paruthi paal

பருத்திப் பால் – paruthi paal

paruthi paal – பருத்திப் பால் செய்ய தேவையான பொருட்கள்:


பருத்திக்கொட்டை – 2 கப்
துருவிய தேங்காய் – 1 கப்
வெல்லம் – 1 கப் அல்லது ( கருப்பட்டி 1 கப் )
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
அரிசி ரவை(அரிசி மாவு) – 1 ஸ்புன்
சுக்குபொடி – 1 சிட்டிகை

பருத்திப் பால் செய்முறை ( paruthi paal ):


பருத்திகொட்டையை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பின்னர் பருத்திகொட்டையை அரைத்து பிழிந்து பால் எடுக்க வேண்டும்.பால் எடுத்த பருத்திக்கொட்டையை மீண்டும் ஒருமுறை அரைத்து பால் எடுக்கலாம்.


கொஞ்சம் தண்ணிரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க வைக்கவும் .கொதிக்கும் தண்ணிரில் அரிசி ரவையை( அரைத்த  அரிசி மாவு ) கலக்கி கிண்டவும்.


பின்னர் வடிகட்டிய பருத்தி பாலை அதனுடன் சேர்த்து கொதிக்க விடவும் . நன்கு கொதி வந்தவுடன் வெல்லத்தை அல்லது (கருப்பட்டி) தட்டி அதில் போட்டு கலக்கவும்.


வெல்லம் அல்லது ( கருப்பட்டி) நன்கு கரைந்து கொதிக்கும் போது பொடி செய்து வைத்த ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து இறக்கவும். தேங்காய் துருவலை அதன் மேலே தூவி பரிமாறலாம். சுவையான பருத்திப் பால் தயார்.

வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து பருத்திப் பால் செய்தல் . கருப்பட்டி பருத்தி பால் தயார். ( கருப்பட்டி பருத்தி பால் சுவையாக இருக்கும் )

paruthi paal benefits – பருத்திப் பால் நன்மைகள் :

  • மலச்சிக்கல் குணபடுத்தும்
  • வயிற்று புண்களை ஆற்றும்
  • சளி மற்றும் இருமல் குணபடுத்தும்
  • மிகவும் சத்தான பாணம்

paruthi paal

பருத்தி பால் ( paruthi paal ) in english : Cotton Milk

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

பருத்தி பால் தினமும் குடிக்கலாமா?

பருத்திபால் வாரம் ஒருமுறை குடிக்கலாம். இதில் அதிக நார்ச்சத்து ,விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது..

கர்ப்பிணி பெண்கள் பருத்தி பால் சாப்பிடலாமா ?

கர்ப்பிணி பெண்கள் பருத்தி பால் சாபிடலாம்.

மேலும் படிக்க :

முருங்கைகீரை சூப்

புதிய தமிழ் விடுகதைகள்

வாயு தொல்லை பிரச்சனை நீங்க என்ன செய்ய வேண்டும்

Use Search : மதுரை பருத்திப்பால் , பருத்திப் பால் செய்முறை , பருத்தி விதை பருத்தி பால்


Permalink : https://blogtoday.in/paruthi-paal/

Our Blogspot : https://i5info.blogspot.com/

Similar Posts