வெற்றிக்கு வழிகாட்டி
வெற்றிக்கு வழிகாட்டி

வெற்றிக்கு வழிகாட்டி பயனுள்ள குறிப்புகள்

வெற்றிக்கு வழிகாட்டி : வேறு எவரும் பெற முடியாத இலக்கை திறமை அடைகிறது. வேறு எவரும் பார்க்க முடியாத இலக்கை அறிவு அடைகிறது” என்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ வாதியான ஆர்தர் ஸ்கோபென்ஹார்.

இலக்குக்கான அறிவு, செயலுக்கான திறமை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தால் தானே ஒரு ஓட்டப்பந்தய வீரன் வெற்றிக் கோட்டைத் தொட முடிகிறது. அவையெல்லாம் நம் தகுதியை நிரூபிக்கும் நம்பிக்கையான போராட்டங்களும் கூட. இன்னும் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்போனால் வெற்றிக்கு வழிகாட்டும் துணிவான அம்சங்களாகவும் அவை விளங்குகின்றன.

திறமை, அறிவு, புத்திசாலித்தனம் என்ற மூன்றும் வேறு வேறல்ல. திறமை செயலில் வெளிப்படக் கூடியது. அறிவு கருத்தில் வெளிப்படக் கூடியது. புத்திசாலித்தனம் விளைவில் வெளிப்படக் கூடியது . இந்த மூன்றையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்துபவனே வெற்றியாளன் , சாதனையாளன் என்கிற அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியை எட்டுகிறான்.

வலிமை அற்றவர்கள் அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். வலிமை வாய்ந்தவர்களோ , காரணம் மற்றும் விளைவை நம்புகிறார்கள்’ என்கிறார் ரால்ப் வால்டோ எமர்சன். சரிதானே! வாழ வேண்டும் என்பது உயிர்நோக்கம். சிறப்புடன் வாழ வேண்டும் என்பது உயர்நோக்கம். இதில் நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதை மேற்கண்ட இரண்டு கருத்துகளில் ஒன்று தான் தீர்மானிக்கும். இதில் நீங்கள் எப்படி? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் . வெற்றுக்கனவுகள் இதயத்துக்கு சுமை. வெற்றிக் கனவுகள் தான்

உழைப்புக்கு உரம். இதைப் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பாட்டில் இறங்கும் போது தான். நாளைய பொழுதிற்கான தயாரிப்பு என்பது, இன்றைய கடினமான உழைப்பு

என்பதை அறிய முடியும். வெற்றிக்கான பாதையில் பயணம் செய்யவும் முடியும். வெற்றிக்கான போராட்டப் பயணத்தில் நாம் சந்திப்பது எல்லாமே பூக்களாகவே இருக்க வேண்டுமா என்ன? அது பூவோ முள்ளோ ,மேடோ பள்ளமோ எது ஒன்றிலிருந்தும் புதிதாக ஒன்றைக் கற்பதே அனுபவம்.

பூக்களிடம் புன்னகை கற்போம் . முட்களிடம் முன்னெச்சரிக்கை கற்போம். மேடுகளில் ஏறக் கற்போம். பள்ளங்களைக் கடக்கக் கற்போம். தன் தொடர் முயற்சிகளில் விடாப்பிடியாக இருப்பவன் எது ஒன்றின் காரணமாகவும் தயங்கி நின்று விடுவதில்லை.

உடல் வலிமை பெற சிறுதானிய உணவு குறிப்புகள் பற்றி தெரியுமா ?

வெற்றிக்கு வழிகாட்டிதொடர் தயார் நிலைகள்:

வெல்வோம் என்கிற அவனது நம்பிக்கை மிக்க போராட்டமும் முன் நிற்கிறது. இதை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் வெற்றியை தேடும் சிந்தனையாளன்அதற்கான முன்னோட்டத்தில், ஒவ்வொரு நிலையிலும் தன்னை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறான்.

அதாவது நின்று கொண்டிருக்கும்போதே தன்னை ஓடுவதற்குத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே எழுந்து ஓடுவதற்கு புத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறான்.

சீட்டு விளையாட்டு பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். எதிர்பார்த்த சீட்டு வந்தா ல் தான் விளையாட முடியும் என்று காத்திருக்க முடியாது. வாழ்கின்ற வாழ்க்கை என்பதும் சீட்டு

விளையாட்டுதான். வருகின்ற சீட்டுகளை வைத்துதான் விளையாட வேண்டி இருக்கும். அப்படித்தான் வெற்றியாளனும் கிடை க் கின் ற வாய்ப்புகளை பற்றிப் பற்றியே தனது செயல்பாட்டு பயணத்தை மேற்கொள்ளுகின்றான் . அப்படியான சிந்தனைச் செல்வத்தோடு உழைப்புச் செல்வமும் சேரும்போது, நாம் நம்மை அறியாமலே ஆற்றல் மிக்கவர்களால் வளரத் தொடங்கி விடுகிறோம். தன் ஆற்றல் எது என்பதை சரியாக உணர்ந்து, அந்தப் பாதையில் சரியாகச் சென்று கொண்டிருப்போரை துன்பம் நெருங்குவது இல்லை என்பார் அமெரிக்கத் தொழிலதிபரான ரூதர் போர்டு. ‘ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் ச ந் தி க் கு ம் விளைவுகள் கண் டு பயப்படுவதில்லை’ எனக் குறிப்பிடுகிறார் ஜமைக்காவைச் சேர்ந்த தொழிலதிபர்,

சொற்பொழிவாளர் மார்கஸ் கார்வே. இலக்கு சார் வெற்றிகளையே நோக்கிச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களின் இலக்கணமே இதுதான். இலட்சியத்தை அடைய, கடக்க வேண்டிய தூரத்தை விட, அதை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பது தான் கடினம் என்கிறார் டூ மார்க்லஸ் டெபாண்ட்.

அவ்வளவு தான்! பாதையில் நடக்கத் தொடங்கி விட்டால் இலட்சிய வெறி உள்ளவனுக்கு இலக்கின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டு விட்ட ஒன்று தான்.

வெற்றிக்கு வழிகாட்டிஅடிப்படை அணுகுமுறைகள்: | Vetrikku valikatti success tips

காற்று வெறும் காற்றுதான்… ஆனால் அது ஒருங்கிணைந்து புல்லாங்குழலில் நுழைந்து துளைகளின் வழியே படிப்படியாக

வெளிவரும் போது அடடா! மனதை மயக்கும் எவ்வளவு இனிமையான இசை திட்டமிட்ட செயல்பாட்டுப் புள்ளிகள் ஒருங்கிணைக்கப்படும் போதும் அப்படித்தான்! வெற்றியின் நாதம் வலுவானது.

‘தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக்கொள்வதற்கான பலமும் தான், வெற்றி பெறுவதற்கான சிறந்த குணாதிசயங்களாகும்‘ எனச் சுட்டிக் காட்டுவார் ஒருங்கிணைந்த ரஷ்யாவை உருவாக்கிக் காட்டிய லெனின்

மேற்கண்ட இந்த அடிப்படை அணுகுமுறையைப் பற்றி நன்றாக உணர்ந்து கொண்டவர்கள், எதிர்ப்படும் எது ஒன்றாலும் கலக்கமோ தளர்ச்சியோ அடைவதில்லை. மாற்றிக் கொள்ளுகிறார்கள், மாற்றங்களை உருவாக்குகிறார்கள் , பயணங்களைத் தொடர்கிறார்கள்.

என்னால் முடியாது என்ற எண்ணம் இது வரை சாதித்ததாகச் சரித்திரம் இல்லை. முயற்சிக்கிறேன் என்ற எண்ணமே பல அற்புதங்களைத் தந்திருக்கிறது எனச் சுட்டிக் காட்டுவார் ஜார்ஜ்.பி.பர்ன் ஹார்ம்.

விவேகமான எண்ணங்களுடன் துணிவாக ஒரு முயற்சியை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே, உச்சகட்ட செயல்திறனை சிறப்பான உத்திகளுடன் முன்னெடுக்கிறார்கள் .

தகுதிகளை நிரூபிக்கும் நம்பிக்கையான போராட்டங்களால் வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக தங்களை நிலை நிறுத்திக் கொள்ளுகிறார்கள்.

தோற்பது என்பது அவமானத்துக்கு உரியது அல்ல. அதில் இருந்து ஒரு வெற்றிப்பாடத்தை நாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை உலகறிந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் இப்படி விளக்குவார்.

‘ஒவ்வொரு முறை தோற்கும் போதும், நம்முள் இருந்து ஒரு முட்டாள் வெளியேறுகிறான் என்கிறார் அவர். அனுபவம் என்பதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதிலிருந்து ஒன்றை அறிந்து கொண்டு நீங்கள் மேம்பட்டிருக்க வேண்டும் என்பதை எவராலும் இவ்வளவு அழகாகச் சொல்லி விட முடியாது.

வெற்றிக்கு வழிகாட்டிகற்றுக் கொள்வது என்பது:

கற்றுக் கொள்வது என்பது எதிலிருந்து ஆரம்பிக்கிறது? கவனிப்பதில். கவனிப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றிபெற்ற ஒவ்வொருவரும் இப்படித்தான் முன்னேறி இருக்கின்றனர். எந்தப் பிழையுமில்லாமல், நன்றாகச் செய்ய முடிகிறபோதுதான், காரியத்தில் இறங்குவேன் என நினைப்பவரும் அப்படித்தான். ஒரு வேலையையும் செய்து முடிக்கமாட்டார் என்பார் ஜோன் கென்தி நியூமன்.

மாற்றமே வாழ்க்கையின் விதி. கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தை மட்டுமே கவனிப்பவர்கள், நிச்சயமாக தங்களது எதிர்காலத்தை இழக்கிறார்கள் என்பார் முன்னாள் அமெரிக்க அதிபரான ஜான் எஃப் கென்னடி. இவையெல்லாமே விவேகமான துணிவுகள். வாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டுபவை. உச்ச கட்ட செயல் திறனுக்கு வழிகாட்டும் சிறப்பான உத்திகள் தகுதிகளை நிரூபிக்கும் நம்பிக்கையான போராட்டத்தின் தொடர் முயற்சிகள் இவை.

சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களின் இலக்கு நோக்கிய செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இடைப்படும் தடங்கல்கள், தளர்ச்சிகள், மாறுபாடுகள் என எல்லாவற்றையுமே அவர்கள் அதன் நீட்சிகளாகவே பார்ப்பதால் தான் சாதனையாளர்களாக மலர்கிறார்கள். அ ப் ப டி யானால் வெற்றி என் ப து தான் என்ன ? அதற்கான ஒவ்வொர  போராட்டத்திலும் வெல்வது என்பதல்ல. அதன் இறுதியான போரில் வெல்வதுதான். இலட்சிய வெற்றி என்பதும் இது தான் (வெற்றிக்கு வழிகாட்டி).

வெற்றிக்கு வழிகாட்டி
வெற்றிக்கு வழிகாட்டி

More About Success tips in engish

Use Search:

வெற்றிக்கு வழிகாட்டி முறைகள் , வெற்றிக்கு வழிகாட்டி சில குறிப்புகள் , வாழ்வில் முனேற்றம் அடைய வெற்றிக்கு வழிகாட்டி , வெற்றியின் வழிகாட்டி

Similar Posts