிட்டாய் என ஊருக்கு ஒரு பெயர் உள்ளது.

சீரணி மிட்டாய் தேவையான பொருட்களும் செய்முறையும் ( seerani mittai ):

பச்சரிசி மாவு மற்றும் உளுத்தம் பருப்பு மாவை அரைத்தவுடன் எடுத்து கொதிக்கும். எண்ணெயில் ஜாங்கிரி போல சுற்ற வேண்டும். மாவு நன்றாக பொரிந்து வந்ததும் அதை எடுத்து வெல்லப்பாகில் சில நிமிடங்கள் ஊற வைத்தால் சீரணி மிட்டாய் தயார்.

சீரணி மிட்டாய் செய்ய தேவையான பொருட்கள் ( seerani mittai ):

பச்சரிசி மாவு அரை கிலோ, உளுந்து 50 கிராம், சுக்கு 1 டிஸ்பூன், வெல்லம் 750 கிராம். பச்சரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்

கொள்கிறார்கள். சர்க்கரையை அல்லது வெல்லத்தை சுடுதண்ணிரில் கரைத்து வெல்லப்பாகு பதமாக தயாரித்து தனியாக வைத்துக் கொளகிறார்கள். பெரிய சைஸ் துளை போடப்பட்டு இருக்கும் துணியில் அரிசி மாவை வைத்துக் கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவது போல் பிழிகிறார்கள் .

நன்றாக வெந்ததும் வெல்லப்பாகில் 10 நிமிடங்கள் ஊற வைத்து வெளியே எடுத்தால் சீரணி மிட்டாய் தயாராகி விடுகிறது. பச்சரிசி மாவில் உளுந்து, சுக்கு, ஏலக்காய் கலந்து ஊற ஒன்றாக வைத்தும் அரைத்துக் கொள்ளலாம். பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து சூடான வெல்லப்பாகில் சில நொடிகள் முழ்க வைத்து எடுக்க வேண்டும். மாவு பதமும், சூடும் ரொம்ப முக்கியம். அரிசி மாவில் இரு மடங்கு வெல்லம் இருக்க வேண்டும். சர்க்கரை என்றால் ஒன்றே கால் மடங்கு போதும். பாகு லேசான பிசுபிசுப்பு பதமே போதும். தயாரிப்பதற்கு மிக மிக எளிதானதாகவும், அருமையான சுவையும் கொண்ட இந்த பாரம்பரிய இனிப்பை வீட்டிலேயே செய்யலாம்.

பச்சரிசி மாவையும், உளுந்து, ஏலக்காய், உப்பு, சுக்கையும் ஒன்றாகக் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைப்பது முக்கியம். சர்க்கரை பாகு பதம் சரியாக இருக்க வேண்டும். மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்ததும் பால் பாக்கெட்டில் சிறு துளை இட்டு அதில் மாவை நிரப்பியும் நேரடியாக எண்ணெயில் கைவிடாமல் முடிந்தவரை பிழியலாம். இருபுறமும் திருப்பி வெந்து லேசான மொறு மொறுப்பு வந்ததும் எடுத்து உடனே பாகில் மூழ்க வைத்து சில நொடிகளில் எடுத்து தனியே வைத்து ஆறியதும் அடுக்கவும். பாகில் அதிகம் ஊறினால் மிட்டாய் உடைந்து வடிவம் மாறி விடும். மேலே சிறிது மொறு மொறுப்பு உள்ளே மிருதுவானதும்தான் சீரணி மிட்டாயின் தன்மை.

அதிக சூட்டில் எண்ணெய் காய்ந்தால் கருகிவிடும் வாய்ப்பு அதிகம் . சி ல இடங்களில் பித்தளை சொம்பில் ஒரு ஓட்டை போடப்பட்டுள்ளது . மாவை நிறைத்துக் கொள்கிறார்கள். எண்ணெய் காய்ந்தவுடன் சொம்பில் இருந்து வலையம் போல் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து ஜீராவில் நனைத்து எடுக்கிறார்கள்.

ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம். கிட்டத்தட்ட ஜிலேபி, ஜாமூன், தேன் மிட்டாய் எல்லாம் கலந்த ஒரு சுவை. சுத்தி சுத்தி சுடப்பட்ட இனிப்பு முறுக்கு போல் உள்ளது. கடைகளில் 2-3 அடி உயரத்தில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மிட்டாயை சுற்றி சுற்றி அடுக்குவதே ஓரு கலைதான் . இதை மறை என்று அழைக்கிறார்கள். ஒரு மறை என்பது 20 கிலோ மிட்டாய் ஆகும். நாள் ஒன்றுக்கு சுமார் 3 மறை சுடப்படுகிறது. கருப்பட்டி மிட்டாயை விட சர்க்கரை மிட்டாய் விலை சற்று குறைவாக உள்ளது.

வெளிமாநிலங்களுக்கும் பாலவநத்தம் கிராமத்தில் இருந்து இந்த சீரணி மிட்டாய்

மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி

ஏற்றுமதி செய்யப் படுகிறது. தொடர்ந்து கால் கிலோ சாப்பிட்டாலும் திகட்டாது. உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. சுவை நம்மை இழுக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேன்குழல் என்ற பெயரில் விற்கிறார்கள். விதவிதமான இனிப்பு வகைகள், சாக்லேட்- க்கள் என இன்றைய குழந்தைகள் கார்ப்பரேட் இனிப்புகளுக்கு மாறி வரும் வேளையில், நம் பாரம்பரிய இனிப்பான சீரணி மிட்டாய் ஆறுதல் தருகிறது. பொதுவாக நல்ல சுவையுடன் இருந்தால் எல்லோரும் வாங்குவார்கள். புதிதாக சற்று வித்தியசமாக எதை செய்தாலும் வாடிக்கையாளர்களை கவர முடியும். நாளடைவில் எல்லோருக்கும் விருப்பமானதாக ஆகிவிடும். உறவுக்காரர்கள் வரும்போது வாங்கி வருவார்கள்.

நம் பாரம்பரிய உணவு வகைகளில் இதுவும் ஒன்று. கெமிக்கல் இல்லை. உடலுக்கு நல்லது. விடுமுறை நாளில் ஒரு மணி நேரம் மெனக்கெட்டால் வீட்டிலேயே செய்து விடலாம். கடையில் வாங்கித் தரும் ஸ்னாக்ஸ் அயிட்டங்கள் விலை அதிகம். இது சிக்கனமாக உள்ளது. ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வந்தது ம் பசியுடன் நம் பிள்ளைகள் நொறுக்குத் தீனிக்கு  ஏங்குவார்கள் .

seerani mittai – இதை செய்து பழகினால் சிறுதொழில் போலவும் செய்யலாம். சிறு முதலீட்டில் சுய தொழில் வேலைவாய்ப்பாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

Use Search : seerani mittai seivathu eppadi tamil , seerani mittai at home , seerani mittai எப்படி செய்ய?தொடர்புடைய கட்டுரைகள்