ஹட்சன் பின்பற்றிய சந்தை உத்திகள்

ஹட்சன்  பின்பற்றிய தொழில் உத்திகள்

நிகழ்காலச் சாதனைகள் பலவற்றுக்குச் சொந்தக்காரர் ஹட்சன் ஆர்.ஜி.சந்திரமோகன். அவர் தொழில் முனைவோருக்கு எப்போதும் கூறும் ஆலோசனையிலிருந்தே தொடங்கலாம்.

‘தோல்விகளில் பாடம் கற்றுக் கொண்டு, தொழிலைத் தொடருங்கள் . தொழில் தொடங்கும் முன் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்  என்கிறார் அவர். அவருடைய ஹட்சன் நி று வ ன ம்

1970 இல் தொடங்கப்பட்டது. இன்று அதனுடை ய ஆண்டு வ ர்த்த க ம் 400 கோடிகளுக்கு மேல். இதற்குப் பின்னால் உள்ள அவரின் அசாத்திய உழைப்பு பல

ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. ஆனால் ஒவ்வொரு இறக்கத்தைத் தொடர்ந்தும், தனது அடுத்தடுத்த முயற்சிகளில் பலபடிகள் முன்னேறிக் காட்டியவர் சந்திரமோகன். ‘ஆர்.சந்திரமோகன் அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1986&ஆம் ஆண்டில் ‘ஹட்சன்

ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1998 ஆம் ஆண்டில் ‘ஹட்சன் அக்ரோ புரோடக்ட் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம். அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் ஆரோக்யா பால் என்கிற இரண்டு பிராண்டுகளும் வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்றுள்ளன. அனைவரும் விரும்பி வாங்கும் பிராண்டுகளாக அபாராமான வரவேற்புடன் விளங்குகின்றன.

குறிப்பாக, அருண் ஐஸ்கிரீம் தென் இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படும் பிராண்டாகத் திகழ்கிறது. அதேபோல், ஆரோக்யா பால் இந்தியாவில்

பெரியதொரு தனியார் பால் பிராண்டாக வளர்ச்சி பெற்றுள்ளது முக்கியமானதாகும். முன்பு ‘அருண் ஐஸ்கிரீம் சந்திரமோகன்’ என்று அழைக்கப்பட்ட இந்த அபாரமான உழைப்பாளி  இன்று ‘ ஆரோக்கிய சந்திரமோகன்’ எனவும் அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இத்தகைய பிரமாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ள அவரின் வெற்றிகளை ஒரு சில வரிகளில் அடக்கிவிட முடியாது. புகுமுக வகுப்பு எனப்படும் பி.யூ.சி – யில் சேர சென்னைக்கு வந்தது முதலே சொந்தத் தொழில் என்கிற இலட்சியக்கனவு அவரை

வழி நடத்தத் தொடங்கியது. வியாபாரக் குடும்பம் என்பதால் உயர் படிப்புகள் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. தந்தை செய்து வந்த காய்கறி வியாபாரத்தில் ஆர்வம் இல்லை. புதிய வியாபாரம் என்ற சிந்தனையில் இருந்த அவரை துணிக்கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்த அவரின் மாமா ‘ஐஸ்கிரீம் தயாரித்து விற்றுப்பார்’ என வழிகாட்டினார்.

சொன்னதோடு இல்லாமல் தனது கடைக்கு அருகிலேயே சிறிய இடத்தையும் வாடகைக்கு பிடித்தும் கொடுத்தார் . கையிலிரு ந்த பணம் 15,000 ரூபாய், வங்கிக்கடன் 21 ஆயிரம் ரூபாயுடன் அருண் ஐஸ் கிரீம் தொடங்கியது. தொழிலில் இறங்கிய பின்னரே தன்னைப் போல் சென்னையில் ஐஸ்கிரீம் விற்பனையில் உள்ளவர்கள் 350 பேர் என்பது சந்திரமோகனுக்கு தெரியவந்தது.

நடமாடும் வண்டி விற்பனை தவிர தன் தயாரிப்புக் கடைக்கு முன்னால் ஒரு கடையைத் தொடங்கினார் அவர் . பரபரப்பான கடைவீதி வியாபாரம் பிரமாதமாக நடத்த முதலாம் ஆண்டில் மொத்த வியாபாரம் 1,50,000 ரூபாய், இலாபம் 40,000 ரூபாய் வெற்றி தந்த நம்பிக்கையில் வளர்ச்சியை ஓராண்டுக்குள் 3 மடங்கு அதிகமாக்கத் திட்டமிட்டார் . தயாரிப்பை நகருக்கு வெளியே தொடங்கினார். விரிவாக்கம், கட்டுமானம், நிர்வாகம் எல்லாமே பெரிதாக இருந்தாலும் அடுத்தாண்டு வெற்றியானது எட்டவே நின்றது. தளராத மனங்கள் எப்பொழுதுமே தோல்விகளிலும் துவள்வதில்லை. நிர்வாகம், திட்டமிடல், விற்பனை என்கிற வகையில் கூடுதல் கவனம் செலுத்தினார் சந்திரமோகன். போட்டியாளர்கள் என அவர் அப்போது எண்ணியது தாசப்பிரகாஷ், ஜாய், குவாலிட்டி போன்ற கம்பெனிகளைத்தான்.

தேடினால்  வாய்ப்புகள் கிடைக்கும் (ஹட்சன்):

“ மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு உங்களுக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்பது அவர் அடிக்கடி குறிப்பிடும் ஒரு வழிகாட்டல். அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இளைஞர்களுடன் நன்கு பழகவும், அவர்களின் மனதை நெருங்கி அறியவும் முடிந்தது. பெரிய ஐஸ்கிரீம் நிறுவனங்கள் பின்பற்றி வந்த நடைமுறை மார்க்கெட் உத்திகளான டிபார்ட் மென்டல் ஸ்டோர்கள், பெரிய ஓட்டல்கள் எல்லாவற்றையும் கடந்து சிந்தித்தார். சிறுவர்கள், இளைஞர்கள் தான் தனது ஐஸ்கிரீம் விற்பனை வளர்ச்சிக்கு ஆதாரமானவர்கள் என உணர்ந்து கொண்டார்.

எனவே தன்னுடைய ஐஸ்கிரீம் விற்பனைக்கான புதிய வர்த்தகத் தளங்கள் இரண்டை அவர் கண்டுபிடித்தார். ஒன்று கல்லூரிகளில் இருக்கும் கேன்டீன்கள்.

மற்றொன்று சென்னைத் துறை முகத்துக்கு வந்து செல்லும் கப்பல்கள் . தினசரிக் கொள்முதல் செய்யும் கேண்டின்கள், துறைமுகங்களில் மொத்தக் கொள்முதல் செய்யும் கப்பல் நிறுவனத்தின் உள்ளூர், ஏஜென்டுகளை குறிவைத்தார். எப்போதும் தரத்திலும் சுவையிலும் தனியிடம் பெற்றிருக்கும் அருண் ஐஸ்கிரீம் தொடக்கத்திலேயே பெற்ற புயல் வேக

வளர்ச்சி இ ப் படித்தான் உருவானது . பிறகென்ன! வெற்றிச் சிகரங்களில் ஏறிக் கொண்டே இருந்தார் சந்திரமோகன் தொடர்ந்து போக்கிங்குகள் , புதிய அறிமுகங்கள், விற்பனை அணுகுமுறைகளை அவர் தொடர்ந்து கொண்டே இருந்தார். அதனால் வெற்றிகள் அவருக்கு வசப்பட்டுக் கொண்டே இருந்தன.

பிரபல நகரங்களில் ‘இன்றும் அருண் ஐஸ்கிரீம் வரும் ‘ என்ற அ றிவி ப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அவர் எட்டிய விற்பனை வளர்ச்சியின் நுணுக்கமான சொயல்பாடும் அத்தகையது . அருண் ஐஸ்கிரீம் சராசரி குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை தருகிறது.

அருண் ஐஸ்கிரீம் பார்லர்களுக்கும் பெயர் ‘அருண் அன் லிமிடெட்’. பிராண்டின் இமேஜைக் காப்பாற்றுவதில் முழுக்கவனம் செலுத்துவதால் ‘அருண்’ ஐஸ்கிரீம் தனியிடம் பெற்றுள்ளது.

அருண் ஐஸ்கிரீமின் வளர்ச்சியை அடுத்து ஆரோக்யா பால், பால் சார் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சியிலும் ஹட்சன் எட்டியுள்ள சாதனைகள் கிராமப்புற வளர்ச்சியையும் உள்ளடக்கியவை. கிட்டத்தட்ட 8,000 கிராமங்களில் இருக்கும் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட பத்து மாவட்டங்களிலும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களிலும் பால் ஷெட்களைக் கொண்டுள்ளது .

 இந்த  நிறுவனம் விவசாயிகளுக்குத் தேவைப்படும். கால்நடை வாங்குவதற்கான வங்கிக்கடன் சேவைகளைப் பெற்றுத்தருதல், பராமரிப்புக்குத் தேவையான வசதிகளுடன் கால்நடை மருத்துவர்கள் மூலம் பராமரித்தல் என பல வகைப்பட்ட உதவிகளையும் அவர்களுக்குச் செய்து வருகிறது. சென்னை தவிர சேலத்திலும் பால் பொருட்கள் சார்ந்த இரண்டாம் தயாரிப்பு மையம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட அளவு தொகையைக் கட்டிவிட்டால், எவ்வளவு வேண்டுமானாலும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்ற அவரின் புதிய போட்டி முறை, அர்ஜூன் அம்மா யாரு என்ற ஆரோக்யா பாலுக்கான விளம்பர உத்தி எல்லாமே அவருடைய வெற்றிகரமான மார்க்கெட்டிங் உத்திகள். அதனால் தான் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அகமதாபாத், அவர்களது மாணவர்களுக்கு நிர்வாக மேலாண்மைப் பாடமாக (கேஸ் ஸ்டடி ஆய்வு) சொல்லித் தருகிறது.

சர்வ தேச பால் வள மேலாண்மை தொழில் நுட்ப  வல்லுநர்கள் பலர் இன்று ஆரோக்யாவின் வளர்ச்சியில் பங்கு கொடுத்துள்ளனர் . அமுலின் பால் பொருட்கள் இந்தியா முழுவதும் இன்று கிடைத்து வருவது போல  ஹட்சன் தயாரிப்புகளும் சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் வலம் வரும் என்கிறார் சந்திரமோகன். பால், பவுடர், வெண்ணெய், ஸ்கிம்டு பால் பவுடர், சமையலுக்கு உதவும் வெண்ணெய், பன்னீர், மோர், அக்மார்க் தரச்சான்று பெற்ற நெய், ரெடி டூ குக் வகைகள், கால்நடைத் தீவன வகைகள் ஹட்சன் அக்ரோவின் வரவேற்பு பெற்ற தயாரிப்புகள்.

தன்னுடைய அனுபவங்களை வைத்து தொழில் முனைவோர்களுக்கு ‘ஹட்சன் அக்ரோ’ சந்திரமோகன் சொல்கிறார். வெற்றி பெற்ற தொழிலையே மீண்டும் செய்ய முயற்சிக்காதீர்கள். அத்தொழிலில் நமக்கென்ன என்ன வாய்ப்பு என கண்டுபிடித்து, போட்டியில்லாத இடத்தில் தொடங்கி வெற்றி பெறுங்கள் என்கிறார் அவர்.

Hatsun agro product Ltd contact details : Door No: 1/20A, Rajiv Gandhi Salai (OMR), Karapakkam, Chennai – 600 097, India. https://www.hap.in/

use search :

ஹட்சன் பால் நிறுவனம் , ஆரோக்கியா பால் விலை இன்று , அருண் வரலாறு

Similar Posts