புரியாத புதிர் விடுகதைகள்
இந்தப் பதிவில் புரியாத புதிர் விடுகதைகள் பற்றி நாம் பார்க்க போகிறோம். புரியாத புதிர்கள் என்பது கேட்கப்படும் கேள்விகள் சற்று கடினமாகவும் புரியாதது போலவும் தோன்றும். ஆனால் சற்று சிந்தித்தால் புதிர்களுக்கு எளிதில் விடை கண்டுபிடித்து விடலாம். புரியாத புதிர் விடுகதைகளை ஒருவரிடம் கேட்பதால் இது அவர்களின் மூளையை குழப்பமடையவும் செய்யும் மேலும் இவை ஒரு மனிதனின் மூளைத் திறனை சோதிக்கவும் உதவும் மிகவும் குழப்பமான நிலையில் ஒருவரின் சிந்திக்கும் அறிவு திறனும் அவர்களின் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். சரி இனி புரியாத தமிழ் புதிர்கள் விடைகளுடன் பார்க்கலாம்.
Table of Contents
புரியாத புதிர் விடுகதைகள் | Puthir Vidukathai in Tamil
இளைஞன் ஒருவன் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் தரகர் ஒருவரை அணுகினான்.
ஒரு நல்ல நாளில், மூன்று அழகிகளை அவனிடம் அழைத்து வந்தார் தரகர். மூவரும் அவன் எதிரில் வரிசையாக அமர்ந்தனர்.
இளைஞனைப் பார்த்து தரகர் “இம்மூவரில் ஒருத்தி எப்போதும் உண்மையே பேசுவாள். இன்னொருத்தி பொய்யே பேசுவாள். மற்றொருத்தி சில சமயம் உண்மையை பேசுவாள்; சில சமயம் பொய்யும் பேசுவாள். நீ ஒவ்வொருவரையும் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம். அதன் பிறகு நீ விரும்புகிற யாரேனும் ஒருத்தி திருமணம் செய்து கொள்ளலாம்” என்றார்.
இதை கேட்ட இளைஞன் “மூவருமே இணையான அழகிகளாகத்தான் இருக்கின்றனர். உண்மை பேசுபவளே மனம் செய்து கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இப்போது என்ன செய்வது?’ என்று சிந்தித்தான்.
அவனுக்கு அருமையான வலி ஒன்று புலப்பட்டது.
தனக்கு இடபுரத்தில் அமர்ந்திருந்த முதல் பெண்ணை பார்த்து, “உனக்கு அடுத்து அமர்ந்திருப்பவர் யார்?” என்று கேட்டான் உடனே அவள் “உண்மையை பேசுபவள்” என்று பதில் தந்தால்.
நடுவில் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்து “நீ யார்?” என்று கேட்டான். அதற்கு அவள் “நான் சில சமயம் உண்மை பேசுபவள், சில சமயம் பொய் பேசுபவள்” என்றாள்.
பிறகு கடைசியில் அமர்ந்திருந்த பெண்ணை பார்த்து, “உனக்கு அடுத்து இருப்பவர் யார்?” என்று கேட்டான். “அதற்கு அவள் பொய் பேசுபவள்?” என்று பதில் தந்தாள்.
இந்த உரையாடலை கொண்டு உண்மை பேசும் பெண்ணை கண்டுபிடித்த இளைஞன் அவளையே திருமணம் செய்து செய்து கொண்டான்.
உண்மையை பேசுபவள் யார் என்று இளைஞன் எப்படி கண்டுபிடித்து இருப்பான்?
விடை:
உண்மை பேசுபவள் (உ) பொய் பேசுபவர்கள் (பொ) சில சமயம் உண்மை சில சமயம் பொய்யும் பேசுபவள்(சி) இவர்கள் எப்படி மாறி மாறி உட்கார்ந்து இருந்தாலும் அட்டவனையில் உள்ளபடி ஆறு வரிசையில் தான் அமர முடியும்.
வரிசை எண் | இடது | நடு | வலது |
1 | உ | பொ | சி |
2 | உ | சி | பொ |
3 | பொ | உ | சி |
4 | பொ | சி | ஒ |
5 | சி | உ | பொ |
6 | சி | பொ | உ |
மூன்று அழகிகள் பேசிய பேச்சும் எந்த வரிசைக்கு ஒத்து வருகின்றது என்று பார்த்தால் அது ஆறாம் வரிசைக்கு பொருந்துகிறது.
அதனால் அவனுக்கு இடது பக்கம் இருந்தவள் சில சமயம் உன்னை சில சமயம் பொய் பேசுவாள். நடுவில் இருந்தவள் பொய் பேசுபவள் ஆகிறாள். எனவே இளைஞன் வலது பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டான்.
கடின விடுகதைகள் | புரியாத புதிர் விடுகதைகள்
ஒருவனுக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அத்தனையும் சகோதரிகள் உள்ளனர். ஆனால் அதே குடும்பத்தில் ஒரு சகோதரிக்கு எத்தனை சகோதரர்கள் உள்ளனரோ அதில் பாதி எண்ணிக்கையில் தான் சகோதரிகள் உள்ளனர்.
அப்படியானால் அவர்களில் சகோதரர்கள் எத்தனை பேர்? சகோதரிகள் எத்தனை பேர்?
விடை : மொத்தம் ஏழு பேர் நான்கு சகோதரர்கள் மூன்று சகோதரிகள்.
மூளையை குழப்பும் புதிர் விடுகதைகள்
ஒரு ஊரில் ஒருவனுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு தங்கை இருக்கின்றாள். அப்படியானால் அவனுக்கு மிகக் குறைவாக எத்தனை குழந்தைகள் இருக்க முடியும்?
விடை : மொத்தம் ஐந்து குழந்தைகள். முதல் நான்கு மகன்கள், ஐந்தாவது மகள். அவள் நால்வருக்கும் தங்கை ஆகிறாள்.
தெற்கு வடக்காக கட்டப்பட்ட ஆறடி உயரம் உள்ள சுவரின் மீது ஒரு சேவல் அமர்ந்து உள்ளது அதன் தலை கிழக்கு நோக்கியும் பின் பகுதி மேற்கு நோக்கியும் உள்ளது அது இடும் முட்டை எந்த பக்கம் விழும்?
விடை : சேவல் முட்டை விடாது.
மேலும் மூளைக்கு வேலை தரும் புரியாத புதிர் விடுகதைகள் படிக்க