egg biryani recipie
egg biryani recipie

சுவையான முட்டை பிரயாணி செய்வது எப்படி | Egg Biryani Yummy!

முட்டை பிரயாணி செய்ய தேவையான பொருட்கள்: | egg biryani

பாஸ்மதி அரிசி -2 கப்

பெரிய வெங்காயம் – 3

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி -1 துண்டு

பூண்டு -10 பற்கள்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

நெய் -1 ஸ்பூன்

சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன்

முட்டை – 7

பட்டை – 2

கிராம்பு – 2

புதினா – 1 கப்

கொத்துமல்லி இலை – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

முட்டை பிரயாணி செய்முறை : | egg biryani seivathu eppadi

பாஸ்மதி அரிசியை கழுவி, சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நான்கு முட்டைகளை வேக வைத்து ஓடு நீக்கி எடுத்துகொள்ளவும்.

பச்சை மிளகாய், இஞ்சி -பூண்டு, ஒரு வெங்காயம் , தக்காளி ஆகியவற்றை தனித்தனியாக அரைக்கவும்.

மீதி வெங்காயத்தை நறுக்கி வைக்கவும்.

குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து , பட்டை கிராம்பு, மிளகுதூள் போட்டு தாளிக்கவும். பச்சை மிளகாய் போட்டு பொன்-நிறமாக வதக்கவும் . பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .அடுத்து வெங்காய விழுது சேர்த்து வதக்கவும் .தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும்.

முருங்கைகீரை சூப் இப்படி தான் செய்யனும்

எல்லாம் நன்கு வதக்கியதும் நறுக்கிய வெங்காயம் , மஞ்சள் தூள், தேவையான உப்பு ,பிரியாணி இலை ,பாதி கொத்துமல்லிதழை சேர்த்து வதக்கவும்.

மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும் . பின் ஊற வைத்த அரிசியை கொட்டி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரை முடவும் . ஒரு விசில் வந்ததும் இறக்கவும் .(egg biryani tamil)

மீதமுள்ள கொத்துமல்லிதழை தூவி வேகவைத்த முட்டையை அதன் மீது வைத்து சுடச் சுட பரிமாறவும்.(muttai sadam recipe in tamil)

பருத்திப் பால் செய்வது எப்படி??

Use Search :

egg biryani recipe in tamil , muttai biryani seivathu eppadi , muttai biryani eppadi seivathu

Similar Posts