ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு
ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு

ஒரு ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு தெரியுமா

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று ஆப்பிள். ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு தெரியுமா உங்களுக்கு ஆம் வாசகர்களே இன்றைய பதிவில் ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு, சிறந்த ஆப்பிளை தேர்வு செய்வது எப்படி, ஆப்பிளின் பயன்கள் மற்றும் ஆப்பிள் வகைகள் போன்ற விவரங்களை பார்க்கலாம்.

கலோரி:

ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு  தெரிந்துகொள்வதற்கு முன்பு கலோரீஸ் அப்டினா என்ன தெரிஞ்சிக்கலாம் வாங்க.

நாம் சாப்பிடும் உணவே கலோரி ஆக மாறுகிறது. அதாவது நாம் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு போன்ற சத்துக்கள் செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது. இந்த சக்தியே கலோரி ஆகும்.

உண்ணும் உணவின் வகைகளை பொறுத்து கலோரிகளின் அளவு மாறுபடும்.

பழங்கள் காய்கறிகள் மற்றும் நட்ஸ் என ஒவ்வொன்றிலும் கலோரிகளின் அளவு மாறுபடும்.

ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு :

100 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் இருக்கிற கலோரி அளவு 59 கலோரிஸ் ஆகும். நடுத்தர அளவிலான ஆப்பில் அதாவது 182 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 95 கலோரிகள் உள்ளன. 

இதில் நார் சத்துக்கள் சர்க்கரை உள்ளது. ஆப்பிளில் கொழுப்பு சத்துக்கள் கிடையாது எனவே இதனை அனைவரும் சாப்பிடலாம்.

ஒரு ஆப்பிள்ல எத்தனை கலோரீஸ் இருக்கு

 ஆப்பிளின் கலோரி அளவு அதன் வகை மற்றும் ஆப்பிள்களின் அளவைப் பொறுத்து மாறுபடும்

உதாரணமாக ஒரு பெரிய ஆப்பிளில் சுமார் 110 கல்லூரிகள் இருக்கும். அதே போன்று ஒரு சிறிய ஆப்பிளில் சுமார் 70 கல்லூரியில் இருக்கும்.

பச்சை ஆப்பிள் மற்றும் சிவப்பு ஆப்பிள்களின் கலோரிகளில் அளவு மாறுபடும்.

பச்சை ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்கு :

ஒரு நடுத்தரமான பச்சை ஆப்பிள்ல 95 கலோரிகள் இருக்கின்றன.புரதம், சர்க்கரை, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

ஒரு ஆப்பிள்ல இருக்குற கலோரீஸ் அளவு எவ்வளவு

ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துக்கள்:

ஆப்பிள் பழத்தில் கொழுமியம், உயிர் சத்துக்களான விட்டமின் சி, பி1, பி2 கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் ,கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் அடங்கியுள்ளன.

ஆப்பிள் சாப்பிடும் முறை:

ஆப்பிள் பழத்தை நன்கு கழுவி தோல் நீக்கி சாப்பிட வேண்டும். காலை வேளையில் உணவு சாப்பிட்ட பிறகு அதாவது உணவுக்கு பின் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது.

ஆப்பிள் பயன்கள் :

தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

மாலிக் அமிலம் நிறைந்துள்ள ஆப்பிள் தினமும் சாப்பிடுவதால் தொண்டை, வாய், குடல், பகுதிகளில் உள்ள நுண்கிருமிகள் அழிந்து விடுகின்றன.

ஆப்பிளில் உள்ள விட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எலும்புகளையும் பாதுகாக்கிறது.

ஆப்பிளில் இருக்கக்கூடிய கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவை மேனியை பளபளப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.

 தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும் மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி பச்சை ஆப்பிள் எடுத்துக் கொள்வது சிறந்தது.

கண்களில் ஏற்படும் கண்புரை எனும் நோயை தடுக்க தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடலாம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அதாவது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கொழுப்பினை கரைக்கக் கூடிய பெக்டின் ஆப்பிளில் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து விடும்.

 ஆப்பிளில் உயிர் சத்துக்கள் என்று சொல்லக்கூடிய வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தெரிந்துகொள்வோம் : பல நன்மைகள் தரும் பழங்களில் சப்போட்டாப் பழம்

ஆப்பிள் ஜூஸ் நன்மைகள்:

ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவை எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான தொல்லை நீங்கவும், சுவாசப் பிரச்சினைகள் நீங்க என பல நன்மைகள் ஆப்பிள் ஜூஸில் உள்ளது.

ஆப்பிள்ல எவ்ளோ கலோரீஸ் இருக்குனு உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் நினைக்கிறன்.  இந்த பதிவு உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் :

வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடலாமா?

வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிளில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது இவற்றுடன் பால் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம்.

ஆப்பிள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

உடல்நிலை சரியில்லாத ஒருவரை பார்க்க செல்லும்போது ஆப்பிள் போன்ற பழங்களை வாங்கி செல்கிறோம் ஏன்?. ஆப்பிளில் சளியை கரைக்கக் கூடிய சத்துப் பொருட்கள் உள்ளன. இவை உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *