suya tholil in tamil
suya tholil in tamil

பல மடங்கு லாபம் தரும் சுயதொழில் suya tholil in tamil

சுயதொழில் என்ன செய்யலாம் | suya tholil in tamil :

சுய தொழில் ( suya tholil in tamil )முனைவை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை விட தற்போது நல்ல வளர்ச்சியை ( suya tholil in tamil )ஏற்பட்டிருந்தாலும் ஒரு பக்கம் முதலீடு இல்லை என்ற முணுமுணுப்புகளும் சரியான வாய்ப்புகள் இல்லை என்றும் சலசலப்புகளும் இங்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

குறிப்பாக நல்ல புதிய வாய்ப்புகள் இல்லை என்ற ஆதங்கம் சிறு தொழில் முனைவோரிடையோ பெரிதும் காணப்படுவதால் இன்றைய தேதியில் அந்த சிலரின் குறையை போக்கக்கூடிய தொழில்கள் பற்றி அலச தொடங்கினோம். அவ்வழியில் கிடைத்த ஒரு அருமையான தகவல்மாற்று வாய்ப்புகளை தேடும் நம் சிறு தொழில் முனைவோருக்காக.

wastage recycle business
wastage recycle business

கடந்த சில ஆண்டுகளில் சிறு தொழில் கடுமையான போட்டிகள் இருந்தாலும் கைமேல் பலன் தரும் சில புதிய தொழில் வாய்ப்புகளும் உருவாகித்தான் உள்ளன. அவற்றில் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் இருப்பது கழிவை காசாக்கும் தொழில். கழிவுகளிலிருந்து உபயோகமான ஆக்கபூர்வமான பொருட்களை தயாரிக்கும் தொழிலானது கடந்த சில ஆண்டுகளாக கனஜோராக நடந்து வருகிறது. கழிவுப் பொருள்களில் கலைத்திறனை புகுத்தி கலை, கைவினைப் பொருட்களை தயாரித்தும் முன்னேறி வருகிறார்கள் ஒரு சிலர். மற்றும் சிலர் வீடுகள், தொழிலகங்களுக்கு உபயோகமான மதிப்புகள் காட்டன் வேஸ்ட் போன்ற பொருட்களை உருவாக்கி உயர்ந்து வருகிறார்கள். கழிவாகும் காகிதம், துணி என பலதரப்பட்ட பொருட்களில் இருந்து கொஞ்சம் கைகளையும், கொஞ்சம் எந்திரத்தையும் உபயோகித்து பல்வேறு பொருட்களை தயாரிக்கும் சிறுதொழில்கள் சமீபமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஹட்சன் Hatsun அசுர வளர்ச்சி அடைய இதுதான் காரணம் உங்களுக்கு தெரியுமா ?

இந்த வழியில் இன்றளவில் நம் ஒவ்வொரு வீட்டிலும் உருவாகி வீதிக்கு வரும் குப்பைகளிலிருந்தும் சிறந்த தொழில், வலுவான வாய்ப்புகளை அடையாளம் என்கிறார்கள் தொழில்துறை வல்லுனர்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது நமது அண்மை மாநிலமான கருநாடக மாநிலத்தில் மைசூரில் குப்பைகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான முயற்சிகளை தான். அண்மை காலமாக அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் பரபரப்பாகி விடுகிறது மைசூரு. குப்பை சேகரிப்பவர்கள் வீதிவீதியாக எழுப்பும் விசில் ஒலியில் மொத்த ஊரும் விழித்து கொள்கிறது. இதன் மூலம் அங்குள்ள வீடும், நம் நாடும் சிறிது சிறிதாக சுத்தமாகி வருவது மட்டுமல்ல வியாபார வாய்ப்புகளும் உருவாகி கொண்டிருக்கின்றன என்கிற வல்லுனர்கள், இது குறித்து மேலும் விரிவான பல புள்ளி விவரங்களையும் தகவல்களையும் தருகின்றனர்.

உலக அளவில் குப்பைகள் அதிகம் காணப்படும் நகரங்களாக இந்திய நகரங்களே உள்ளன. ஆண்டுக்கு 62 மில்லியன் டன் குப்பை இங்கு உற்பத்தியாகிறது இதில் 82 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. மீதமுள்ள அளவில் பெரும்பான்மையானது திறந்த வெளியில் கொட்டப்படுவதும் மற்றும் சில இடங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. ஒரு பகுதி குப்பை குளம், குட்டை போன்ற  நீர் ஆதாரங்களில் சேர்த்து நீர் , நில மாசுக்கு வழிவகுப்பதுடன் நீரோட்டத்துக்கு தடையாகவும் உள்ளது.

suya tholil
suya tholil

குப்பையிலிருந்து கலப்பு உரம் தயாரிப்பு, மின்சாரம் உற்பத்தி ஆகியவற்றை மிக சிறப்பாக செய்ய முடியும் என்பது நம் நாட்டின் பல மாநிலங்களில் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.

மைசூரில் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை தொண்டு நிறுவனங்களும், உள்ளூர்வாசிகளும் செய்ய தொடங்கியுள்ளனர். பாட்டில்களும், ரப்பர் கேஸ்கெட்டுகள் உள்ளிட்ட பயன்படுத்திய பொருட்கள், கலப்புர விற்பனையை இவர்கள் செய்து வருமானம் ஈட்டிவருகின்றனர். பொருளாதார பலம் வாய்ந்த புதிய நிறுவனங்கள் , பாரம்பரிய  பிரபல நிறுவனங்கள் தற்போதைக்கு இத்தொழிலில் ஈடுபடாமல் இருப்பதால் இத்தொழில் பற்றி சிலர் குறைவாகவே மதிப்பிட்டுள்ளனர். suya tholil in tamil

ஆனால் நடைமுறையில் இது ஒரு மிக சிறப்பான தொழில். இன்று மட்டுமின்றி தொடர்ந்து பல வளர்ச்சிகளை அடையக் கூடிய தொழிலாகவும் இது காணப்படுகிறது. கழிவுகளில் இருந்து தயாராகும் கலப்புர வர்த்தகம் சமீபங்களில் நல்ல நிலையில் இருப்பதுடன் குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழிலுக்கும் தற்போது உத்திரவாதமான வாய்ப்புகள்

உள்ளன. மத்திய அரசின் சட்டம் ஒன்றின்படி மின்சார வாரியங்கள் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிப்போரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . தற்போதைக்கு நம் நாட்டில் கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியில் ஒன்பது நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன. தவிர மேலும் கூடுதலாக குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் 56 ஆலைகள் எழுப்பப்பட்டு வகுகின்றன. இதன் விளைவாக வரும் ஆண்டுகளில் குப்பையிலிருந்து கலப்புரம், மின்சாரம் தயாரிக்கும் தொழில்களில் முதலீடு பெருகும். கழிவிலிருந்து கலப்புரம் தயாரிப்பது கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து வருகிறது.

suya tholil seivathu eppadi
suya tholil seivathu eppadi

கடந்த 2016 மார்ச் மாதத்தில் 0.15 மில்லியன் டன் ஆக இருந்த கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட கலப்புரத்தின் அளவு 2017 ஆகஸ்ட் மாதத்தில் 1.31 மில்லியன் டன்னாக கூடியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே கழிவை பயன்படுத்தி கலப்புரம், சக்தி உற்பத்தி செய்யும் தொழிலில் முதலீடுகள் கூடும் என நாட்டின் தொழில் வர்த்தகம் சார் முக்கிய அமைப்பான அசோசாம் ( Assocham ) தெரிவித்துள்ளது. எனவே குப்பை என்பதை இனியும் கழிவாகவும், திண்டதகாத விஷயமாகவும் பார்ப்பதை தவிர்த்துவிட்டு அதனை வளமாகவே எண்ணவேண்டும். நாட்டின் பொருளாதாரம் சுகாதாரம் இரண்டும் மேம்பட உதவும் ஒரு அம்சமான இதன் மூலம் உருவாகியுள்ள தொழில் வேலை வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி பலரும் முன்னேற வேண்டும் என்று குப்பைகளின் மூலம் நாம் பெற வேண்டிய வளத்தை குறிப்பிட்டு காட்டுகிறார்கள் வல்லுனர்கள். suya tholil in tamil

suya tholil from wastage
suya tholil from wastage

Use Search :

சுயதொழில் தொடங்குவது எப்படி , siru tholil certificate , suya thozhil seivathu eppadi , சுயதொழில் என்ன செய்யலாம் , suya tholil in tamil எப்படி?

Similar Posts