sundara kandam lyrics in tamil
sundara kandam lyrics in tamil cap

சுந்தரகாண்டம் 5 minutes sundara kandam lyrics in tamil

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்களையும், 123 படலங்களையும்(படலம் என்பது அதிகாரம்) உடையது.

வ.எண்காண்டங்களின் பெயர்படல எண்ணிக்கை
1பாலகாண்டம்24
2அயோத்தியா காண்டம்13
3ஆரண்ய காண்டம்13
4கிட்கிந்தா காண்டம்17
5சுந்தர காண்டம்14
6யுத்த காண்டம்42

சுந்தரகாண்டத்தில் உள்ள 14 படலம் பின்வருமாறு :

இந்த 14 படலம்  ஹனுமனின்  வீர தீர செயல்களை பற்றி கூறுகிறது.

  1. கடல் தாவு படலம்
  2. ஊர் தேடு படலம்
  3. காட்சிப் படலம்
  4. உருக் காட்டு படலம்
  5. சூடாமணிப் படலம்
  6. பொழில் இறுத்த படலம்
  7. கிங்கரர் வதைப் படலம்
  8. சம்புமாலி வதைப் படலம்
  9. பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
  10. அக்ககுமாரன் வதைப் படலம்
  11. பாசப் படலம்
  12. பிணி வீட்டு படலம்
  13. இலங்கை எரியூட்டு படலம்
  14. திருவடி தொழுத படலம்

 

sundara kandam - hanuman and ramar
sundara kandam – hanuman and ramar

இன்று நாம் பார்க்கபோவது சுந்தர காண்டம் . இந்த ஆறு காண்டங்களில் ஏன் சுந்தர காண்டத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம். ஹனுமன் தான் இராமாயணத்தில் முக்கிய திருப்பம் வருவதற்கு காரணமாக இருந்தவர். இந்த ஹனுமனின்  வீர தீர செயல்களை பற்றி கூறுவது தான் சுந்தரகாண்டம் ஆகும்.

சுந்தரகாண்டம் தினமும் பாராயணம் செய்யும் போது ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம் | Benefits sundara kandam lyrics in tamil :

  • நோய் நொடிகள் தீரும்.
  • திருமண தடை விலகும்.
  • நவகிரக தோஷம்,  நீங்கும்.
  • ஏழரை சனி, அஷ்டமசனி பாதிப்பிலிருந்து நம்மை காக்கும்.
  • மன வலிமை அதிகரிக்கும்.
  • அறிவு, ஆற்றல், புகழ், துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு மற்றும் சாதுரியம் இவைகள் அனைத்தும் அதிகரிப்பதை காணலாம்.
  • இந்த சுந்தரகாண்டத்தை ராமநவமி தினத்தில் படித்தால் இன்னும் சிறப்பு.

 

 

சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் முறை :

அதிகாலை  எழுந்து, குளித்து, சுத்தமான பின்பு பூஜை அறையில்  தீபம் ஏற்றி வைத்து அமைதியான சூழ்நிலையில், சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கலாம்.

ராமநவமி அன்று  அனுமனுக்கு வெண்ணெயை தீபம் வைத்து .ராமருக்கு துளசி மாலை சாத்தி சுந்தரகாண்ட  மந்திரம் உச்சரித்தல்  சிறப்பான பலன்களைத் தரும்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் சுந்தரகாண்டம் படிப்பதை தவிர்க்கவும்

அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் (சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் ).

 

 

sundara kandam lyrics in tamil:

 

ஸ்ரீ ராம ஜெயம்
சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.

 

அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

 

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.

 

இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

 

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !

 

கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

 

பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

சுந்தரகாண்டத்தில் அனுமான் இலங்கை எரியூட்டு படலம்
சுந்தரகாண்டத்தில் அனுமான் இலங்கை எரியூட்டு படலம்

 

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

சிறைவைக்கப்பட்ட சீதையைச் சந்திக்கும் அனுமான்
சுந்தரகாண்டம் சிறைவைக்கப்பட்ட சீதையைச் சந்திக்கும் அனுமான்

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.

 

மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

 

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.

 

எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனே
உனை பணிகின்றோம் பலமுறை!

 

இதையும் படிங்க : vinayagar agaval lyrics in tamil

 

Search this : sundara kandam parayanam in tamil lyrics , sundara kandam in 5 minutes in tamil lyrics , sundara kandam lyrics in tamil , 5 minutes sundara kandam lyrics in tamil , Sundarakanda parayanam benefits , Benefits of reading sundara kandam lyrics in tamil

 

 

Similar Posts