மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி | mutton vellai kurma
மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 150 கிராம்
பச்சை மிளகாய் – 10
இஞ்சி பூண்டு -50 கிராம்
உருளை கிழங்கு – 2
எலுமிச்சை – 1
தயிர் – 1/2 கப்
தானியாத்தூள் – 3 ஸ்பூன்
மிளகு -1 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
பட்டை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
தேங்காய் – 1
கசகசா – 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு – 5
புதினா – ஒரு கைப்பிடி
கொத்துமல்லிதழை – ஒரு கைப்பிடி
மட்டன் வெள்ளை குருமா செய்முறை : | mutton vellai kurma seimurai
ஆட்டுக் கறியை சுத்தம் செய்து 4 விசில் வரை வேக வைத்து இறக்கவும் .
மிளகு, சீரகம் , பட்டை , ஏலம், கிராம்பு , அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
தேங்காய் கசகசா தனியாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் . உருளைக்கிழங்கு நான்கு துண்டுகளாக நறுக்கவும் .பச்சைமிளகாய் கீறி வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை , ஏலக்காய் ,கிராம்பு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதக்கியதும் இஞ்சி , பூண்டு போட்டு பச்சை வாசனை போக வதக்கி , கூடவே உருளைக்கிழங்கு துண்டுகள் போட்டு வதக்கவும் . அடுத்து பச்சைமிளகாய் தனியாத்ததூள் போட்டு வதக்கவும்.
பின்பு வேகவைத்த ஆட்டு கறியை இதனுடன் சேர்த்து வதக்கி ,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து உருளைக்கிழங்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் , கசகசா விழுதை சேர்க்கவும் மேலும் கொதிக்க விடவும்
தேங்காய் கசகசா பச்சை வாசனை போனதும் கொத்துமல்லிதழை தூவி இறக்கவும்.
எல்லா பிரியாணிக்கும் ஏற்ற மட்டன் வெள்ளை குருமா ( mutton vellai kurma )ரெடி இந்த மட்டன் வெள்ளை குருமா ( mutton vellai kurma ) சைவம் மற்றும் அசைவ பிரியாணிக்கும் ஏற்றது.
Use Search :
mutton white korma recipe in tamil , mutton white kurma in tamil , மட்டன் வெள்ளை குருமா