tamil riddles with answer

புதிய தமிழ் விடுகதைகள்- tamil riddles with answer

பல விதமான தமிழ் விடுகதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விடுகதையை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் திறமை என்ன என்று கண்டுபிடியிங்கள். இனி tamil riddles பற்றி பார்க்கலாம்.

புதிய தமிழ் விடுகதைகள் – tamil riddles with answer

பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
விடை : வௌவால்

பச்சை கீரை பொரிக்க உதவுவது . வழுக்க உவுதவும் . அது என்ன ?
விடை : பாசி

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன
விடை : கால்குலேட்டர்

பணத்தை அள்ளித் தருவதாக கூறி பணத்தை எல்லாம் அள்ளிகொள்ளும் பூதம் அது என்ன ?
விடை : லாட்ரி சீட்

என் குதிரை கருப்பு குதிரை குளிப்பாட்டினால் வெள்ளை குதிரை? விடை: உளுந்து

ஒரு நெல் குத்தி குத்தி வீடெல்லாம் உமியாயிற்று? விடை: தீபம்

ஓட்டிலே வீடு கட்டி உள்ளே உருகட்டி நாட்டாருக்கெல்லாம் நல்ல பொருள் எது? விடை: புளி

தமிழ் விடுகதைகள் மற்றும் விடைகள்

மண்ணை சாப்பிட்டு மண்ணிலேயே வந்து மண்ணோடு மண்ணாவான் அவன் யார்? விடை: மண்புழு

கதிரடிக்காத களம் உயிர்ப்பரிக்கும் கலம் அது என்ன? விடை: போர்க்களம்

கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பளையும் தான்? விடை: வெங்காயம்

comedy riddles in tamil with answer – tamil funny questions and answers – vidukathai in tamil with answer

எப்போதும் காதலர்கள் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவர்? விடை: சொல் பேசி

இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன? விடை: பட்டாசு

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன? விடை: தராசு

ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஆரவாரம் இயலாது அவர்கள் யார்? விடை: எறும்பு கூட்டம்

உடல் சிவப்பு வாய் அகலம் உணவு காகிதம் நான் யார்? விடை: அஞ்சல் பெட்டி

அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? விடை: வாழைப்பூ

50-க்கும் மேற்ப்பட்ட தமிழ் விடுகதைகள் முடுஞ்ச கண்டுபிடிங்க!!!! படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறேன். அவன் யார் ?
விடை : கடல் அலை

காக்கை போல கருப்பானது கையால் தொட்டால் ஊதா நிறம் வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? விடை: நாவல் பழம்

தாடிக்காரன் மீசைக்காரன் கோயிலுக்கு போனால் வெள்ளைக்காரன் அது என்ன? விடை: தேங்காய்

காற்றிலே பறக்கும் கண்ணாடி என்று தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன? விடை: நீர்க்குமிழி

இணை பிரிய மாட்டார்கள் நண்பர்கள் அல்ல ஒன்று சேர மாட்டார்கள் பகைவர்கள் அல்ல? விடை: ரயில் தண்டவாளம்

இதயம் போல் துடித்திருக்கும் இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? விடை: கடிகாரம்

இரவல் கிடைக்காதது இரவில் கிடைப்பது? விடை: தூக்கம்

உருவம் இல்லாதவன் சொன்னதை திரும்பச் சொல்பவன்? விடை: எதிரொலி

உள்ளே இருந்தால் ஓடி திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன? விடை: மீன்

எங்கம்மாள் பிள்ளைத்தாச்சி எங்கப்பன் சுவர் ஏறி குதிப்பான்? விடை: பூசணிக்காய்

காற்று வீசும் அழகான மரம் . அது என்ன ?
விடை : சாமரம்

உள்ளே இருந்தால் ஓடித்திரியும் வெளியே வெளியே வந்தால் விரைவில் மடியும் .?
விடை : மீன்

ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ?
விடை : கதவு

ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை அது என்ன ?
விடை : உள்ளங்கை

கால் இல்லாத மான் வேர் இல்லா புல்லை தின்னும் அது என்ன ?
விடை : மீன் / கடல் பாசி

காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? விடை: பேனா

வானத்தில் பறக்கும் பறவை இது ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன? விடை: விமானம்

சிவப்பான பெட்டிக்குள் கருகமணி முத்துக்கள் அது என்ன? விடை: பப்பாளி விதைகள்

நடக்கத் தெரியாதவன் நட்டுவனுக்கு வழிகாட்டுகிறான் அவன் யார்? விடை: கைகாட்டி

நடலாம் பிடுங்க முடியாது அது என்ன? விடை: பச்சை குத்தல்

நான் வெட்டுப்பட்டால் வெட்டியவனே அழ வைப்பேன் நான் யார்? விடை: வெங்காயம்

நடைக்கு உவமை நலனாக்கு தூதுவன் அவன் யார்? விடை: அன்னம்

நாலு மூளை கிணறு நகரத்தின கிணறு எட்டிப் பார்த்தால் சொட்டு தண்ணீர் இல்லை அது என்ன? விடை: அச்சு வெல்லம்

சின்ன தம்பிக்கு தொப்பியே வினை அது என்ன? விடை: தீக்குச்சி

தலை மட்டும் கொண்டா சிறை இல்லாத பறவை தேசம் எல்லாம் சுத்தும்? விடை: தபால் தலை

உலகமெங்கும் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான் அவன் யார்? விடை: கடல் அலை 

தாடிக்கார அரசனுக்கு காடெல்லாம் சொந்தம் அவன் யார் ?
விடை : சிங்கம்

comedy riddles in tamil with answer – நகைச்சுவை புதிர்கள் – tamil funny questions and answers – tamil riddles for kids

முன் கால் கையால் இருக்கும். குரங்கல்ல குட்டி வல்லும் இடம் பையாக இருக்கும் அது என்ன ?
விடை : கங்காரு

ஆடி ஆடி நடக்கும்அரங்கம் அதிர நடக்கும் அது என்ன ?
விடை : யானை

அடிக்கடி தாவுவான் அரசியல்வாதி அள்ள அவன் யார் ?
விடை : குரங்கு

தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவு பாயுது கப்பல் அவன் யார் ?
விடை : ஒட்டகம்

வெடி வெடித்தும் இடிந்து விழாத கோட்டை அது என்ன ?
விடை : இடி வானம்

ஊரார் அறிந்த காரம் ஊரை அடக்கும் காரம் அது என்ன ?
விடை : அதிகாரம்

வடிக்காத சோறு கொதிக்காத குழம்பு அது என்ன?
விடை : பொங்கல் சட்னி

உலகை எல்லாம் உப்பிட்டு வளர்த்தவர் யார் ?
விடை : கடல்

பட்டத்தரசி பவனி வரும்போது பரிகாரங்கள் பக்கத்தில் வரும் அது என்ன ?
விடை: நிலா நட்சத்திரம்

சின்ன சின்ன பாப்பா குழியில் விழுந்துட்ட அடி படாமல் எழுந்துட்ட அது என்ன ?
விடை : பணியாரம்

கருப்பு மத்தியிலே வெள்ளையென செய்கிறான் அது என்ன ?
விடை : தோசை

பறக்கிறான் குடிக்கிறான் பக்குவமயிட்டன் பந்திக்கு போய்ட்டான் அது என்ன ?
விடை : அன்னம் (tamil riddles with answer)

vidukathai in tamil with answer

puzzle in tamil with answers – tamil riddles with answer

கருப்பு குதிரையில் ஒருத்தன் ஏறுவன் ஒருத்தன் இறங்குவான்.. அது என்ன ?
விடை : தோசை

எங்க வீட்டுக்கு கிணத்துல வெள்ளிக் கிண்ணம் அது என்ன? விடை: நிலா

ஆயிரம் தச்சர் கூடி அமைந்த மண்டபம் ஒருவர் கண் பட்டு உடைந்தது அது என்ன? விடை: தேன்கூடு

கருப்பு சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன் அது என்ன? விடை: பூட்டு

குலை தள்ளி பலம் தருவேன் குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் நான் யார்? விடை: வாழை

குண்டன் குழியில் விழுவான் குச்சியப்பன் தூக்கி விடுவான் அது என்ன? விடை: பணியாரம்

ராமனுக்கு பிடிக்காத நகை எது ?
விடை : சூர்பனகை

ஐந்தடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? விடை: விரல்கள்

ஒற்றை காலில் உயரமாய் ஆடுவான் ஓய்ந்து விட்டால் படுத்து விடுவான் அவன் யார்? விடை: பம்பரம்

பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன? விடை: கிளி

நடைக்கு உதாரணம் சொல்வார்கள் ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது அது என்ன? விடை: பூனை

கண் மூக்கு காது வாய் இல்லாதமுகம் எது ?
விடை : அறிமுகம்

ஒருவனை மட்டும் அழைக்க மாட்டான் ஊரையே கூட்டி உண்பான் அந்த உத்தமன் பெயர் என்ன? விடை: காகம்

பழகினால் மறக்காதவன். பயந்தோரை விடாதவன் அவன் யார்? விடை: நாய்

அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் பெயர்? விடை சந்திரன்

ஊரார் கண்ட கோலம் உடையவன் காணாத கோலம் அது என்ன? விடை: விதவைக்கோலம்

பார்க்க அழகு பாம்புக்கு எதிரி அது என்ன? விடை: மயில்

உடன் வருவான் உதவிக்கு வர மாட்டான் அவன் யார்? விடை: நிழல்

வட்டம் சதுரம் இரண்டில் எது அறிவாளி ?
விடை : சதுரத்திற்கு தான் நான்கு புறம் மூளை

vidukathaigal in tamil with answers

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல வேகமாய் ஓடும் மான் அல்ல கால்கள் உண்டு மனிதன் அல்ல அது என்ன ?
விடை : சைக்கில்

comedy riddles in tamil with answer tamil riddles with answers – நகைச்சுவை-புதிர்கள் – tamil funny-questions and answers

சுமையும் தாங்கும் உதையும் கொடுக்கும் . அது என்ன ?
விடை : கழுதை

மரம் ஏறும் அண்ணாச்சிக்கு முதுகில் முன்று சூடு.. அது என்ன ?
விடை : அணில்

என்னை சுத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிடுவேன்.. நான் யார் ?
விடை : அமைதி

நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன ?
விடை : தலைமுடி

குட்டை பிள்ளைக்கு குறுநீ நகை அது என்ன? விடை: கோழி இறகு

குட்டை தண்ணீரில் எட்டு கப்பல் அது என்ன? விடை: தவளை

குட்டை மரத்தில் கொட்டாப்புள்ளி அது என்ன? விடை: கத்திரிக்காய்

கசப்பு காரன் கலரில் மட்டும் கசப்பு காரன் அது என்ன? விடை: குன்றிமணி

எங்கள் ஊர் இரும்பு ஏகப்பட்ட தூரம் மிதக்கும் அது என்ன? விடை: கப்பல்

நலம் பெற ஒரு 100 அது என்ன? விடை: டாக்டர் போடும் ஊசி

new riddles in tamil with answer's images

தங்கம் நடுவே வைரக் குவியல்கள் அது என்ன? விடை: வானில் நிலவும் நட்சத்திரங்கள்

மேலே வெட்ட வெளி கீழே பொட்டல் வெளி நடுவில் தண்ணீர் பந்தல் அது என்ன? விடை: வானம் பூமி மேகம்

முள்ளுக்கட்டை தாண்டினால் இனிப்பு கூடு அது என்ன? விடை: பலாப்பழம்

puzzle in tamil with answers – தமிழ் புதிர்கள் விடைகளுடன் – tamil riddles with answer

சுற்று சுற்றி வருவான் சுற்றிலும் ஆனால் இவனை உணரலாமே தவிர பார்க்க முடியாது அது என்ன? விடை: காற்று

மரம் வலுக்கும் காய் துவர்க்கும் பழம் இனிக்கும் அது என்ன? விடை: வாழை

சட்டையை கழற்றத் தெரிந்தவன் திரும்பப் போட மாட்டான் அது என்ன? விடை: பாம்பு

கை இல்லாமல் நீந்துவான் கால் இல்லாமல் ஓடுவான் அவன் யார் ?
விடை : படகு

இளமையில் பச்சை முதுமையில் சிகப்பு குணத்தில் எரிப்பு அது என்ன ?
விடை : மிளகாய்

கடிபடமாட்டான் பிடிபடமாடான் அவன் யார்?
விடை : தண்ணீர்

tamil riddles with answer : ஆடை இல்ல கறுப்பு அழகி ஆடிச் சுழன்று பாடுகிறாள் அவள் யார்( riddles in tamil ) ?
விடை : இசைத்தட்டு

மழையோடு வந்து மழையோட சென்று விடும் இதற்க்கு வாழ்வு ஒரு நாள் மட்டுமே ?
விடை : முதுகு

கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில கண்ணீர் பிரவாகம் அது என்ன ?
விடை :  கார்மேகம்

கிட்ட இருக்கும் பட்டணம் எட்டித்தான் பார்க்க முடியல அது என்ன ?
விடை : முதுகு

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன ?
விடை : செருப்பு

நல்லவர் கொள்ளும் தானம் நாலு பேருக்கு தர முடியாத தானம் அது என்ன? விடை: நிதானம்

vidukathai tamil with answer

vidukathai in tamil with answer – riddles in tamil – vidukathai tamil with answer

ஆழ குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் 90 முட்டை அது என்ன? விடை: தென்னை மரம்

அம்மா செயலியை மடிக்க முடியாது அப்பா காசு என்ன முடியாது அது என்ன? விடை: வானம் நட்சத்திரம்

வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு அது என்ன? விடை: முட்டை

குண்டு சட்டியில் குதிரை ஓற்றான் அது என்ன? விடை: ஆட்டுக்கால்

வெள்ளி உடையில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது அது என்ன? விடை: கண்

டாக்டர் வந்தாரு ஊசி போட்டார் காசு வாங்காமல் போனாரு அது என்ன? விடை: கொசு

ஊரெல்லாம் சுத்துவான் ஆனால் வீட்டிற்குள் வர மாட்டாள் வரமாட்டான் அது என்ன? விடை: செருப்பு

 ஒரு குகை 32 வீரர்கள் ஒரு நாகம் அது என்ன? விடை: வாய்

வெள்ளி கிண்ணத்தில் தண்ணீர் அது என்ன? விடை: தேங்காய்

ஆணை விரும்பும் சேனை விரும்பும் அடித்தால் வலிக்கும் கடித்தால் சுவைக்கும் அது என்ன? விடை: கரும்பு

வால் உள்ள பையன் காற்றில் பறக்கிறான் அது என்ன? விடை: பட்டம்

ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன? விடை: நாக்கு குற்றம் செய்யாமலே குடிமி பிடிக்கிறான்? விடை: சவரத் தொழிலாளி

மேலும் பல விடுகதைகள் பற்றி படிக்க
உங்கள் குழந்தையிடம் குழந்தைகளுக்குக்கான விடுகதைகள் கேட்டு அறிவுக்கூர்மையை சோதித்து பாருங்கள்.

குட்டை பணியில் எட்டு முட்டி அது என்ன? விடை: கத்திரிக்காய்

இந்த riddles in tamil உங்களுக்கு பிடிச்சு இருந்த வெப்சைட் subscribe பண்ணுங்க!

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *