panchagavya பஞ்சகாவ்யா செய்முறை
பஞ்சகாவ்யா என்பது :
பஞ்சகாவ்யா ( panchagavya ) என்பது பசுவிடம் இருந்து பெறபடும் 5 மூலப்பொருள் கொண்டு இந்த பஞ்சகாவ்யா தயாரிக்கப்படுகிறது . பஞ்சகாவ்யா இயற்கையான எளிமையான முறையில் விட்டில் செய்யலாம்.
பஞ்சகாவ்யா செய்ய தேவையான பொருட்கள்:
- பசும்பால் – 2 லிட்டர்
- பசு கோமியம் – 3 லிட்டர்
- பசுஞ்சாணம் – 5 கிலோ
- நெய் – 1 லிட்டர்
- தயிர் -2 லிட்டர்
- இளநீர் – 3 லிட்டர்
- வெல்லம் – 2 கிலோ
- கரும்பு சாறு – 3 லிட்டர் (அல்லது) வாழைப்பழம் – 14 பழம்
பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை
பசுஞ்சாணம் 5 கிலோ உடன் பசுநெய் 1 லிட்டர் கலந்து . அதனை ஒரு பானை அல்லது பீப்பாய் வைத்து நான்கு நாட்கள் தினமும் கலை மற்றும் மாலை நன்கு பிசைந்து விடவும்.
ஐந்தாவது நாள் மற்ற பொருளுடன் இவைகளை ஒரு பெரிய மண்பானை (பெரிய வாய் கொண்ட மண்பானை ) போட்டு சனல் சாக்கு கொண்டு மூடி நிழலில் வைக்கவும்.
நாள் ஒன்றுக்கு இருமுறை காலை மற்றும் மாலை நன்கு கிளறி விடவேண்டும் . இப்படி செய்வதன் முலம் காற்றில் உள்ள பிராணவாயு பயன்படுத்தி இதில் உள்ள நுண்ணுயிரின் செயல் திறனை மேம்படுத்தும்.இப்படி தொடர்ந்து 20 நாட்கள் கலக்கி விடவும் .கலக்கிய பின்பு மூடிவைக்கவும்.
20 -வது நாளில் பஞ்சகாவ்யா தயாராகிவிடும் இந்த பஞ்சகாவ்யா கரைசலை ஆறு மாதம் வரை வைத்து இருக்கலாம் . பஞ்சகாவ்யா(panchagavya) நீண்ட நாள் வைப்பதால் நீர் வெப்பத்தின் காரணமாக ஆவியாகிவிடும் இதனால் பாகு தன்மை உடன் காணப்படும் தண்ணீர் உடன் வெல்லத்தை கரைத்து பஞ்சகாவ்யா – துடன் உற்றினால் மீண்டும் தீரவ நிலைக்கு பஞ்சகாவ்யா வந்துவிடும்.
பஞ்சகாவ்யா பயன்படுத்தும் முறை :
ஒரு ஏக்கர் மரங்களுக்கு 4.7 லிட்டர் ஒருமுறை தெளிப்பதற்கு தேவைப்படும்
ஒரு ஏக்கர் பயிர்களுக்கு 3.5 லிட்டர் ஒருமுறை தெளிப்பதற்கு தேவைப்படும்
1 லிட்டர் தண்ணீருடன் 30 மில்லி பஞ்சகவ்யா பயன்படுத்தவும்
இந்த பஞ்சகாவ்யா( panchagavya ) கரைசலை மரங்கள் , பூ-செடி , தானியப்பயிர்கள், பழமரங்கள் மற்றும் விதை நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.
இவை ஒரு நல்ல வளர்சியூக்கி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பஞ்சகாவ்யா அதிகபடியான மகசூல் கொடுப்பது மட்டுமில்லாமல் பூச்சி மற்றும் நோய் இடம் இருந்து பாதுக்ககிறது
மண்ணின் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகபடுத்தும்.
சுற்றுப்புற சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுத்தும்
தழைச்சத்து , மணிச்சத்து, சாம்பல் சத்து ,நுண்ணுட்டசத்து, இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் ஜிப்ரலிக் அமிலம் உள்ளது.