கடி ஜோக்ஸ் புதிர் என்பது நகைச்சுவையை ஏற்படுத்தும் ஒரு வகை கடி விடுகதைகள் ஆகும். இந்த கடி ஜோக்ஸ் விடுகதைகள் மூலம் கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நகைச்சுவையான பதில் தரப்படும். இதில் கேட்கப்படும் கேள்விகள் பொதுவாக ஒரு பொருள் அல்லது செயலை பற்றி தான் இருக்கும். கடி ஜோக்ஸ் புதிர்கள் நம்மை பெரும்பாலும் நகைச்சுவையை ஏற்படுத்தும். சில புதிர்கள் கோபம் அடையச் செய்யும் மேலும் கடி ஜோக்ஸ் விடுகதைகள் யூகிப்பது சற்று கடினமாகவும் இருக்கும். கீழே உள்ள பதிவில் கடிஜோக்ஸ் புதிர் சில பதிவிட்டுள்ளேன்.

கடி ஜோக்ஸ் புதிர் | Kadi Jokes In Tamil With Answers

1.இளநீர்லயும் தண்ணி இருக்கு,
பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,
பூமில ஸ்ட்ரா போட்டு
உரியவும் முடியாது.

2.RSக்கு தலை வலிச்சா?
குடிக்கும்…

3.OP ரேசனுக்குப்போனா?
Qல தான் நிக்கும்…

4.UVWXYக்கு பறக்கனும்னா?
Zல போகும்.

5.IJKL க்கு எனிமி யாரு?
MN தான்-/

6.பல் வலிக்க முக்கியமான காரணம் என்ன?
பற்கள் தான்

7.ஏண்டா உனக்கு வரலாறு பிடிக்காதுன்னு சொல்ற?
சார் நான் விஜய் ரசிகன்

8.நெஞ்சை தொடும் ஒரு வார்த்தைகள் சொல்லு?
பனியன்

9.அதிக வெயிட் தூக்குற பூச்சி எது?
மூட்டை பூச்சி

10.லெட்டர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.

கடி ஜோக்ஸ் விடுகதைகள் | கடி ஜோக்ஸ் அறுவை

11.எல்லா இடத்துலயும் பறக்கும் ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
சங்கிலி

12.ஒரு பையன் அவனுடைய 500 ரூபாய் நோட்டையும் 100 ரூபாய் நோட்டையும் சாக்கடையில் போட்டுட்டான் பர்ஸ்ட் எதை எடுப்பான்?
அவன் ஃபர்ஸ்ட் வாந்தி எடுப்பான்.

13.கொக்கு எப்ப ஒத்த கால்ல நிக்கும்?
அது ஒத்த காலை எப்ப தூக்குது அப்பதான்.

14.ஹோட்டல் போயிட்டு இட்லிய பார்த்து பயந்து ஓடினான் ஏன்?
ஏன்னா இட்லில இருந்து ஆவியா வந்துச்சாம்.

15.ஒருத்தன் விநாயகர் படத்தின் மேல நடிகர் ராதிகா போட்டோ ஒட்டிட்டு போனானாம் ஏன்?
அது சித்தி விநாயகர் ஆம்.

16.ஒரு அம்மா எப்போதும் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிட்டு தான் தூங்குமாம் ஏன்?
அப்பதான் தூக்கத்தில் வரும் கனவு தெளிவா தெரியுமாம்.

17.ஒருத்தன் பொண்டாட்டி சமையல வாயில வைக்க முடியலன்னு பேங்க் மேனேஜர் கிட்ட போய் சொன்னாலும் ஏன்?
நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்களாம். (Funny Jokes)

இந்த மொக்க ஜோக்ஸ் படிக்கா மறந்துடாதிங்க!!

18.100க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?
0 தான் இருக்கு.

19.கீர்த்திகா நகை கடையில் போய் மோதிரம் எடுத்து அதை காலில் போட்டுக்கிட்டாளாம் ஏன்?
ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.

20.ஸ்கூல்ல எக்ஸாம் அன்னைக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டு போனாங்களாம் ஏன்?
ஏன்னா அது மாடல் Exam

கடி விடுகதைகள் | Mokka Kadi Jokes In Tamil

21.சாப்பிட முடியாத கனி எது?
பால்கனி.

22.ஆப்பிள் நறுக்கி வைத்தால் என்ன ஆகும்?
நரி சாப்பிட்டு போயிரும்.

23அமெரிக்காவில் பிறந்த குழந்தை பல்லு என்ன கலர் இருக்கும்?
பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே.

24.கிரிக்கெட் மேட்ச் பார்த்துகிட்ட ஒரு கொசு திடீரென்று செத்துப் போச்சாம் ஏன்?
ஏன்னா இந்திய ஆல் அவுட் ஆயிடுச்சாம்.

25.முள் குத்தினா ஏன் ரத்தம் வருது?
யார் குத்தினானு பாக்க வருது.

About admin

f510b443b58f266ea2908bbb4984dbe4?s=90&d=mm&r=gவணக்கம் . நான் BlogToday.in இணையதளத்தில் பல்வேறு தலைப்புகளில் பல சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுதி வருகின்றேன்.